kamal

kamal-thoongavanam
எங்கு போனாலும் சிம்புவின் புகழ் பாடாமல் ஓய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது இயக்குனர் பாண்டிராஜ். என்ன பண்ணுவது? அவர் வலி அவருக்கு! இன்று சென்னையில் நடந்த ‘தூங்காவனம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு மினி நடிகர் சங்க விழா போலிருந்தது. கமல் பட விழாவில் இதற்கு முன்பு சும்மா வேடிக்கை பார்க்கும் ஆசாமிகளாக கூட கலந்து கொள்ளாத பல நடிகர்கள் அங்கு ஆஜராகியிருந்தார்கள். எல்லாம் கமல் பாண்டவர் அணிக்கு…
kamal-sivakarthikeyan
மதுரை ரசிகர்கள் மட்டும் பிற மாவட்டத்து ரசிகர்களை விட சற்று ஒரு படி மேல்தான்! அது ரஜினி மன்றமாக இருந்தாலும் சரி. குள்ளமணி மன்றமாக இருந்தாலும் சரி. அன்பு காட்டினாலும் ஓவராக காட்டுவார்கள். வம்பு வளர்த்தாலும் ஓவர்தான். நேற்று மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சிவகார்த்திகேயனை, அதே பிளைட்டில் வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரசிகர்களில் ஒருவர் ஓங்கி முதுகில் அடித்த காட்சி ஒன்றுதான் லட்சோப லட்சம் வியூஸ்களை தாண்டி ஓடிக்…
rajini-kamal
நேற்றைய வைரல் ரஜினியும் கமலும்தான். நேற்று மாலை வாட்ஸ்அப்புகளில் உலாவ ஆரம்பித்தது ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக்! அடுத்த வினாடியே காற்று வேகம் மனோ வேகம் என்பார்களே, அதைவிட வேகமாக பரவின அத்தனை ஸ்டில்களும். எல்லாம் ஆனந்த விகடன் இதழ் கடைக்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன் நடந்த பரபரப்பு. இந்த வார விகடன், கபாலி ஸ்பெஷல் போட்டோக்களுடன் வெளிவந்திருக்கிறது. சொல்லி வைத்துக் கொண்ட மாதிரி, அதே நாளின் அழகான…
sivajiganesan
வெறும் அறிவிப்புதான்… அதற்குள் மண்டபம் கட்டி, மாவிளக்கு போட்ட எபெக்டுக்கு ஆளாகி நிற்கிறது தமிழ்சினிமா பிரபலங்கள் மனசு. “சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டித் தருவதாக சொன்ன அம்மாவுக்கு நன்றி நன்றி…” என்று நாலாபுறத்திலிருந்தும் நன்றி மழை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி, கமல்ஹாசன், விஷால் அணி, சரத் அணி, இவர்கள் எல்லாருக்கும் முன்பாக நடிகர் திலகத்தின் மகன் பிரபு என்று அத்தனை பேரும் அறிக்கைகள் மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். சற்று…
kamal
யார் சுயசரிதை எழுதினாலும், அது வெளியே வந்த சில நாட்களுக்கு நாட்டில் 144 போடுகிற அளவுக்கு மன ஒழுங்குக்கு பங்கம் ஏற்படும். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது பற்றிய உண்மையை ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எழுதியது எவ்வளவு சீரியஸ்சான விஷயமோ, அதற்கும் சற்றும் குறைவில்லை பல சுயசரிதைகளின் சீரியஸ் விளைவுகள். அட… நம்ம ஷகிலா கூட சுயசரிதை எழுதிக் கொண்டிருக்கிறார். யார் யார் குட்டுப்பட போகிறார்களோ?…
