kamal

மணிரத்னம், கமல்  ஆசைப்பட்டது  இப்போது 2டி யில்! மணிரத்னம் முயன்று, கமல் ஆசைப்பட்டு, தனியார் தொலைக்காட்சிகளான சிலவற்றின் நாக்கில் எச்சில் ஊற வைத்து… இப்படி ஒருவருக்கும் சிக்காமல் ஓட்டம் காட்டிய கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதை, இப்போது படமாகப் போகிறது. ஆனால் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து ஒரு திரைப்படமாக எடுக்கப் பட வேண்டும் என்றால், விரிந்த தோள்களும் புடைத்த மார்புமாக வந்திய தேவன்கள் கூட கிடைத்து விடுவார்கள். முழுமையாக குறையே இல்லாமல் எடுக்கப்பட வேண்டும் என்றால் அது…
உத்தம வில்லனுக்கு  வில்லனாகும்  தியேட்டர் வட்டாரம்?  கமல் விஷயத்தில் மீண்டும் இழுபறி! ‘வேணாம்டா உங்க நாடும் உங்க அடக்குமுறையும். நான் போறேன்… எங்கயாவது போறேன்… ’ என்று கமல் கையில் ஒட்டியை மண்ணை தட்டிவிட்டு கிளம்பிய நாட்கள் அது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பரபரப்பானது. ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் இந்தியாவை விட்டுப் போறேன்னு சொல்றது எவ்வ்வளவு பெரிய அவமானம் என்று துடித்தார்கள். துவண்டார்கள். நல்லவேளையாக கமல் அந்த முடிவுக்கு வரவில்லை. ஆனால் அவரது வசனம் தந்த வீரியம், காரியமாகி கைநிறைய…
myskin speech
, kamal, lenin, நாட்டிய தாரகை ஸ்வர்ணமுகியை, தெரு முக்குல கரகாட்டம் ஆடக் கூப்பிட்டிருந்தால் கூட இவ்வளவு கோபப்பட்டிருப்பாரா தெரியாது. ஆனால் மகா கலைஞன், ஒரிஜனல் கதை உலகநாதன், ஓடாத படங்களின் ஒப்பிலா டைரக்டர் மிஷ்கினின் படங்களை விமர்சனம் செய்தால் மட்டும், ‘அட போக்கத்த விமர்சகனுங்களே.. வந்து படம் எடுத்து பாருங்கடா’ என்று சவால் விடுகிறார் அவர். ‘டேய் பேச்சை குறைக்கிறீயா இல்லையா?’ என்று பாலா கேட்டு முழுசாக பத்து…
kamal-rajini
இந்த முடிவு தனிப்பட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு படங்கள் வெளிவருகிற போதும், என்னோட ஐ வருது என்று புரளியை கிளப்பி சம்பந்தப்பட்ட படங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறார் அவர். எனவே குறிப்பிட்ட பத்து நாட்களை தவிர, மற்ற நாட்களில் பெரிய படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்ற புதிய நிபந்தனையை விதித்துள்ளது தமிழ் திரைப்பட அமைப்பு. இதையடுத்து சிறு பட முதலாளிகள், மற்றும் ரிலீசுக்கு…
ilayaraaja
‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது பேமிலி. இந்த நேரத்தில் தானே ஒரு படத்தை தயாரித்தால் என்ன என்று வெகு காலத்திற்கு பின் ஆசைப்படுகிறாராம் ராஜா. பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து கொடுக்கதான் அவரை சுற்றி பாலா போன்ற அனுபவ…
kamal
நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்: வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு . தேவர்மகனில் தொடங்கி உன்னைபோல் ஒருவன் வரை பார்த்தாகிவிட்டது உங்கள் பூனூல் முற்போக்குதனத்தையும் அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் என் அப்பன்…
nadigarhalin
கடந்த 48 மணி நேரத்தின் முக்கியமான தலைப்பு செய்தியே கமல்தான். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று க்ளீன் இண்டியா திட்டத்திற்காக களமிறங்கி விட்டார். கிழக்கு தாம்பரத்திலிருக்கும் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்துவதுதான் அவரது முதல் அஜெண்டா. நடந்தது நல்லவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்குமா? அதுதான் இப்போது நாம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். வீடியோவை காண்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=0hMLIcvLX_E
kamal-oldagewoman
