dhanush

Trisha-nayanthara
ஊருக் கண்ணு, ஒறவுக் கண்ணு, ஓரக் கண்ணு, சாரக் கண்ணு எல்லா கண்ணும் இப்போது விக்னேஷ்சிவன் மீதுதான். நயன்தாராவை ரகசியக் கல்யாணம் செய்து கொண்டார்…. இந்துவாக இருந்தவர் அவருக்காக கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டார்… என்று இந்த புது இயக்குனரை சுற்றி சுற்றி ராட்டினம் விட்டுக் கொண்டிருக்கிறது ஊர். அவருக்கு படம் கொடுத்து காதலிக்க ஒரு வழியையும் ஏற்படுத்திய தனுஷ் மட்டும், நடு ஹாலில் உட்கார்ந்து கொண்டு ‘நாசமாப் போக’ என்று…
dharmadurai
முன்னோர் பெருமையை மூட்டை கட்டியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள் இளம் ஹீரோக்கள். ஏதோ, தமிழ்சினிமாவில் தலைப்பு வைக்க அவ்வளவு பஞ்சம் என்பதை போல, ரஜினி நடித்த தலைப்பை தேடி தேடி பிடுங்குவதும் அவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. அட, பழைய தலைப்பை எப்படியோ போராடி வாங்குகிறார்களே, அற்காக அந்த பழையை பெருமையை பீட் பண்ணுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இருந்தாலும் இந்த டைட்டில் ‘ஹன்ட்டிங்க்’ தொடர்வதால்,…
Actor STR at 7up Dance for me Final Stills
சிமென்ட் தரையில் வெந்த நெல்லை விதைப்பதும் ஒன்று! செல்வராகவனும் சிம்புவும் சொன்ன நேரத்தில் ஷுட்டிங்குக்கு வருவதும் ஒன்று! வருஷக்கணக்கில் படத்தை எடுப்பதும், அப்படி எடுக்கிற படத்தை தான் மட்டுமே ரசித்தால் போதும் என்று நினைப்பதும் செல்வாவின் பிடிவாதங்களில் ஒன்று. கனவோடும் பணத்தோடும் வந்த பல தயாரிப்பாளர்களை ஓட ஓட விரட்டிய செல்வராகவனின் லேட்டஸ்ட் முயற்சிதான் கான்! (கானகம் என்பதன் சுருக்கம்தான் இந்த கான்) சிம்புதான் இந்த படத்தின் ஹீரோ என்றதுமே,…
naanum rowdythan
கோடம்பாக்கத்திலிருக்கும் எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் ஸ்பெஷலாக நாலு நாலு தண்ணி லாரிகளை முன்னேற்பாடாக வைத்துக் கொள்வது உசிதம். ஏனென்றால் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்து ஹீரோக்களுக்கும், டைரக்டர்களுக்கும் வந்திருக்கிற வயிற்றெரிச்சலால், மேற்படி பங்க்குகள் பற்றிக் கொண்டால் கூட ஆச்சர்யமில்லை. எல்லாம் நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதலால் வந்த கேடு. ஊரே பற்றி எறிந்தாலும், தான் பாட்டுக்கு பிடில் வாசித்த நீரோ மன்னனின் அடுத்த அவதாரமாக மாறி, இந்த காதல் வானில் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.…
goundar
காமெடியின் அடையாளம் கவுண்டமணி! இன்று எந்த சேனலை திருப்பினாலும், டி.வி பொட்டியெல்லாம் அதுவாகவே நகர்ந்து கொள்கிற அளவுக்கு உதைத்துக் கொண்டிருக்கிறார் கவுண்டர். நிலக்கரியின் அருமை வைரமாகும்போதுதான் தெரியும் என்பதை போல, ஒரு காலத்தில் அடிக்கிறாரு… உதைக்கிறாரு… என்று அவரை குறை சொன்ன வாயெல்லாம் இன்று, “கவுண்டரை போல வருமா?” என்று பேச ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில் சொல்லி வைத்த மாதிரி எல்லா ஹீரோக்களுக்கும் “எனக்கு கவுண்டமணி அண்ணன் கூட நின்னு…
