kamal

stars
மிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள் முதல்வர் (?) ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் இன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரே மிகப்பெரிய உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் தங்கள் அலுவலகத்தில்…
kamal-kalidoss
தமிழ்சினிமாவின் முதல் பேசும்படம், ‘காளிதாஸ்’. இத்தனை வருடம் கழித்து ‘காளிதாஸ்’ என்ற அதே பெயருடன் ஒரு நடிகர் அறிமுகமாகிறார். ஆனால் இந்த ஒரு ஒற்றுமைக்காக மட்டுமே கவனிக்கப்பட வேண்டியவர் அல்ல அவர். தமிழ்நாட்டில் பிறந்து கேரளாவில் கொடி நாட்டிய நடிகர் ஜெயராமின் மகன் என்பதாலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய இளைஞராக இருக்கிறார் காளிதாஸ். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிற அடுத்தப்படம்…
rajini-kamal-ajith-vijay
கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே…! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று கொட்டிக்கிடக்கும் குவியலுக்கும் அடுத்த லெவலுக்கு போய், மாநாட்டு திடலாகி மைதானமும் ஆகிவிட்டது. ஆறு மாடியில் கட்டிடம் வருது என்றெல்லாம் பேசப்பட்ட நடிகர் சங்க கட்டிடத்தின் புது பில்டிங், இன்னும் அஸ்திவாரம் கூட தோண்டப்படாமல்…
cheran-c2h
சினிமாக்காரர்களுக்கு இது நல்ல நேரமா? இல்ல… கெட்ட நேரமா? என்றே தெரியவில்லை. அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் எங்கு கொண்டு போய் விடும் என்றும் புரியவில்லை. ஆனால் கேட்கும் போது நன்றாகதான் இருக்கிறது. விநியோகஸ்தர்களின் அராஜகத்தை தாங்க முடியாமல் ஞானவேல்ராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கம்பெனியை உருவாக்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள் உதவியே இல்லாமல் நேரடியாக படத்தை தியேட்டருக்கு கொண்டு செல்வோம் என்பது அவர்களின் சூளுரை. விநியோகஸ்தர்கள் மற்றும்…
trisha-vijay
சினிமாவில் ‘நன்றி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பெரிய மரியாதை இருப்பதில்லை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சுட்து… பறந்து போயிட்து…’ என்றெல்லாம் அன்றாட அழுகுணி ஆட்டங்களுக்கு வழி வைக்கிற இதே சினிமாவில் த்ரிஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல் மனசு வந்துவிடுமா என்ன? தமிழ்சினிமாவில் த்ரிஷாவின் சம்பளத்தில் மிக முக்கியமான லிஃப்ட்டாக இருந்திருக்கிறார் விஜய். அஜீத், விக்ரம், போன்ற இளம் ஹீரோக்களுடன் த்ரிஷா நடித்திருந்தாலும், விஜய்யின் ‘கில்லி’யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் தனது சம்பளத்தை…
devadharshini
சமீபத்தில் வாலிப ராஜா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமலிடம், நடிகை தேவதர்ஷினி ஓப்பனாக வாய்ப்பு கேட்டது ரொம்பவே சுவாரஸ்யம். ‘நான் அஜீத் விஜய்கெல்லாம் கூட அக்கா அண்ணியா நடிச்சுட்டேன். ஆனால் கமல் சாரோடதான் நடிக்கல. அண்ணியா கூட நடிக்க தயாராக இருக்கேன். அதுவும் இல்லையா? ஃபன்னியா ஒரு கேரக்டர் கொடுங்க. நடிக்கிறேன். சேர்ந்து நடிக்கணும் அவ்வளவுதான்’ என்று கூறிவிட்டு அமர, தான் பேசும்போது இதற்கு பதிலளித்தார் கமல்.…
kamal-santhanam
சந்தோஷத்துக்கு வரலேன்னாலும் துக்கத்துக்கு வந்து சேர் என்பார்கள். ஆனால் தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, சந்தானத்தின் வாழ்விலும் முக்கிய நபராக விளங்கிய இராம.நாராயணன் மறைவுக்கு சந்தானம் வரவில்லை. லிங்கா படப்பிடிப்பில் இருந்தததாக கூறப்படுகிறது. எங்கோ வெளிநாட்டில் இருந்த கவிஞர் வைரமுத்து, அங்கிருந்தபடியே தன் இரங்கலை தெரிவித்துக் கொண்டதை போல, லிங்கா படப்பிடிப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால், போட மாட்டேன் என்றா சொல்லியிருக்கும் மீடியா? ஆனால் அதுபற்றியெல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்…
kamal-speech
கண்ணா லட்டு திங்க ஆசையா? படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே குரூப் (நடிகர் நடிகைகள் மட்டும்தான், தயாரிப்பாளர் வேறு, இயக்குனரும் வேறு) மீண்டும் அதன் செகன்ட் பார்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் அந்த ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது! ‘தேவி தியேட்டர் ரொம்ப ராசியான தியேட்டர் ’என்று வந்திருந்த விஐபி கள் பரவசப்பட, க.ல.ஆ படத்தின் பாடல்…
shruthihaasan_bank
எவ்வளவோ பணம் இருந்தாலும், கடன் வாங்கி கலர் படம் ஓட்டுவதுதான் பணக்காரர்கள் பலருக்கு வாடிக்கை. எல்லாம் ‘டாக்ஸ்’ தந்திரம். அப்படியொரு தந்திரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டாரா? அல்லது நிஜமாகவே பணம் இல்லையா தெரியாது. மும்பை பாந்தரே ஏரியாவில் தனக்கென ஒரு விசேஷ பிளாட் வாங்கினார் ஸ்ருதி. இதை வாங்க வங்கி கடன்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறது. எச் – ல் -துவங்கும் அந்த வங்கியின் அதிகாரிகள், ஸ்ருதியின் பயோ-டேட்டாவை கண்டு மயங்கி…
koopidu tholaivil-2
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்…நான்..நான்.. என்கிற குரல்கள் கோடம்பாக்கத்தில் கேட்கத் தொடங்கியதே பெரும் புரட்சிதான். மணிரத்னம் வெற்றிப்பட இயக்குனர் என்கிற தனது அந்தஸ்தை சமீப காலமாக இழந்து ‘மினி’ ரத்னம் ஆகிவிட்டாலும், அவருக்கான பெருமையை யாராலும் அழிக்க முடியாது. அதிலும் அவர் நேரடியாக இயக்குனர் ஆனவர் என்ற பெருமையை அழிக்கவே முடியாது. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின். இவரும் இயக்குனரான விஷயத்தில் சுயம்புதான். கோச்சடையான் என்ற…
padmabushan kamal
இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்று விஸ்வரூபம் சமயத்தில் கவலை ஏற்படுத்திய கமல், தனது சொல்லை அப்படியே வாபஸ் பெற்றிருக்கிறார். இந்த இனிய மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம், அவருக்கு கிடைத்த பத்மபூஷண் விருது. கடந்த ஆண்டு ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பான சர்ச்சை எழுந்து, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட போது பேட்டியளித்த கமலஹாசன், ‘உலக நாயகன் என்று சொல்வதால், என்னை தமிழகத்தைவிட்டு வெளியேற்றிவிட நினைக்கிறார்கள் என்று கருதுகிறேன். தமிழகம் எனக்கு இல்லாமல்…
Page 6 of 6« First...23456