ஒருவழியாக இன்று மாடம்பாக்கம் ஏரிக்கரையில் தன் படைபல ரசிகர்களோடு போய் இறங்கிவிட்டார் கமல். முன்னதாகவே அங்கு வந்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கமல்ஹாசனை வரவேற்றார். அந்த ஏரி சுத்தப்படுத்தப்படுவது 25 ஆவது முறையாம். கமல் ஒரு வெள்ளிவிழா நாயகன் என்பதால் இந்த ஏரியை தேர்ந்தெடுத்தார்களோ என்னவோ? இந்த திட்டத்தை இன்று ஒரு நாளுடன் விட்டுவிடாமல் தொடர் முயற்சி செய்தால் நன்றாக இருக்கும். மேலேயிருக்கிற புகைப்படத்தில் ஒரு பாட்டி…
kamal
நாளை காலை ஆறு மணிக்கெல்லாம் மாடம்பாக்கம் ஏரி பக்கமாக யார் போனாலும் கலைஞானி கமல்ஹாசனை பார்க்கலாம். தனது பிறந்த தினமான நவம்பர் 7 ந் தேதியான நாளைய தினத்தில்தான் அவரது முக்கியமான இந்த மாடம்பாக்கம் ஏரி விசிட். இது கிழக்கு தாம்பரம் பகுதியிலிருக்கும் முக்கியமான ஏரி. இந்தியாவை சுத்தப்படுத்தும் நோக்கத்தோடு மோடி செய்த பிரமாண்ட குப்பை தொட்டி திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்துவரும் சினிமாக்காரர்களில் முதலிடத்திலிருக்கிறார் கமல். இந்த ஏரி…
dhanush-kakkisattai
ஒரு ரோஜாவுக்காக தொட்டியையும் சேர்த்து வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் தனுஷ். இப்படி தனுஷ் செய்வதெல்லாம் ஒரு ‘தினுஷ்’ஷாகவே இருக்கிறதே, என்னப்பா மேட்டர் என்றால், எல்லாம் பேஷன்ப்பா பேஷன் என்கிறது ஊர். சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்தான். இவருக்கும் அவருக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்கிற அளவுக்கு ஈகோ முட்டிக் கொண்டு நிற்பதாக ஊர் உலகம் கூறினாலும், டாணாவுக்காக செலவு பண்ணுகிற விஷயத்தில் சற்றும் மனம் தளரவில்லை…
kaaviya-thalaivan-images
‘ஐயய்யோ… அவரா? அவரை வச்சு படம் எடுக்கப்போனா நிம்மதியை தொலச்சுட்டுதான் நிக்கணும்’ என்று பலரும் எச்சரிக்கை செய்தார்களாம் ‘காவியத்தலைவன்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்திடம். அதையும் தாண்டி கதையால் வென்றார் வசந்தபாலன். யெஸ்… காவியத்தலைவன் படத்தின் கதை அப்படி. கல்வெட்டுகளில் காவி பெயின்ட் அடித்து அதில் கட்சி சின்னம் எழுதிவிட்டு போகிற அறிவிலிகள் வாழ்கிற நாடு இது. இந்த நாட்டில் அழிந்து போன நாடகக் கலையை பற்றியும், அதையே உயிராக எண்ணி…
MGR-Sivaji-Rajini-Kamal-Movie
நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா போலீஸ் கமிஷனர் ஆபிசுக்கு வந்தாலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். யாராவது ஒரு நபரை பற்றி புகார் கொடுப்பதுடன் ‘அடித்தான்… உதைத்தான்… பணம் கேட்டான்… பிளாக்மெயில் செஞ்சான்…’ என்று பல்வேறு திகில் கதைகளை ஒரே நேரத்தில் அவிழ்த்துவிட்டு, நாட்டையை என்டர்டெயின்ட்மென்ட்டாக வைத்திருப்பார். அப்படிப்பட்ட அவரே ஒரு படம் தயாரித்தால் அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? கையில் பணமில்லாமலே படம் தயாரிக்க வந்தேன். நண்பர்கள் உதவியோட படத்தையே…
stars
மிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள் முதல்வர் (?) ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் இன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரே மிகப்பெரிய உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் தங்கள் அலுவலகத்தில்…
kamal-kalidoss
தமிழ்சினிமாவின் முதல் பேசும்படம், ‘காளிதாஸ்’. இத்தனை வருடம் கழித்து ‘காளிதாஸ்’ என்ற அதே பெயருடன் ஒரு நடிகர் அறிமுகமாகிறார். ஆனால் இந்த ஒரு ஒற்றுமைக்காக மட்டுமே கவனிக்கப்பட வேண்டியவர் அல்ல அவர். தமிழ்நாட்டில் பிறந்து கேரளாவில் கொடி நாட்டிய நடிகர் ஜெயராமின் மகன் என்பதாலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய இளைஞராக இருக்கிறார் காளிதாஸ். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிற அடுத்தப்படம்…
