nayanthara

nrd-nayanthara
சிவனேன்னு இருக்க வேண்டியதுதானே? என்று சக ஹீரோக்கள் விக்னேஷ் சிவனின் காதல் குறித்து கடுப்படித்தாலும், சிவதாண்டவத்தில் தனி முத்திரை பதித்துவிட்டார் அவர். யெஸ்… நானும் ரவுடிதான் தியேட்டர்களில் கோலாகல ஹிட்டாகிவிட்டது. ஒரு தேர்ந்த சமையல்காரரின் கைப்பக்குவத்துடன் உருவாகியிருக்கிறது படம். சிரிப்பு, சென்ட்டிமென்ட், ஆக்ஷன், பரபரப்பு, காதல், என்று சுற்றி சுற்றி பிரமிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ். ஆச்சர்யம் நம்பர் ஒன்று, இந்த படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா, ‘மொழி’…
naanum rowdythan-1
போடா போடி படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிற படம் நானும் ரவுடிதான்! தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத். மந்திரம் சொல்ல வந்த ஐயரையே மாப்பிள்ளை ஆக்கிவிட்டால் என்னவென்று தோன்றுவது அதிருஷ்டமா? துரத்திருஷ்டமா? இந்த விஷயத்தில் அப்படியும் ஒரு திருப்பம் நேர்வதாக இருந்தது. யெஸ்… முதலில் இந்த படத்தில் அனிருத்தைதான் நடிக்க வைப்பதாக இருந்தாராம் விக்னேஷ்சிவன். அப்புறம் படம் தனுஷ் கைக்கு போனதும், எல்லாமே ஹைலெவலுக்கு போய்விட்டது. விஜய்…
nayan-vignesh
“இனிமே அந்த பையனோட சுத்துன? அவ்வளவுதான்… உன் கேரியருக்கு மட்டுமில்ல. உனக்கும் சேர்த்து சவப்பெட்டி செஞ்சுருவோம்” இப்படியொரு மிரட்டல் நயன்தாராவுக்கு வந்தபின்தான் அந்த பையனை கைவிட்டு விடும் முடிவுக்கு வந்தாராம் அவர். கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்ட அந்த ‘குண்டாஸ்’ காதலுக்கு அதற்கப்புறமும் ‘முண்டாஸ்’ கட்டுவதற்கு நயன்தாரா என்ன அறியாப்புள்ளையா? உடனடியாக வரிசையில் நிற்கும் இன்னொருவருக்கு சம்மதம் சொல்லிவிட்டார். “அந்த இன்னொன்னுதாண்ணே விக்னேஷ் சிவன்! ” இப்படியொரு வாழைப்பழ காமெடியை ஒரு முடிவுக்கு…
Income
பொதுவாகவே ஒரு பெரிய ஹீரோவின் படம் வெளியாகிற சமயங்களில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். அஜீத்தின் என்னை அறிந்தால் வெளிவருவதற்கு முதல் நாள் கூட, அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை நோட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் அதிகாரிகள் சமயம் பார்த்து உள்ளே நுழைவது ஒன்றும் புதுசு இல்லை. விஜய்யின் புலி படம் நாளை…
Kettapaiyan GV
ஊரே ஒன்று சேர்ந்து கழுவி ஊற்றுவதற்கு ஒரு படம் ரெடியான பின்பும், ஜிவிபிரகாஷ் தப்பித்து வெள்ளையும் சொள்ளையுமாய் வெளியுலகத்தில் நடமாடுகிறார் என்றால், அந்த படத்தின் கலெக்ஷன் எவ்வளவாக இருக்கும் என்று கணித்துக் கொள்ள வேண்டியதுதான். தமிழ்சினிமாவின் உட்சபட்ச ஏ படம் என்கிற அந்தஸ்தை முதல் காட்சியிலேயே பெற்றுவிட்டபடியால், இளசுகளின் கூட்டம் திமிறிக் கொண்டு நிற்கிறது தியேட்டர்களில். கூச்சலும் கும்மாளமுமாக படம் பார்க்கும் அவர்கள், குடும்பத்தோடு அந்த பக்கம் வருவார்களா என்கிற…
nayanthara-latest