Maiem-kamal
ஏ.பி.ஸ்ரீதர் என்றால், கூடவே கமல் ஓவியமும் பளிசென மனசுக்கு வந்துவிடும். இதுவரை கமல்ஹாசனை விதவிதமாக வரைந்து மகிழ்ந்தவர்களில் ஸ்ரீதருக்குதான் முதலிடமும்,… முக்கியத்துவமும்! ஏனென்றால் அவையெல்லாம் வெறும் ஓவியங்கள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒரு சங்கதி! அவரே ஒரு படத்தை தயாரித்து, கதை திரைக்கதை அமைத்திருக்கிறார் என்றால், அதற்கு கமலின் ஆதரவு எப்படியிருக்கும்? சும்மா அசத்திவிட்டார் கமல். மொத்த படக்குழுவையும் தனது ஆபிசுக்கு வரவழைத்து, அங்கேயே இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு தம்பதி சமேதராக…
kabalirajini
தமிழ்சினிமாவின் நேற்றைய பளபளப்பு கபாலி என்றால், அதற்கு முந்தைய நாள் பளபளப்பு, விஷால் குழுவை ரஜினி கமல் இருவரும் சந்தித்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்ததுதான். ஓட்டு வேட்டைக்காக மட்டுமல்ல, மூத்த நடிகர்கள்…. தமிழ் சினிமாவின் அடையாளங்கள் என்று போற்றப்படும் அவ்விருவரையும் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்றே கிளம்பினார்கள் விஷால் கோஷ்டியினர். இவர்கள் வருகிறார்கள் என்றதும் ரஜினி வீட்டின் கதவு திறந்தேயிருந்ததாம். சுமார் முக்கால் மணி நேரம் விஷால், கார்த்தி,…
actors with bouncers
‘நாங்க ரியல் ஹீரோக்கள் அல்ல, ரீல் ஹீரோக்கள்’ என்று ஒரு விழாவில் விஷால் பேசியிருக்கிறார். இதை அப்படியே பின்புறமாக திரும்பி அவர் பக்கமிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் பேசினால் கூட தேவலாம் என்ற நிலையிலிருக்கிறது யதார்த்தம். கொஞ்ச காலமாக இன்டஸ்ட்ரியில் கடும் பிளாப் கொடுத்து வரும் ஹீரோக்கள் சிலர், தங்களை பெரிய ராஜகுமாரர்களாக எண்ணி கருப்புப் பூனைகள் புடைசூழ வருகிறார்கள் எல்லா இடங்களுக்கும். இவர்களை சுற்றி நின்று கொள்ளும் தடி தாண்டவராயன்கள்,…
thoogavanam
நாலு ரிக்டர் என்றால் தப்பித்துக் கொள்ளலாம். பத்தரை சொச்சம் ரிக்டர் என்றால் என்னாவது? உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் மைதானத்தில் திரும்பிய இடமெல்லாம் விரிசல். எல்லாவற்றுக்கும் காரணமான உத்தம வில்லன், சைலன்ட்டாக பெட்டியில் உறங்கிக் கொண்டிருக்க, உறக்கம் தொலைத்த லிங்குசாமி என்னதான் பண்ணுவார்? அவர் ரிலீஸ் செய்ய வேண்டிய படங்களில் மிக முக்கியமானது ரஜினி முருகன். இதற்கிடையில் லிங்குவை காப்பாற்றும் விதத்தில் கமல் ஒரு படம் உருவாக்கித்தர வேண்டும்.…
ajith-MSV
ஒரு சகாப்தம் முடிந்தது. இனியொரு எம்.எஸ்.வி இந்த மண்ணில் பிறப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனதாலும், நினைவாலும், பழக்கத்தாலும் ஒரு குழந்தையாகவே இருந்தவர் அவர். கவிஞர் வைரமுத்து சொன்னதை போல, அவருக்கு செல்போன் இயக்கத் தெரியாது. டி.வி சேனல் மாற்றத் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் ஆர்மோனியமும் அதில் வழியும் இசையும்தான். யாருக்கும் கெடுதல் நினைக்காத அப்படிப்பட்ட ஒருவரின் இறுதி சடங்குக்கு சென்னையிலிருந்தும் வராத அஜீத்தை என்னவென்று சொல்வது?…