rajini-kamal-ajith-vijay
கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே…! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று கொட்டிக்கிடக்கும் குவியலுக்கும் அடுத்த லெவலுக்கு போய், மாநாட்டு திடலாகி மைதானமும் ஆகிவிட்டது. ஆறு மாடியில் கட்டிடம் வருது என்றெல்லாம் பேசப்பட்ட நடிகர் சங்க கட்டிடத்தின் புது பில்டிங், இன்னும் அஸ்திவாரம் கூட தோண்டப்படாமல்…
cheran-c2h
சினிமாக்காரர்களுக்கு இது நல்ல நேரமா? இல்ல… கெட்ட நேரமா? என்றே தெரியவில்லை. அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் எங்கு கொண்டு போய் விடும் என்றும் புரியவில்லை. ஆனால் கேட்கும் போது நன்றாகதான் இருக்கிறது. விநியோகஸ்தர்களின் அராஜகத்தை தாங்க முடியாமல் ஞானவேல்ராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கம்பெனியை உருவாக்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள் உதவியே இல்லாமல் நேரடியாக படத்தை தியேட்டருக்கு கொண்டு செல்வோம் என்பது அவர்களின் சூளுரை. விநியோகஸ்தர்கள் மற்றும்…
trisha-vijay
சினிமாவில் ‘நன்றி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பெரிய மரியாதை இருப்பதில்லை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சுட்து… பறந்து போயிட்து…’ என்றெல்லாம் அன்றாட அழுகுணி ஆட்டங்களுக்கு வழி வைக்கிற இதே சினிமாவில் த்ரிஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல் மனசு வந்துவிடுமா என்ன? தமிழ்சினிமாவில் த்ரிஷாவின் சம்பளத்தில் மிக முக்கியமான லிஃப்ட்டாக இருந்திருக்கிறார் விஜய். அஜீத், விக்ரம், போன்ற இளம் ஹீரோக்களுடன் த்ரிஷா நடித்திருந்தாலும், விஜய்யின் ‘கில்லி’யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் தனது சம்பளத்தை…
devadharshini
சமீபத்தில் வாலிப ராஜா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமலிடம், நடிகை தேவதர்ஷினி ஓப்பனாக வாய்ப்பு கேட்டது ரொம்பவே சுவாரஸ்யம். ‘நான் அஜீத் விஜய்கெல்லாம் கூட அக்கா அண்ணியா நடிச்சுட்டேன். ஆனால் கமல் சாரோடதான் நடிக்கல. அண்ணியா கூட நடிக்க தயாராக இருக்கேன். அதுவும் இல்லையா? ஃபன்னியா ஒரு கேரக்டர் கொடுங்க. நடிக்கிறேன். சேர்ந்து நடிக்கணும் அவ்வளவுதான்’ என்று கூறிவிட்டு அமர, தான் பேசும்போது இதற்கு பதிலளித்தார் கமல்.…
kamal-santhanam
சந்தோஷத்துக்கு வரலேன்னாலும் துக்கத்துக்கு வந்து சேர் என்பார்கள். ஆனால் தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, சந்தானத்தின் வாழ்விலும் முக்கிய நபராக விளங்கிய இராம.நாராயணன் மறைவுக்கு சந்தானம் வரவில்லை. லிங்கா படப்பிடிப்பில் இருந்தததாக கூறப்படுகிறது. எங்கோ வெளிநாட்டில் இருந்த கவிஞர் வைரமுத்து, அங்கிருந்தபடியே தன் இரங்கலை தெரிவித்துக் கொண்டதை போல, லிங்கா படப்பிடிப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால், போட மாட்டேன் என்றா சொல்லியிருக்கும் மீடியா? ஆனால் அதுபற்றியெல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்…
kamal-speech
கண்ணா லட்டு திங்க ஆசையா? படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே குரூப் (நடிகர் நடிகைகள் மட்டும்தான், தயாரிப்பாளர் வேறு, இயக்குனரும் வேறு) மீண்டும் அதன் செகன்ட் பார்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் அந்த ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது! ‘தேவி தியேட்டர் ரொம்ப ராசியான தியேட்டர் ’என்று வந்திருந்த விஐபி கள் பரவசப்பட, க.ல.ஆ படத்தின் பாடல்…
Page 7 of 8« First...45678

all news