dhanush

vijaysethupathi-sivakarthikeyan
தாஜ்மகாலுக்கு தங்க முலாம் பூச நினைக்கிற மாதிரி சில விஷயங்கள் அபூர்வமாக நடக்கும் சினிமாவில். படத்திற்கு இன்னும்… இன்னும்… என்று வெயிட் ஏற்றிக் கொண்டே போவார்கள். அப்படிதான் விஜய் சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கான வெயிட்டையும் ஏற்றிக் கொண்டே போகிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். கடந்த சில படங்களாகவே விஜய் சேதுபதிக்கு இறங்குமுகம். இந்த நேரத்தில் அவரது படத்தின் வியாபாரத்தை மேலும் மேலும் கூட்ட வேண்டும் என்றால் மேலும்…
haaris
ஓஹமசீயா… ஓமசீயா என்றொரு பாடலை கேட்பவர்கள் ‘அதென்னடா ஊர்ல இல்லாத லாங்குவேஜ்?’ என்று கலவரப்பட்டிருப்பார்கள். ஒருமுறை வெளிநாட்டுக்கு போயிருந்த ஹாரிஸ் அங்குள்ள விமான நிலைய அறிவிப்பில் கேட்ட வார்த்தைதான் அது. ஏதோ ஒரு டொமஸ்ட்டிக் லாங்குவேஜில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்களாம். அந்த வார்த்தையை அப்படியே கப்பென பிடித்து ஒரு படத்தின் பல்லவியாக வைத்துவிட்டார் ஹாரிஸ். பாட்டு பிச்சுகிச்சி. எல்லாருடைய ரிங்டோனிலும் ஓமஹசீயாதான் அந்த நேரத்தில்…! அதை அப்படியே சுட்டு, தான்…
anehan-dhanush
ஒரு படத்தின் கதை ஹீரோயினை சுற்றியிருக்கிறதோ, இல்லையோ? அந்த படம் சம்பந்தப்பட்ட விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பேசும் அத்தனை பேரும் ஹீரோயினை ஒரு சுற்று சுற்றி வராமலிருக்க மாட்டார்கள். அந்த இனிய நிகழ்வு ‘அனேகன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் நடக்க, ஐயோ பாவம்… அந்த ‘பாப்பா’விக் கிளிக்கு தமிழ் தெரியாது. மும்பையே சேர்ந்த அமைரா தஸ்துர் என்ற அந்த கிளியை சுற்றி ஒரு சின்ன ஹாஸ்ய வட்டம் போட்டார்…
dhanush-kakkisattai
ஒரு ரோஜாவுக்காக தொட்டியையும் சேர்த்து வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் தனுஷ். இப்படி தனுஷ் செய்வதெல்லாம் ஒரு ‘தினுஷ்’ஷாகவே இருக்கிறதே, என்னப்பா மேட்டர் என்றால், எல்லாம் பேஷன்ப்பா பேஷன் என்கிறது ஊர். சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்தான். இவருக்கும் அவருக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்கிற அளவுக்கு ஈகோ முட்டிக் கொண்டு நிற்பதாக ஊர் உலகம் கூறினாலும், டாணாவுக்காக செலவு பண்ணுகிற விஷயத்தில் சற்றும் மனம் தளரவில்லை…
attakaththi dhinesh
‘உயிரையே கொடுத்து நடிப்பேன். ஒரு சான்ஸ் கொடுங்க சார்…’ என்று ஆக்ஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டால் ஐயோடெக்ஸ் அமிர்தாஞ்சன் செலவே ஆயிரங்களை தொடும். ‘டெடிக்கேஷன் சார் டெடிக்கேஷன்…’ என்று உடம்பு முழுக்க அடிவாங்கி உள் காயத்தோடு நடமாடுகிற ஹீரோக்களில் சின்ன ஹீரோ பெரிய ஹீரோ வித்தியாசமே இல்லை. நல்ல மாஸ்டர் கிடைத்தால் அடியின் அளவு சற்று சுமாராக இருக்கும். அதுவே கத்துக்குட்டி மாஸ்டர் என்றால், கட்டு நிச்சயம்! சரி…
dhanush-sivakarthi