அண்மையில் வெளிவந்த மாயா திரைப்படம் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ஹிட்! நயன்தாரா மெயின் ரோலில் நடிக்க, அவரை விட மெயின் ரோலில் நடித்திருந்தன சில பேய்களும் பிசாசுகளும். நெடுஞ்சாலை ஆரிக்கும் இது முக்கியமான படம். தெலுங்கில் இப்படத்தை வெளியிட்டிருந்தவர் பிலிம்சேம்பர் கல்யாண். நமது தமிழ் படங்களுக்குதான் டிமிக்கி என்றில்லை. அவ்வளவு பெரிய அமைப்பின் தலைவரான அவருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டார் நயன்தாரா. எந்த பிரமோஷனுக்கும் தலைகாட்டவில்லை. அதைவிட கொடுமை இப்படத்தின் சக்சஸ்…
Maya-review
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ‘கரண்ட் கட்’ காலம் ஒன்று இருந்ததல்லவா? அந்த காலத்தில் சிந்திக்கப்பட்ட கதையாக கூட இது இருந்திருக்கலாம்! எங்கும் கும்மிருட்டு. ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் லைட்டுங்குகள் படத்திற்கு மேலும் அழகு சேர்க்க, அந்த க்ளைமாக்ஸ் பேய்க்காக காத்திருக்கிற (துர்)பாக்யம் நமக்கு! இறுதிக் காட்சியில் கூட பேயின் அகோர முகத்தை காட்டாமல் அதன் மனசை காட்டி படத்தை முடிக்கையில், ‘பேய்க்கும் உண்டு பெருங்கருணை’ என்ற முடிவோடு நடையை…
nayanthara-reporter
தனி ஒருவனாக இருந்தும் சிரிக்கலாம். அல்லது கூட்டமாக நின்றும் சிரிக்கலாம். ஏனென்றால் விஷயம் அப்படி! ஒரு ரோஜாச் செடி ஜன்னலுக்கு வெளியே பூத்தால் சந்தோஷம். அதுவே ஜன்னலுக்குள்ளும் தலை நீட்டி “இந்தா பூ” என்றால் இன்னும் சந்தோஷம்தானே வரும்? ஆனால் இங்கு வந்தது சந்தோஷமல்ல, எரிச்சலோ எரிச்சல். பின்னணியில் நடந்ததென்னவோ? எதுக்கு பில்டப்? நேரடியாக விஷயத்திற்கு வருவோம். சமீபத்தில் நயன்தாரா நடித்த ஒரு பட விஷயமாக அப்படத்தின் ஹீரோவிடம் பேச…
naanum rowdythan
கோடம்பாக்கத்திலிருக்கும் எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் ஸ்பெஷலாக நாலு நாலு தண்ணி லாரிகளை முன்னேற்பாடாக வைத்துக் கொள்வது உசிதம். ஏனென்றால் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்து ஹீரோக்களுக்கும், டைரக்டர்களுக்கும் வந்திருக்கிற வயிற்றெரிச்சலால், மேற்படி பங்க்குகள் பற்றிக் கொண்டால் கூட ஆச்சர்யமில்லை. எல்லாம் நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதலால் வந்த கேடு. ஊரே பற்றி எறிந்தாலும், தான் பாட்டுக்கு பிடில் வாசித்த நீரோ மன்னனின் அடுத்த அவதாரமாக மாறி, இந்த காதல் வானில் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.…
Actor Simbu and Actress Nayanthara in Idhu Namma Aalu Movie Stills
பழசுகளுக்கு வெள்ளையடிக்கும் காலம் இது போலிருக்கிறது டி.ஆர் பேமிலிக்கு! சிம்புவால் கெட்டுப்போன… விட்டுப்போன… படங்களையெல்லாம் தூசு தட்டி, சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருக்கிறார். வாலு படத்தை எப்படியோ சொந்த பணத்தை இறைத்து ரிலீஸ் செய்துவிட்டார். அது வெற்றியா? தோல்வியா? என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஏனென்றால் அந்த படம் 100 கோடியை வசூலித்தால் கூட சிம்புவின் இழப்பீடுக்கு டேலி ஆகுமா தெரியாது. அதற்கு வாய்ப்பு இல்லை அல்லவா? அதற்கப்புறம் கண்டு கொள்ளாமலே…
