nadigar sangam

vishal pressmeet
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. இதெல்லாம் சர்வ மங்கள சுப மஸ்துதான்…. பட், நடுவில் நம்மை ஆச்சர்யப்படுத்தியது ஒன்றே ஒன்று. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு சரத் அணிக்குதான் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டவர் அவர். பிறகு எப்படி இந்த திடீர் திருப்பம்? இவரது தன்னிச்சையான நிலைபாட்டை வன்மையாக…
ajith-new
யாராலும் அசைக்க முடியாத இடத்தை சற்றேயல்ல, ரொம்ப ஸ்டிராங்காகவே அசைத்துவிட்டது விஷால் அணி. ராதாரவியின் செல்வாக்கில் செய்யப்பட்டிருந்த முப்பதாண்டு கால நாற்காலியை பிடுங்குவது என்பது அவ்வளவு ஈசியான விஷயமல்லவே? “உலக வரைபடத்தோடு ஒப்பிட்டால், தமிழ்நாடு ஒரு புள்ளிகூட இல்லை. நடிகர் சங்கம் அது கூட இல்லை. ஆனால் அதை உலகம் முழுக்க தெரிய வைத்தது மீடியாதான்” என்று நக்கலாகவும், வருத்தமாகவும் பேசுகிற அளவுக்கு சரத்குமாரை கவலையில் ஆழ்த்தியது மீடியா. அதே…
Naan Sigappu Manithan Press Meet with Vishal, Lakshmi Menon and Iniya
‘பல்லும் பளபளப்புமா இருந்த நடிகர் சங்கம் இப்படி சொல்லும் சொத்தையுமா ஆகிருச்சே’ என்கிற கவலை நடுநிலை வகிக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், இந்த நடிகர் சங்க தேர்தல் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விஷயத்தை புரிந்து கொண்டு ஒதுங்கியே இருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் இந்த போட்டி சொந்தப்பகையா?, பொதுநலப் புகையா? என்பதை பற்றியெல்லாம் வேட்டி சட்டையை மடித்துக் கொண்டு விவாதிப்பதும் தினந்தோறும் நடந்து வருகிறது. திடீரென…
angry simbu
எத்தனை நாள் எரிச்சலோ? கொட்டித் தீர்த்துவிட்டார் சிம்பு. தண்ணீர் ஊற்றி அணைக்கிறேன் பேர்வழி என்று மைக்கை பிடித்த சிம்பு, ராதிகா, இருவரும் பற்றியெறியும் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றிவிட்டு கிளம்பியதுதான் இந்த பரபரப்பான நாடகத்தின் பதை பதைப்பான எபிசோட்! இன்று பிற்பகல் நடிகர் சங்கம் தவிர்த்த திரையுலகத்தின் முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குனர் சங்கம் மூன்றும் அவசரமாக ஒரு விஷயத்தை அறிவித்தது. நடிகர் சங்கத்தில் பிளவு…
Tamil Actor Vishal in Pandiya Nadu Movie Stills
எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும் முதல் அடி நம்மளுதா இருக்கணும் என்கிறது தினத்தந்தியின் ‘சாணக்கியன் சொல்’. எல்லாம் மன ரீதியாக கவுக்குற யுக்திதான். அதைதான் விஷால் விஷயத்திலும் அப்ளை பண்ண பார்த்திருக்கிறார்கள் போலும். கடந்த சில மாதங்களாக நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தை எதிர்த்து மல்லுக்கட்ட ஆரம்பித்த விஷாலுக்கு சினிமாவில் பல மட்டங்களில் இருந்தும் சப்போர்ட். அது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில்தான் வந்து தொலைத்தது…
nayanthara-INA
ஒங்க சண்டையில நான் கொடுத்த ரூவாய மறந்துடாதீங்க என்பது மாதிரி, நிகழ்கால அக்கப் போரில் ஒரு முக்கியமான படத்தை மறந்துராதீங்க என்று குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது வேறு யாருடைய படமும் அல்ல. பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படம்தான். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு இன்னும் ஐம்பது லட்சம் சம்பளம் தர வேண்டுமாம். இரண்டு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கி.…
Kamal-Hassan-Rajinikanth
‘என் சங்கத்து உறுப்பினரை அடிச்சது எவண்டா?’ என்று கேட்பதற்கு மன்சூரலிகான் மாதிரி முத்துக்காளைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தையே தோளில் தாங்க வேண்டிய ரஜினி கமல் அஜீத் விஜயெல்லாம் அந்தர் தியானமாகிவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக நடிகர் சங்கத்தின் நிலைமை இப்படிதான். ஆரம்பத்தில் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாத சிறு நடிகர்கள், மற்றும் மிடில் நடிகர்கள் பலர் இப்போது லேசாக முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்எஸ்கே, எஸ்எஸ்ஆர் போன்ற…
Naan Sigappu Manithan Press Meet with Vishal, Lakshmi Menon and Iniya
திடீரென்று போடப்பட்ட நண்டு பிடியாக இருக்கிறது விஷாலின் மூவ்கள்! நடிகர் சங்க விவகாரத்தில் இளம் நடிகர்கள் கூட்டம் ஒன்றை தன்னுடன் வைத்துக் கொண்டு ஒரு மினி விஜயகாந்தாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். ‘இப்பதான் உன் படமெல்லாம் நல்லா ஓடிகிட்டு இருக்கு. இந்த நேரத்துல அந்த வெற்றிகளை வச்சுகிட்டு இன்னும் இன்னும்னு உயரத்துக்கு போகப் பார்க்காம எதுக்கு இப்படி தேவையில்லாத சிக்கலெல்லாம்? என்கிறார்களாம் விஷாலின் குடும்பத்தில். இருந்தாலும், ‘நடிகர் சங்கத்திற்கு கட்டிடம்…