‘என்னதான் பர்சனல் பாலிட்டிக்ஸ் என்றாலும் அண்ணன் தனுஷ் இப்படி பண்ணியிருக்கக் கூடாது’ என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறப்போவது நிச்சயம். ஏனென்றால் கிடைக்கிற தகவல்கள் அப்படி! ‘நானும் அவரும் அப்படியேதான் இருக்கோம். ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை மூட்டிவிட நினைக்கிற எல்லாருக்கும் ஏமாற்றம் நிச்சயம்’ என்று தனுஷும் சிவகார்த்தியேனும் தோளில் கைபோட்டுக் கொண்டு கூவி கூவி மறுத்தாலும், உள்ளுக்குள் ஓடும் ‘அண்டர் கரண்ட்’ ரொம்பவே ஆபத்தாக இருக்கிறது. தனுஷின்…
simbu and Vijay Sethupathi
‘தனுஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கிறார்!’ இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வந்ததும் பலருக்கும் தலை சுற்றாத குறை! அது ஹேஷ்யமான தகவல்தான் என்றாலும் நம்ப முடியவில்லை டைப். ஏன்? ஒருகாலத்தில் ரெண்டு சட்டை ஒரு பட்டன் என்றிருந்தவர்கள்தான் இருவரும். பட்டன் அறுந்து சட்டை தெறித்த கதையை நாடே அறியும். ஆனால் வயது தந்த பக்குவத்தாலும், வாழ்க்கை தந்த சொப்பனத்தாலும் ஒன்று சேர்ந்தார்கள் இருவரும். அவ்வப்போது பார்ட்டி, அட்டகாசமான ச்சியர்ஸ்…
karthi-kv anand
நடிகர் கார்த்தியின் கிராஃப் ஏறுமுகமும் இறங்குமுகமுமாக அல்லாடிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கும் மெட்ராஸ் திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகத்தை சேர்ந்த பலரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் அதிர்ஷ்டம் ஆள் வைத்து அழைத்திருக்கிறது கார்த்தியை. எப்படி? வெற்றிப்பட இயக்குனரான கேவி.ஆனந்த் (இதில் மாற்றான் மட்டும் ஹி..ஹி..) இயக்கி வரும் படம் அநேகன். தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின்…
boby simha
ஜிகிர்தண்டா படத்தில் வில்லனாக நடித்ததிலிருந்தே பாபி சிம்ஹாவை ஹீரோவாக்கி பார்க்க துடிக்கிறார்கள் பல இயக்குனர்கள். கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளுக்கெல்லாம் இப்படி ஒரே ராத்திரியில் ஹீரோ இமேஜை ஊட்டிவிட்டு நல்ல நடிகர்களை காலி பண்ணும் இது போன்ற இயக்குனர்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதுதான் ஆச்சர்யம். அதுக்குள்ளே ஹீரோவா? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே என்று சொல்ல வேண்டிய சிம்ஹாவும், நடக்கட்டும்… என்று கழுத்தில் மாலை போட்டுக் கொள்ள தயாராகிவிட்டார். அந்த சந்தோஷத்தில் செய்த…
vijay sethupathy
சொல்லுகிற வாக்கு பலித்தால் அவருக்கு கரிநாக்கு என்பார்கள். விஜய் சேதுபதிக்கு சரியான (கோழிக்)கறிநாக்கு போல! சொன்னது நடந்து விட்டதே? விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ‘நீங்க யாரையாவது கடத்தணும்னா யாரை கடத்திட்டு போவீங்க?’ என்றொரு கேள்வி. யோசிக்காமல் பதில் சொன்னார் விஜய் சேதுபதி. ‘கண்டிப்பா நயன்தாராவைதான்’ என்று. அதற்கப்புறம் அவரிடம் இது குறித்து கேட்ட மீடியாக்களிடம், ‘சும்மா தோணுச்சு சொன்னேன். அதுக்கு முன் பின் அர்த்தமெல்லாம் கற்பிச்சிராதீங்க’ என்றார். ம்ஹும்… இனி…