nayanthara-GVprakash
இனிப்பான வெல்லக்கட்டிய இத்துப் போன சாக்கு பையில கொட்டிடுவாங்களோ? என்கிற அளவுக்கு அந்த செய்தியை கேட்டு கிறுகிறுத்துப் போயிருந்த அத்தனை மனசுக்கும் ஆயுட்கால நிம்மதி… ஜி.வி.பிரகாஷுடன் ஜோடியாக நடிப்பதாக முதலில் சம்மதம் தெரிவித்த நயன்தாரா, ஒரேயடியாக ஓடிப் போய்விட்டார். இதனால் ஜிவி படுபயங்கர அப்செட்! ஏனிந்த இடர்பாடு? வேறொன்றுமில்லை. கலங்கரை விளக்கத்துல ஏறி பல்ப் துடைக்க ஆசைப்பட்டது கூட தப்பில்லை. ஆனால் அது அதற்கென்று ஒரு வேல்யூ இருக்கிறதல்லவா? இந்த…
santhanam
அவர் படத்தின் ஆடியோ விழா என்றால் கூட அந்த இடத்தில் சந்தானம் இருக்க மாட்டார். பட பிரமோஷன்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர் நடிகைகளில் அஜீத் நயன்தாராவுக்கு முதலிடம் என்றால், அதற்கப்புறம் பளிச்சென கண்ணில் படுகிறவர் சந்தானம் மட்டும்தான். அப்படிப்பட்ட அவரே, தான் நடிக்காத படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார் என்றால், அந்த விழா எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும்? ஆறு மணிக்கு துவங்கப் போகிற விழாவுக்கு ஐந்து மணிக்கே…
nayan
எப்பவுமே சொந்த ஊர் சோன் பப்டிக்கு ருசி அதிகம் என்பதை நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. தமிழ்சினிமாவில் நயன்தாராவுக்கு இருக்கிற மாஸ், வேறெந்த ஹீரோயின்களுக்கும் இல்லை. மார்க்கெட் விஷயத்தில் அவர் ஒரு பொம்பள ரஜினி. இப்பவும் யார் கால்ஷீட் கேட்டாலும் ரெண்டு விரலை காட்டி, கோடியில் சம்பளம் கேட்கிற தில் அவருக்கு இருக்கிறது. கடைசியாய் அவர் நடித்துக் கொண்டிருக்கும் இது நம்ம ஆளு படத்திற்கும், நானும் ரவுடிதான் படத்திற்கும் அவர் பேசிய சம்பளம்…
nayan
“அழுத கண்ணீர் அத்தனையும் அவரை கழுவி ஊற்றவாவது பயன்பட்டதே…” நிலைமையில்தான் இருக்கிறது கோடம்பாக்கத்தின் கொள்ளை பசங்க மனசு! பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே இழுத்து இம்சித்துவிட்டு போகும் பேரழகி நயன்தாராவால், கோடம்பாக்கத்தில் அவரோடு பழகிய எல்லார் கண்களிலும் வெங்காயம் உரித்த எபெக்ட்! அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே… பாடலை ஒலிக்க விட்டுவிட்டு, டேப் ரொக்கார்டரின் முதுகிலெல்லாம் மூக்கை சிந்தி துடைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு போன வாரம் முழுக்க ஒரே…
nayan-vignesh sivan
நயன்தாராவுக்கு இது எத்தனையாவது காதலோ, தெரியாது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் யாரையாவது காதலிக்கும் போதெல்லாம், அதை ஏதோ தேசத்திற்காகவே செய்யப்பட்ட மெகா சைஸ் பூங்கொத்தாக எண்ணி பிரஸ்தாபிக்க ஆரம்பித்துவிடுகிறது மக்கள் மனசு. நானும் ரவுடிதான் பட டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் லேட்டஸ்ட் பூச்சரம் தொடுக்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். ஒருவேளை நெசமா இருக்குமோ, இல்ல… வழக்கம் போல…