actors with bouncers
‘நாங்க ரியல் ஹீரோக்கள் அல்ல, ரீல் ஹீரோக்கள்’ என்று ஒரு விழாவில் விஷால் பேசியிருக்கிறார். இதை அப்படியே பின்புறமாக திரும்பி அவர் பக்கமிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் பேசினால் கூட தேவலாம் என்ற நிலையிலிருக்கிறது யதார்த்தம். கொஞ்ச காலமாக இன்டஸ்ட்ரியில் கடும் பிளாப் கொடுத்து வரும் ஹீரோக்கள் சிலர், தங்களை பெரிய ராஜகுமாரர்களாக எண்ணி கருப்புப் பூனைகள் புடைசூழ வருகிறார்கள் எல்லா இடங்களுக்கும். இவர்களை சுற்றி நின்று கொள்ளும் தடி தாண்டவராயன்கள்,…
dhanush
“மலை ஆட்டை கொடுத்தா கூட சொளையா உரிச்சு தின்ருவாய்ங்க போலிருக்கு… தின்னட்டும் தின்னட்டும். ஆனால் அவங்களையெல்லாம் அழைச்சுட்டு வர்ற தம்பி ரெண்டு இட்லிக்கு மேல தொட மாட்டேங்குது..’‘. என்று தனுஷ் குறித்து டரியல் ஆகுது தயாரிப்பாளர்கள் வட்டாரம். வேறொன்றுமில்லை. தனக்கு பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை தனுஷே நியமித்து வைத்திருக்கிறார். கூட்டத்தில் எல்லாரும் கையை நீட்டி, ‘ஒரு ஆட்டோகிராப்.. ப்ளீஸ்’ என்பதால்தான் இந்த பாதுகாப்பு அரண். அதுவும் இந்த செல்ஃபி கலாச்சாரம்…
sathish
காமெடி சதீஷ் சிவகார்த்திகேயனின் குட் புக்கில் இருப்பவர். அது மட்டுமல்ல, சமீபத்தில் சிவா வீட்டு கிரஹப்ரவேசத்திற்கு அழைக்கப்பட்ட சிலரில் ஒருவர் சதீஷ். அப்படியென்றால் இவருக்கும் அவருக்குமான நட்பில் எந்தளவுக்கு க்ரீன் லேம்ப் வெளிச்சம் அடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படியாப்பட்ட சதீஷுக்குதான் இப்போது இருதலைக் கொள்ளி நிலைமை என்கிறது ஃபீல்டு. தனுஷும் சிவகார்த்திகேயனும் ஒரு காலத்தில் திக்கோ திக் பிரண்ட்ஸ். இப்போது அந்த பிரண்ட்ஷிப்பே திக் திக் என்றாகிவிட்டது.…
dhanush-paravai muniyamma
யார் சிறந்த மனிதாபிமானியோ, அவர் திசை நோக்கி வணங்குவோம்… என்று யாராவது கிளம்பினால், தனுஷ் நிற்கும் திசையை வணங்கலாம். ஏனென்றால் இன்று அவர் செய்திருக்கும் உதவி காலத்தினார் செய்த சிறு உதவியல்ல. மிக மிக பெரியது. சிங்கம் போல குரல் உயர்த்தி பாடிய நாட்டுபுற பாடகி பரவை முனியம்மா படுத்த படுக்கையாக கிடக்கிறார். பெரும் துயரத்திலிருக்கும் அவரை மீட்டெடுக்கும் சக்தி கணிசமான நிதி இருந்தால் மட்டுமே சாத்தியம். விஷால் ஐந்தாயிரமும்,…
dhanush
கதை கையளவு என்றால், அந்த கதையை சுமக்கிற பேக்ரவுண்ட் தோள் அளவு என்ற விகிதாச்சாரத்தில் படமெடுப்பவர் பிரபுசாலமன். மைனாவுக்கு முந்தைய பிரபுசாலமனை இப்போது கூட யாரும் சிலாகிப்பதில்லை. ஆனால் மைனாவிலிருந்து அவரது வேகம் ரயில் வேகம்… புயல் வேகம்…. கதைக்களம் என்கிற ஸ்டைலையும் பின்பற்ற ஆரம்பித்ததும் அவர் மைனாவிலிருந்துதான். அந்த அழகான குரங்கணி லொக்கேஷனும் அவரோடு சேர்ந்து கதை சொன்னதை யாரும் மறந்துவிட முடியாது. அதற்கப்புறம் கயல்! ரெண்டே ரெண்டு…
