kamal

kamalhaasan
ஓங்கி ஜோரா ஒரு தடவை கைதட்டிவிட்டு இதை படிங்க மகா ஜனங்களே… ஏனென்றால் இது முதன் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்த அங்கீகாரம். பெருமை, அதற்கப்புறமும் ஏதாவது நல்ல வார்த்தை இருந்தாலும் நாலைந்தை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்! அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்தான் ஹார்வர்ட். இங்குதான் அவ்வப்போது நம்ம இந்தியாவின் கலக ஸ்டார் சுப்ரமணிய சாமி கிளாஸ் எடுக்கிறார் என்றெல்லாம் சொல்வார்கள். (ஐயோ பாவம்… ஸ்டுடன்ஸ்சை எந்தளவுக்கு குழப்பினாரோ) இந்த…
Bala-Barathiraja
சில சப்ஜெக்டுகளை சிலரால்தான் படமாக்க முடியும். ‘சண்டியர்’ என்று கமல் பெயர் வைத்தால், தெரியும் சேதி. ஆனால் அதுவே வேறு யாராவது வைத்தால், “அட தோளுக்கு மேல வேல கிடக்குப்பா” என்று சொந்த வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். கிட்டதட்ட அப்படியொரு நிலைமைதான் ‘குற்றப்பரம்பரை’ கதைக்கும். இந்த கதையை படமாக்குகிற துணிச்சல் பாரதிராஜா, பாலா மாதிரியான இயக்குனர்களுக்குதான் வாய்க்கும். திறமையால் மட்டும் வந்ததல்ல இந்த சுதந்திரம். அதற்கும் மேல ஒண்ணு இருக்கு.…
Kamal-Rajini-Game start
மைசூர் சாண்டல், ஹமாம் சோப்பெல்லாம் போய் இன்னும் சில காலத்தில் எலக்ரானிக் சோப்பு வந்தாலும் வரும் போலிருக்கிறது. டெக்னாலஜியை வளைச்சு கக்கத்துல வச்சுக்கணும் என்கிற ஆசை சமூகத்தின் எல்லா தொழிலிலும் வந்துவிட்டது. இதில் சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன? எந்திரன் படத்தின் மூலம் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விட்ட ஷங்கர், அடுத்து எந்திரன்2 எடுத்து வருகிறார். இதற்காக ஸ்பெஷல் ரோபோக்கள் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாம். அவற்றுடன் ரஜினி பயிற்சி எடுத்து வருவதாகவும்…
2016 predictions
ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங்…
Rajini-Kamal-Ajith-Vijay
கட் அவுட்டுக்கு பால் ஊத்துனவங்க தலையிலும் கைப்பிடியளவு கழிவு மண்ணை அள்ளி வச்சுட்டு போயிருச்சு வெள்ளம்! சினிமாவில் வரும் குறியீடுகளை பற்றி நிறைய அறிந்திருக்கும் ரசிகனுக்கு இந்த ‘மண்டையில மண்’ சமாச்சாரமும் ஒரு குறியீடுதான் என்பது தெரியாமலிருக்காது. ‘உடல் மண்ணுக்கு, உயிர் ஹீரோவுக்கு’ என்று கடந்த பல ஆண்டுகாலமாகவே ஒரு பாலிஸி வைத்திருக்கும் ரசிகர்களுக்கெல்லாம், இந்த வெள்ளம் தந்த மெசேஜ் அசாதாரணமானது! உன் தலைக்குள் என்ன இருந்ததோ, அதை எடுத்துதான்…
kamal current
பல நாட்களாக கரண்ட் இல்லை. கொசுக்கடி, துர்நாற்றம் இவற்றோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது பாதிக்கப்பட்ட சென்னைப் பகுதிகள் பல. இதில் கமல் வீட்டில் கரண்ட் இல்லையென்றால் யாருக்கு துக்கம் வரப்போகிறது? ஆனால் இந்த நேரத்திலும் அந்த ‘கட்’டுக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அவஸ்தைப்பட்ட பலர், ‘குய்யோ முய்யோ’ என்று குமுறி வைக்க, இது கமலை பழிவாங்கும் அரசியல் என்ற கோணத்தில் வண்டி நகர ஆரம்பித்தது. ஏம்ப்பா… எங்க பிரச்சனையே…
kamalrajini
இந்த மழை இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? நேற்று வரை உச்சாணிக் கொம்பில் இருந்த பளபள ஹீரோக்களின் சட்டையை பற்றி இழுத்து தெருவில் இழுத்து விடும் போலிருக்கிறது மக்களின் கோபம். “மக்களுக்கு நிறைய செய்ங்க. ஆனால் விளம்பரம் இல்லாமல் செய்ங்க” என்று ரஜினி உத்தரவிட்டதாகவும், அவரது சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் லாரி லாரியாக உணவு பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி கூறப்பட்ட பல தகவல்கள் பின்னாளில்…
kamal-speech