dhanush rajini
தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இப்போது மேலும் ‘வொண்டர் ’ ஆகியிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ கலெக்ஷன் சுமார் நாற்பது கோடியையும் தாண்டிப் போயிருக்கிறது. தனது சறுக்கலை எள்ளி நகையாடிய அத்தனை பேருக்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் தனுஷ். ஒரு படம் வெற்றியா, தோல்வியா? அதன் கலெக்ஷன் எவ்வளவு என்பதையெல்லாம் வைத்து மனிதர்களை தீர்மானிப்பவரல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு பிடித்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர் எங்கிருந்தாலும் வரவழைத்து பேசிவிடுகிற குணம் அவருக்குண்டு. ரஜினிக்கும்…
RAJINI-ASHWARYA
கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ படத்தின் ‘எடிட் வெர்ஷன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ என்கிறார்களே…. அது எந்த நேரத்தில்? அந்த பிள்ளைகள் பெற்றோரின் பெருமையை காப்பாற்றும் போதுதானே! அந்த வகையில் இந்த படத்தை வெகுவாகவே ரசித்து பாராட்டினாராம் ரஜினி. அதுமட்டுமல்ல, நிஜமாகவே அவருக்கு படம் பிடித்திருந்ததாம். அந்த இனிப்பான நேரத்தில்தான்…
shamitab
பிரபல இந்திப்பட இயக்குனர் பால்கி இயக்கும் ‘ஷமிதாப்’ படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் ஆக பெருமையாக அமிதாப்பும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பதையெல்லாம் ஊர் உலகம் நன்கு அறிந்திருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் மனதை கொள்ளை கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிற ஷமிதாப் கதை, இங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதுதான் வியப்பு. இங்கிருந்து என்றால்…? எய்ட்டீஸ் தமிழ்சினிமாவிலிருந்து! அதுவும் நம்மால் பலமுறை கிசுகிசுக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயம்தான்…
rajini-kamal-ajith-vijay
கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே…! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று கொட்டிக்கிடக்கும் குவியலுக்கும் அடுத்த லெவலுக்கு போய், மாநாட்டு திடலாகி மைதானமும் ஆகிவிட்டது. ஆறு மாடியில் கட்டிடம் வருது என்றெல்லாம் பேசப்பட்ட நடிகர் சங்க கட்டிடத்தின் புது பில்டிங், இன்னும் அஸ்திவாரம் கூட தோண்டப்படாமல்…
dhanush-siva
‘பற்றியெறியுது ஊரு, பச்சத் தண்ணி இருக்குதா பாரு… ’ என்று பற்றி எரிகிற தீயை அணைக்கிற வேலைகளில் இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு முறையும் இவருக்கும் தனுஷுக்கும் பிரச்சனை என்று என்று செய்திகள் வரும்போதெல்லாம், அப்படியெல்லாம் எதுவும் இல்ல. எப்பவும் அவர் எனக்கு மரியாதைக்குரியவர்தான் என்று சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார். சில நேரங்களில் ட்விட்டரில் வந்து கூட பதில் சொல்கிறார். அப்படியிருந்தும், ரெண்டு பேருக்கும் நடுவில் டயரை கொளுத்திப் போட்டு…