maari-review
‘இந்த படம் தர லோக்கலு… உங்களுக்கெல்லாம் அதன் வாசனையை அனுபவிக்கிற அளவுக்கு மூக்கு ஸ்டிராங்கா இல்ல’ என்று ஒற்றை வரியில் விமர்சகர்களின் மூக்கை உடைக்கிற பக்குவத்திற்கு இந்நேரம் வந்திருப்பார் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன்! கலர் கலர் சட்டை… விதவிதமான பஞ்ச்…. விக்கலெடுக்க வைக்கும் கிக்குகள்… இதெல்லாம்தான் தர லோக்கலு என்று நம்புகிறவர்களுக்கு, பாலாஜிமோகனின் இந்த மாஸ், மணக்க மணக்க கிண்டிய ‘பொடிமாஸ்’தான். ஆனால் மற்றவர்களுக்கு? கல்யாணத்துக்குதான் கெட்டி மேளம்,…
maari
‘டங்கா மாரி ஊதாரி… புட்டுகினே நீ நாறி’ யிலிருந்தே ரி- மேல் காதலாகி கிடக்கிறாரோ என்னவோ? நாளைக்கு ரிலீசாகவிருக்கும் தனுஷின் புதுப்படத்தின் பெயரும் மாரி. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி? வாயை மூடிப் பேசவும்… என்ற இரண்டே படங்கள்தான். தமிழ்சினிமாவின் உருப்படியான இயக்குனர்களில் ஒருவராக்கிவிட்டது அவரை. இருந்தாலும் ஆக்ஷன் படங்களை இயக்கும்போதுதான் ஒரு டைரக்டருக்கு அடுத்த பரிணாமம் கிடைக்கிறது என்று நம்பியிருக்கலாம்… அவரது மூன்றாவது படமான…
kakka-tv
அண்மையில் திரைக்கு வந்து தியேட்டர்களை கொண்டாட வைத்திருக்கும் படம் ‘காக்கா முட்டை’. யாரும் எதிர்பாராத விதமாக இந்த படத்தைக் காண கொத்து கொத்தாக தியேட்டருக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். கைதட்டல்களும் விசிலும் பறக்கிறது. பொதுவாக அவார்டு திரைப்படங்களை தியேட்டர்களில் யாரும் சீண்டுவதேயில்லை. அந்த பெருமை முதன் முறையாக காக்கா முட்டைக்குதான்! இந்த படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும், படத்தை தயாரித்த இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் இருவருக்கும் கூட பாராட்டுகளை குவித்துக்…
kakka muttai review
இடது கையில உட்கார்ந்திருக்கிற கொசுவை வலது கை வந்து அடிப்பதற்குள் சம்பந்தப்பட்ட கொசு, அதே ஸ்பாட்டில் ஏழெட்டு முட்டைகள் விட்டு குஞ்சு பொறித்திருந்தால், அதுதான் நாம் இத்தனை காலமும் பார்த்துக் கொண்டிருக்கும் அவார்டு சினிமாவின் லட்சணம்! படத்தில் வரும் கேரக்டர்கள் நடக்க, படுக்க, பல்லு விளக்க என்று எல்லாவற்றையும் நிஜமாகவே செய்து கொண்டிருப்பார்கள். இப்படி அவார்டு சினிமாவின் சூத்திரங்கள் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்தான் இந்த காக்கா முட்டையும் வந்திருக்கிறது.…
sivakarthikeyan