papanasam-sucess
பாபநாசம் படத்திற்கு ஊடகங்களின் உற்சாகமான விமர்சனங்களால், கலெக்ஷனும் எதிர்பார்த்ததை விட பிரமாதமாம்! படத்தின் வெற்றிக்கு ஊடகங்களும் ஒரு காரணம் என்பதால் இன்று அத்தனை பேரையும் சந்தித்து தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார் கமல். அதுமட்டுமல்ல, வெறும் சம்பிரதாயமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே படத்தில் இடம்பெற்ற ஜெயில், வீடு, டீக்கடை ஆகியவற்றை தத்ரூபமாக மேடையில் உருவாக்கி படத்தில் நடித்திருந்த அத்தனை பேரையும் அதே காஸ்ட்யூம்களில் மேடையில் ஏற்றி விட்டிருந்தார். மிக சுவாரஸ்யமான…
robo shankar
இப்படியொரு தலைப்பை படித்ததும் ஆன் த ஸ்பாட்டிலேயே ரத்த வாந்தி எடுக்கிற அளவுக்கு கோபப்படும் வலைதள வல்லூறுகளுக்கு… விஷயம் ரொம்ப சீரியஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் செய்திதான் இது. ஓவியர் ஸ்ரீதர், ‘மய்யம் ’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் சாதாரண படமல்ல. இந்திய சினிமாவில் முதல் முயற்சி. கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களின் திரைப்படம் உருவாக்குகிற ஆசைக்கு தீனி…
papanasam-review
‘என்னதான் இருந்தாலும் த்ரிஷ்யம் மாதிரி வருமா?’ என்று ஒரிஜனலுக்கு ‘மை’யடிக்கிற ஆசாமிகள் தியேட்டருக்கு நாலு பேர் இருந்தாலும், அந்த ஊரு சேச்சி, சேச்சிதான்… நம்ம ஊரு ஆச்சி, ஆச்சிதான் என்று இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். முழு படத்தையும் தோளில் சுமக்கிற கமல், இதுபோன்ற தொந்தரவாளர்களையும் தோளில் சுமக்க துணிந்துதான் பாபநாசத்தில் முங்கியெழுத்திருக்கிறார். சந்தர்பவசத்தில் தன் வீட்டுக்குள்ளேயே ஒரு கொலை விழுகிறது. செத்தவன் ஐ.ஜியின் மகன். கொன்றது…
vani
எப்பவோ வச்ச மருதாணி இன்னைக்கும் கைய விட்டு அகலாதது போலல்ல சிலரது விவாகரத்துகள். அது மருதாணியல்ல. ஆனால் சிவப்புதான். அதுவும் சேர்த்து வச்ச நன் மதிப்புக்கெல்லாம் ஒரேயடியாக ரெட் லைட் அடிக்கிற சிவப்பு. 78 ம் வருஷத்திலிருந்து 88 ம் வருஷம் வரைக்கும் கமலுடன் சேர்ந்து வாழ்ந்த அவரது முதல் மனைவி, இப்போதும் கமல் குறித்து பேசுகிறார். அதே மாதிரி கமலும் அவரை பற்றி பேசுகிறார். ஆனால் எதுவுமே நல்ல…
Papanasam Stills-Images-Photos-Kamal Haasan-Gauthami-Niveda Thom