dhanush vip
நாடு முழுக்க பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது வேலையில்லா பட்டதாரி. ஆனால் வேறொரு இடத்தில் இதே படம் உறவுகளுக்கு நடுவில் குண்டு வைத்திருப்பதாக கூறுகிறது கோடம்பாக்கத்தின் குறுகுறு டைம்ஸ்! படத்தில் சாதாரணமாக ஹீரோ பஞ்ச் அடிப்பது போல ஒரு டயலாக் வந்தால் கூட இது அந்த ஹீரோவை குறிக்குமோ, இந்த ஹீரோவை குறிக்குமோ என்று பூதக்கண்ணாடி போட்டு புரளி கிளப்பி வருகிறது உலகம். இந்த பொல்லாத உலகத்திற்கு இன்னும் கொஞ்சம் தீனியை…
ajith-surya-dhanush
அதி தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, ஆவரேஜ் ரசிகர்கள் கூட இல்லையென்றால் ஒரு ஹீரோ கண்டிப்பாக ஜீரோதான். இந்த உண்மையை அவ்வப்போதுஆணி அறைந்து நிரூபித்து வருகிறது காலம். இப்போதெல்லாம் எந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாக்கள் என்றாலும், மேல் மாடியை ரசிகர்களுக்காக ஒதுக்கிவிடுகிறார்கள் ஹீரோக்கள். பேசும்போது அவர்களை நோக்கி அண்ணாந்து பார்த்துக் கொண்டே பேசுகிறார்கள். தனியார் தொலைக்காட்சிக்காக கவரேஜ் செய்ய வரும் ஒளிப்பதிவாளர்கள், ‘அண்ணேய்… இங்க பார்த்து பேசுங்க, இல்லேன்னா நார்மலா…
amitash
‘வேலையில்லா பட்டதாரி‘ படத்தில் தனுஷை முறைத்துக் கொண்டே திரியும் இந்த டீன் ஏஜ் வாலிபர்தான் அமிதாஷ். ஹீரோவுக்கு இணையான ரோலில் வந்தாலும் ப்யூர் வில்லன்! பில்டிங் கான்ட்ராக்ட் மோதல்தான் பிற்பாதி கதையை நகர்த்திக் கொண்டு செல்லும். அந்த பிற்பாதியில் நீக்கமற நிறைந்திருக்கும் அமிதாஷுக்கு இந்த படத்தில் நடிக்கும் யோகம் வந்தது எப்படி? அதுவும் முதல் படமே ஹிட் என்றால் எப்படியிருக்கும். வானத்திற்கும் பூமிக்குமாக குதித்துக் கொண்டிருக்கிறார் இவர். ‘ஹீரோவா நடிக்கணும்னு…
Jigarthanda-Movie
இம்மாதம் 25 ந் தேதி வெளியாவதாக இருந்த ‘ஜிகிர்தண்டா’ கடைசி நேரத்தில் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு இந்த தகவல் தயாரிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ஹீரோவான சித்தார்த்துக்கும், டைரக்டரான கார்த்தி சுப்புராஜுக்கும் இந்த தகவல் அவர்கள் மூலம் தெரியவர, இருவருமே காச் மூச் ஆகியிருக்கிறார்கள். பின்னணியில் நடந்தது என்ன? பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன்தான் ஜிகிர்தண்டா…
dhanush_VIP
பல வருட இடைவெளிக்கு பிறகு பால் குடம் வழிகிறது தனுஷின் மார்க்கெட்டில். ‘வேலையில்லா பட்டதாரி’ திரையிடப்பட்ட இடமெல்லாம் தீபாவளியாகியிருக்கிறது. கலெக்ஷனும் தாறுமாறாக குவிகிறது. இது போதாதா? நேற்றிரவே கூட்டாளிகளுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடிவிட்டார் தனுஷ். அந்த பார்ட்டியில் பேசப்பட்ட… இல்லையில்லை கோபப்பட்ட மிக முக்கியமான விஷயம் எது? தனது படத்தை அன்டர் எஸ்டிமேட் செய்த சகோதரர்கள் பற்றிதானாம் அந்த கோபம். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு போட்டியாக களம் இறங்கிய படங்கள்…
Page 13 of 14« First...1011121314

all news