சிக்குன எலியை சிதைக்காம விடமாட்டேன்னு ஒரு குரூப் கிளம்பறதும், எலிக்கு நடுவுல ஏதாவது ஒரு பூனை கிராஸ் பண்ணினா, அந்த கோரமான துரத்தலை அதை நோக்கி திருப்பறதும் அரசியல்வியாதிகளின் பொழுதுபோக்கு. அந்த அரசியல் (சாக்)கடையில் எதற்காக எண்ணையை வாங்கி, முகத்தில் தடவிக் கொண்டாரோ தெரியவில்லை… கமலின் முகத்தில் இப்போது டன் டன்னாக வழிசல்! சிக்குவது அவருக்கு புதுசு இல்லை. பாதம் பணிந்த பெருமாள் சுவாமிகள் பலர் ‘அடுத்த பிரதமர் ஒரு…
chennai floods
இந்த வெள்ளம் நிறைய பேரின் நிஜத்தை தோலுரித்து காட்டிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா “தனியார் கல்யாண மண்டபங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கலாம். தனியார் முதலாளிகளை உதவி செய்யும்படி பணித்திருக்கலாம். தி.நகரின் குறுமஹா ராஜாக்களிடமிருந்து ஒரு பெட்ஷீட் கூட கிடைக்கவில்லை மக்களுக்கு. அவ்வளவு கூட வேண்டாம். தன் கட்சிக்காரர்களுக்கு “உடனடியாக களத்தில் இறங்குங்கள். நான் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறேன்” என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும். ஒரு அறிக்கை…
welfare fund
இப்படியொரு மழை வரும் என்று மக்களும், இப்படியொரு நிலை வரும் என்று நடிகர்களும் நினைத்தே பார்த்திருக்கப் போவதில்லை. விட்டால் சட்டையை பிடித்து, “எங்கேய்யா நன்கொடை?” என்று கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது மக்களின் கோபம். பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் “சினிமாவுல மட்டும் வாரி வாரி கொடுக்கும் வள்ளல்களாக நடிக்கிற நீங்கள்லாம், நிஜத்தில் எங்கேப்பா போனீங்க?” என்று குடைய ஆரம்பித்துவிட்டார்கள். இனியும் பொறுத்தால் யார் வீட்டு சுவற்றிலும்…
silent
“தமிழ்சினிமாவில் எனக்குதான் அதிக சம்பளம்” என்கிற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா ஹீரோக்களும். இப்படி சம்பளத்தில் போட்டி போடும் நடிகர்களோ, நடிகைகளோ… மக்களுக்கு ஒரு சங்கடம் என்றால், நான் நீ என்று போட்டி போடுகிற நிலைமை சத்தியமாக தமிழகத்தில் வரப்போவதில்லை. (அதற்கும் உதாரணமாக திகழ்வது அண்டை மாநில சினிமாக்கார்கள்தான்) தன் படங்கள் வரும்போதெல்லாம் கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்றிய ரசிகனின் ஊர், ரசிகனின் வீடு, ரசிகனின் உடமை, ரசிகனின்…
Ajith-Vijay-Theri
இரண்டு ஹீரோக்களுக்கு இடையே சண்டை வருவது இன்று நேற்றல்ல, தமிழ்சினிமா எப்போது வசனம் பேச ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே இருக்கிறது. பேஸ்புக்ல அடிச்சுக்குற அத்தனை ரசிகர்களும் போன பிறவியில் தியாகராஜ பாகவதருக்காகவும், கிட்டப்பாவுக்காகவும் எதிரெதிர் திசையில் நின்று பேச்சால் அடித்துக் கொண்டவர்கள்தான். அதற்கப்புறம் அது சிவாஜி எம்ஜிஆர் சண்டையாகி, ரஜினி கமல் சண்டையாக தொடர்ந்து இன்று அஜீத் விஜய்யாகி நிற்கிறது. இப்போது வசதியாக பேஸ்புக், ட்விட்டர். வாட்ஸ்ஆப், போன்ற கர்லா கட்டைகளும்,…
vishal pressmeet
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. இதெல்லாம் சர்வ மங்கள சுப மஸ்துதான்…. பட், நடுவில் நம்மை ஆச்சர்யப்படுத்தியது ஒன்றே ஒன்று. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு சரத் அணிக்குதான் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டவர் அவர். பிறகு எப்படி இந்த திடீர் திருப்பம்? இவரது தன்னிச்சையான நிலைபாட்டை வன்மையாக…
Mayyam
ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் ATM கள் எனி டைம் மணி மிஷின்களா, அல்லது எனி டைம் மர்டர் மிஷின்களா என்று சந்தேகப்படுகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது குற்றமும், கொலைகளும்! ஒரு ATM அறையை வைத்துக் கொண்டு 24 மணி நேரத்தில் அதற்குள் நடக்கும் பரபரப்பான சம்பவம் ஒன்றை படமாக்கியிருக்கிறார் ஆதித்யா பாஸ்கரன். ஆச்சர்யம் ஒன்று- இவர் இப்படத்தை இயக்குவதற்கு முன் ஒரு சினிமா ஷுட்டிங்கையும் பார்த்தவரல்ல! ஆச்சர்யம் ரெண்டு- மிஞ்சி…