tv-tfpc
ஒரு முக்கியமான சேனலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிணக்கு, கணக்கு வழக்கில்லாமல் நீளும் போலிருக்கிறது. சேனலும் சும்மாயில்லை. ‘எங்களை தொழில் செய்ய விடாமல் தடுக்க நீங்கள் யார்?’ என்று கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதையடுத்து கடும் கோபத்துடன் கூடிய தயாரிப்பாளர் சங்கம், எழுத்துபூர்வமாக யாரையும் தடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இனிமேல் எந்த நடிகர் நடிகைகளும், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், சினிமா சார்ந்த தொழில்…
vishal-politics
திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் வேண்டும் என்பது சினிமா சூட்சுமம். அதிலும் கட்டுக்கடங்கா ரசிகர்களை வைத்திருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகள் பக்கத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் இன்னும் வேறு வேறு இன்ப துன்பங்களும் வந்து கொண்டேயிருக்கும். அதிலும் முறையாக நடந்து கொண்டால், இன்பமன்றி துன்பமில்லை. இதையெல்லாம் நன்றாக உணர்ந்து வைத்திருப்பதால், சட்டென்று தனது ரசிகர்களை ஒன்றிணைத்து ‘அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி…
Vishal Latest Stills
நாங்களே ஒரு படம் எடுத்து அதில் வரும் வருமானத்தில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம் என்று விஷால் முயற்சிக்கிறார். ஆனால் அந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் முடிவில் இன்று பதிலளித்திருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். இதையடுத்து மீண்டும் நடிகர் சங்க விவகாரம் வெடிக்கும் போலிருக்கிறது. இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத், நடிகர் சங்க விவகாரம் குறித்து பதிலளித்தார். அதில்- நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. நஷ்டத்தில் இருந்த…
Suresh-vijaysethupathi
வளர்ந்தவங்களை வளைக்கிறதுல காட்டுற ஆர்வத்தை, தொலைஞ்சவங்களை தேடுறதுல காட்டுறதில்ல எந்த தயாரிப்பாளரும். இதில் விஜய் சேதுபதி எந்த ரகம்? அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பின்னாலேயே திரிந்து கொண்டிருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ் எந்த ரகம்? முடிஞ்சா கண்டுபிடிங்கப்பா… என்பது போலவே இருக்கிறது இருவரது நியாயமும்! ‘வசந்தகுமாரன்’ படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் நிர்ணயித்து அதில் 10 லட்ச ரூபாயை அட்வான்சாக கொடுத்திருக்கிறார் சுரேஷ். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்,…
vishal
‘நான் வருவேண்டா’ என்று எந்த நேரத்தில் ‘பூஜை’ ட்ரெய்லரில் குமுற ஆரம்பித்தாரோ? அப்போதிலிருந்து அதே வார்த்தையை வெவ்வெறு காரணங்களுக்காக குமுற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் விஷால். சும்மா கிடந்த சூலாயுதத்தை கூர் தீட்டிவிட்டவர்கள் வேறு யாருமல்ல, விஷால் அக்கறையோடு கவனித்துக் கொண்டிருக்கும் நடிகர் சங்கத்தின் பில்லர்கள்தான். நடிகர் ராதாரவியும், நடிகர் சங்கத்தின் பொருளாளருமான கே.என்.காளையும் திருச்சியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு போயிருந்தார்கள். போன இடத்தில் சங்கத்தில் தங்களுக்கு எதிராக செயல்படுகிற…
vishal
பந்தயக் குதிரையை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஷால்! முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது அவரிடத்தில்! ‘காசு… பணம்… துட்டு… மணி… மணி…’ என்று கொண்டாட்ட கூத்தாடுவார் போலவும் தெரிகிறது. வேறொன்றுமில்லை, இப்போதுதான் அவரது ஜாதகத்தில் பணவரவு நேரம். இந்த கொண்டாட்ட நேரத்தில் அதி முக்கிய விஷயமாக அவர் கருதுவது, இன்டஸ்ட்ரிக்கு ஏதாவது நல்லது செய்யணும் என்பதைதான். முதல் கட்டமாக நடிகர் சங்கத்திற்கு பில்டிங் கட்டியே ஆக…
priyanka-gangaru
கோடையில் மழை வந்தால் கண்டிப்பாக இடி மின்னல் இருக்கும் என்பார்கள்! ‘கோடை மழை’ படப்பிடிப்பிலும் அப்படியொரு இடி இடித்ததால் மிரண்டு போயிருக்கிறார் நடிகை பிரியங்கா. இந்த தாக்குதல் ஏதோ இயல்பாக நடந்த விஷயம் போல தெரியவில்லை என்பதுதான் இந்த சம்பவத்திற்கு பிறகு நமக்கு கிடைத்த பரபர பகீர் தகவல்கள். சில வருடங்களுக்கு முன் நடிகை பத்ம ப்ரியாவை இயக்குனர் சாமி தான் இயக்கிக் கொண்டிருந்த மிருகம் படப்பிடிப்பில் ஓங்கி அறைந்ததும்,…
Page 8 of 8« First...45678

all news