thani oruvan
ஒரு அசத்தலான போலீஸ் கதையை உருவாக்கியாச்சு. நெட்டுக் குத்தா வளர்ந்து வெட்டுக் குத்துக்கும் பொருந்துற மாதிரி ஆக்ஷன் ஹீரோ கிடைச்சா அலேக்தான்! கண்களை கண்ட இடத்திற்கும் அலைய விடவில்லை டைரக்டர். கையிலேயே டெபிட் கார்டு இருக்கும் போது பக்கத்துவீட்ல தலையை சொறிவானேன்…? சட்டென்று தன் தம்பியையே படத்தின் ஹீரோவாக்கிவிட்டார் ஜெயம் ராஜா. (அரே படீஸ்… இனி அவர் மோகன் ராஜாவாம்) வழக்கம் போல இந்த முறையும் என் தம்பிகிட்ட கதை…
jeeva salary
காக்காயெல்லாம் மயிலாகிட்டு வருது. இந்நேரத்தில் இன்னும் இறுக்கிக் கொண்டிருந்தால், இருக்கிற இடமும் இழுபறிதான் என்பதை மிக சரியான நேரத்தில் உணர்ந்துவிட்டார் ஜீவா. தேவை… முகமூடி போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் அல்ல. கதைதான் பெரிய பட்ஜெட் என்பதை சற்று தாமதமாக உணர்ந்தாலும், சம்பளமும் கூட அந்த கதைகளுக்கு குறுக்கே நின்றுவிடக் கூடாது என்று நினைத்தாராம். அதன் விளைவாக அவர் எடுத்த அதிரடி முடிவுதான் பல போட்டியாளர்களிடம் உதறலை ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரணமாக…
nayanthara-INA
ஒங்க சண்டையில நான் கொடுத்த ரூவாய மறந்துடாதீங்க என்பது மாதிரி, நிகழ்கால அக்கப் போரில் ஒரு முக்கியமான படத்தை மறந்துராதீங்க என்று குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது வேறு யாருடைய படமும் அல்ல. பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படம்தான். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு இன்னும் ஐம்பது லட்சம் சம்பளம் தர வேண்டுமாம். இரண்டு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி.…
nayan
ஓபாமாகவே இருந்தால் கூட, ‘உட்காரு மச்சி கொஞ்ச நேரம்…’ என்றழைத்து ஒரு கிண்டல் வீடியோவை காண்பித்து டென்ஷன் ஆக்கிவிடுவார்கள் போலிருக்கிறது வாட்ஸ் ஆப் அரக்கர்கள். தமிழக தலைவர்களில் ஆரம்பித்து, சாதா நடிகர்கள் வரைக்கும் கூட இவர்களின் கிண்டல் கேலியிலிருந்து தப்பிக்க முடியாத நிலைமை. அதிலும் இவர்களின் கேலிக்கு ஆளாகி போலீஸ் கம்ளைன்ட் வரைக்கும் போனவர் விஜயகாந்த். அப்படியும் சமாளிக்க முடியலையே! நெக்ஸ்ட்? சமீபத்தில் இவர்களின் ஓவர் அட்ராசிடிக்கு ஆளாகியிருக்கிறார் நயன்தாரா.…
uyire uyire
ஹன்சிகாவும் த்ரிஷாவும் செம ராசியாகிவிட்டார்கள். சமீபத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றே அதற்கு சாட்சி. ஒரே அந்தஸ்திலிருக்கிற இரண்டு ஹீரோயின்கள் இப்படி பழகுவது அவ்வளவு ஈசியான விஷயமல்ல. சுந்தர்சி படத்தில் எவ்வித ஈகோவும் இல்லாமல் இருவரும் சேர்ந்தே நடித்தும் வருகிறார்கள். நயன்தாரா, த்ரிஷாவுக்கு போக வேண்டிய வாய்ப்புகளையெல்லாம் வந்த புதிதில் சூறையாடி வந்த ஹன்சிகாவை, த்ரிஷா தன் நட்பு வளையத்திற்குள் அனுமதித்தது பெரிய விஷயம்தான். அவரைப்போலவே நயன்தாராவும் அனுமதிப்பாரா?…
Page 10 of 12« First...89101112

all news