kamal-thoongavanam
எங்கு போனாலும் சிம்புவின் புகழ் பாடாமல் ஓய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது இயக்குனர் பாண்டிராஜ். என்ன பண்ணுவது? அவர் வலி அவருக்கு! இன்று சென்னையில் நடந்த ‘தூங்காவனம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு மினி நடிகர் சங்க விழா போலிருந்தது. கமல் பட விழாவில் இதற்கு முன்பு சும்மா வேடிக்கை பார்க்கும் ஆசாமிகளாக கூட கலந்து கொள்ளாத பல நடிகர்கள் அங்கு ஆஜராகியிருந்தார்கள். எல்லாம் கமல் பாண்டவர் அணிக்கு…
kamal-sivakarthikeyan
மதுரை ரசிகர்கள் மட்டும் பிற மாவட்டத்து ரசிகர்களை விட சற்று ஒரு படி மேல்தான்! அது ரஜினி மன்றமாக இருந்தாலும் சரி. குள்ளமணி மன்றமாக இருந்தாலும் சரி. அன்பு காட்டினாலும் ஓவராக காட்டுவார்கள். வம்பு வளர்த்தாலும் ஓவர்தான். நேற்று மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சிவகார்த்திகேயனை, அதே பிளைட்டில் வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரசிகர்களில் ஒருவர் ஓங்கி முதுகில் அடித்த காட்சி ஒன்றுதான் லட்சோப லட்சம் வியூஸ்களை தாண்டி ஓடிக்…
rajini-kamal
நேற்றைய வைரல் ரஜினியும் கமலும்தான். நேற்று மாலை வாட்ஸ்அப்புகளில் உலாவ ஆரம்பித்தது ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக்! அடுத்த வினாடியே காற்று வேகம் மனோ வேகம் என்பார்களே, அதைவிட வேகமாக பரவின அத்தனை ஸ்டில்களும். எல்லாம் ஆனந்த விகடன் இதழ் கடைக்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன் நடந்த பரபரப்பு. இந்த வார விகடன், கபாலி ஸ்பெஷல் போட்டோக்களுடன் வெளிவந்திருக்கிறது. சொல்லி வைத்துக் கொண்ட மாதிரி, அதே நாளின் அழகான…
sivajiganesan
வெறும் அறிவிப்புதான்… அதற்குள் மண்டபம் கட்டி, மாவிளக்கு போட்ட எபெக்டுக்கு ஆளாகி நிற்கிறது தமிழ்சினிமா பிரபலங்கள் மனசு. “சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டித் தருவதாக சொன்ன அம்மாவுக்கு நன்றி நன்றி…” என்று நாலாபுறத்திலிருந்தும் நன்றி மழை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி, கமல்ஹாசன், விஷால் அணி, சரத் அணி, இவர்கள் எல்லாருக்கும் முன்பாக நடிகர் திலகத்தின் மகன் பிரபு என்று அத்தனை பேரும் அறிக்கைகள் மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். சற்று…
kamal
யார் சுயசரிதை எழுதினாலும், அது வெளியே வந்த சில நாட்களுக்கு நாட்டில் 144 போடுகிற அளவுக்கு மன ஒழுங்குக்கு பங்கம் ஏற்படும். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது பற்றிய உண்மையை ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எழுதியது எவ்வளவு சீரியஸ்சான விஷயமோ, அதற்கும் சற்றும் குறைவில்லை பல சுயசரிதைகளின் சீரியஸ் விளைவுகள். அட… நம்ம ஷகிலா கூட சுயசரிதை எழுதிக் கொண்டிருக்கிறார். யார் யார் குட்டுப்பட போகிறார்களோ?…
Maiem-kamal
ஏ.பி.ஸ்ரீதர் என்றால், கூடவே கமல் ஓவியமும் பளிசென மனசுக்கு வந்துவிடும். இதுவரை கமல்ஹாசனை விதவிதமாக வரைந்து மகிழ்ந்தவர்களில் ஸ்ரீதருக்குதான் முதலிடமும்,… முக்கியத்துவமும்! ஏனென்றால் அவையெல்லாம் வெறும் ஓவியங்கள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒரு சங்கதி! அவரே ஒரு படத்தை தயாரித்து, கதை திரைக்கதை அமைத்திருக்கிறார் என்றால், அதற்கு கமலின் ஆதரவு எப்படியிருக்கும்? சும்மா அசத்திவிட்டார் கமல். மொத்த படக்குழுவையும் தனது ஆபிசுக்கு வரவழைத்து, அங்கேயே இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு தம்பதி சமேதராக…
Page 5 of 8« First...34567...Last »

all news