‘ஆத்தா ஏர்றதுக்கு ஆளா இல்ல?’ என்பது மாதிரி, திரையுலகம் தன் வெறும் வாயை மெல்வதற்கு வசதியாக வாரத்திற்கொரு பிரச்சனை சிக்கிக் கொள்கிறது. இந்த வாரம் சிக்கியவர் கமல்! நேற்று காலை கூடிய திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, அவரது பாபநாசம் படத்தின் வெளியீட்டுக்கு திடீர் தடை விதித்துவிட்டது. இத்தனைக்கும் சென்னையில்தான் இருந்தார் கமல். ஏனிந்த தடை என்பதற்கான காரணத்தை நமது இணையத்தில் நேற்றே எழுதியிருந்தோம். இரவு ஒன்பது மணியளவில் கூட்டம் நடத்திய…
Kamal-Hassan-Rajinikanth
‘என் சங்கத்து உறுப்பினரை அடிச்சது எவண்டா?’ என்று கேட்பதற்கு மன்சூரலிகான் மாதிரி முத்துக்காளைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தையே தோளில் தாங்க வேண்டிய ரஜினி கமல் அஜீத் விஜயெல்லாம் அந்தர் தியானமாகிவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக நடிகர் சங்கத்தின் நிலைமை இப்படிதான். ஆரம்பத்தில் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாத சிறு நடிகர்கள், மற்றும் மிடில் நடிகர்கள் பலர் இப்போது லேசாக முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்எஸ்கே, எஸ்எஸ்ஆர் போன்ற…
uyire uyire
ஹன்சிகாவும் த்ரிஷாவும் செம ராசியாகிவிட்டார்கள். சமீபத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றே அதற்கு சாட்சி. ஒரே அந்தஸ்திலிருக்கிற இரண்டு ஹீரோயின்கள் இப்படி பழகுவது அவ்வளவு ஈசியான விஷயமல்ல. சுந்தர்சி படத்தில் எவ்வித ஈகோவும் இல்லாமல் இருவரும் சேர்ந்தே நடித்தும் வருகிறார்கள். நயன்தாரா, த்ரிஷாவுக்கு போக வேண்டிய வாய்ப்புகளையெல்லாம் வந்த புதிதில் சூறையாடி வந்த ஹன்சிகாவை, த்ரிஷா தன் நட்பு வளையத்திற்குள் அனுமதித்தது பெரிய விஷயம்தான். அவரைப்போலவே நயன்தாராவும் அனுமதிப்பாரா?…
YG Mahendran Greeting Kamal Hassan for Padma Bhushan Award Still
சொப்பன வாழ்வில்… என்று தொடங்கும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலை கேட்ட அந்த கால பெரிசுகள் யாரேனும் இப்போது இருந்தால், இரண்டு நாளைக்கு முன்பே ஒய்.ஜி.மகேந்திரன் நாடகம் நடத்தும் சபா முன் சப்பணக்கால் போட்டு இடம் பிடித்திருப்பார். ஏனென்றால், ஒரு கனமான கருத்தோடு நகைச்சுவை வெடியையும் கொளுத்திப் போடும் நோக்கத்தில் அவர் நடத்தவிருக்கும் நாடகத்தின் பெயர் சொப்பன வாழ்வில். அது மட்டுமல்ல, எம்.கே.டி யின் அந்த பாடலையே இந்த நாடகத்தின் தீம்…
shruthihasan
அப்பா வெண்பா எழுதினால் பிள்ளை ஹைக்கூ எழுதுவதுதானே வேருக்கும் மரியாதை, பூவுக்கும் அழகு! அந்த இலக்கணத்தை அப்படியே பின் பற்றுகிறார் ஸ்ருதி. கமல் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதை பல நேரங்களில் நிரூபித்திருக்கிறார். பாவம்… பிழைத்துப் போகட்டும் என்று பாடல் எழுதும் ஏரியாவுக்குள் தலையிடாமலிருந்தது கமல் மற்ற பாடலாசிரியர்கள் மீது வைத்திருக்கும் தனிப்பட்ட அன்பு. (அவ்வப்போது சில பாடல்களை மட்டும் எழுதியிருந்தாலும்…) தமிழ்சினிமாவில் ஆல் ரவுண்டராக திகழும் கமலுக்கு சற்றும்…
thoogaavanam
Page 4 of 6« First...23456