கொழுத்து ராவு காலத்தில் கல்யாணம் வச்சுக்கலாம் என்று எந்த பெற்றோராவது சொன்னால், புள்ள அவங்களுடையது இல்லேன்னு அர்த்தம்! ஆனால் தனது தயாரிப்பில் உருவான ‘காக்கி சட்டை’ படத்தை, கொழுத்த எக்சாம் டைமிலும், வேல்ர்டு கப் டைமிலும் ரிலீஸ் செய்ய வைத்தவர் சாட்சாத் தனுஷ்தான்! அவருக்கு வெறுப்பு யார் மீது? அப்பவே இப்படியொரு கேள்வி எழுந்தது. என்னவோ புண்ணியம், தனுஷின் எண்ணம் பலிக்காமல் அந்த படம் ஓடு ஓடென்று ஓடி, படத்தை…
kakka
‘கொடி கட்டி பறக்குதடா, காலம் குடிசைக்கு பொறக்குதுடா… வாடா, குப்பத்து ராஜா’ என்பவரில்லை நம்ம மணிகண்டன்! ஆனால் அவரே இயக்கி அவரே ஒளிப்பதிவு செய்த ‘காக்கா முட்டை’ படம் சென்னை குடிசைவாழ் பகுதி மக்களை பற்றியது. இப்படியொரு கதையை எழுத வேண்டும் என்று முடிவெடுத்தார். அதை எழுதியும் முடித்துவிட்டார். அதற்கப்புறம்தான் அவருக்குள்ளிருந்த சிக்ஸ்த் சென்ஸ் கேள்வி கேட்டதாம்… ப்ரோ, குப்பத்துக்கே போகாமல் அவங்க லைஃப்பை எப்படிய்யா எடுப்பே? என்று. அதற்கப்புறம்…
vai raja vai-review
புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு புலம்ப வைக்குதே! ‘யம்மாடி… நீங்க படிச்ச டுடோரியல் காலேஜ்ல டைரக்ஷனை இன்னும் நல்லா படிச்சுட்டு வந்திருக்கலாம்ல?’ பல படங்களில் சந்தானத்தோடு மல்லு கட்டுவாரே, விஜய் டி.வி சாமிநாதன்? அவரை இந்த படத்தில் அவ்வளவு அடக்க ஒடுக்கமாக காட்டுகிறார்கள்.…
vai raja vai
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் வை ராஜா வை படம் மே 1 ந் தேதி வெளியாகிறது. இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு ரகசியத்தை காத்து வருகிறார் ஐஸ்வர்யா. ‘ப்பூ… இது என்ன அவ்ளோ பெரிய ரகசியமா?’ என்று படித்த பிறகுதானே சிரிக்க முடியும்? இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறாராம் எஸ்.ஜே.சூர்யா. நரி இடப்பக்கம் போனாலென்ன, வலப்பக்கம் போனாலென்ன? மேல விழுந்து புடுங்கறது நிச்சயம் என்கிற அளவில்தான் இருக்கிறது…
dhanush-phone
கோட் சூட் கோபிநாத் மீது கொலை வெறியோடு இருக்கிறது மருத்துவர்கள் வட்டாரம். தேவையில்லாமல் மக்களின் பணத்தை பிடுங்குவதாக அவர் மருத்துவர்களை குற்றம் சாட்டியதால் வந்த கோபம் இது. அந்த குறிப்பிட்ட எபிசோட் அடங்கிய ‘நீயா நானா’ நிகழ்ச்சியை இப்போதும் விமர்சித்து ஃபேஸ்புக்கில் குமுறுகிறார்கள் ஏராளமான டாக்டர்கள். இப்போது இவர்களின் கோபம் இன்னும் இரண்டு ஆக்டர்களின் மீது திரும்பினால் ஆச்சர்யமில்லை. ஏன்? மருத்துவமனைக்கு வரும் சாதாரண நோயாளிகளை கூட படுக்கையில் தள்ளி,…
anegan
பள்ளம் எப்போ விழும்? பாய்ஞ்சு எப்படி நிரப்பலாம்? என்றே காத்திருப்பார்கள் போலிருக்கிறது. பொங்கலுக்கு ஐ வருவது கஷ்டம்தான் என்கிற தகவல் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இதையடுத்து ஐ படத்திற்காக போடப்பட்ட தியேட்டர்களை மடக்கி தங்கள் திரைப்படங்களை அங்கு வெளியிட்டுவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள். இதில் அனேகன் முதலிடத்தில் இருக்கிறது. எப்படி? ஐ படத்தின் சிட்டி வெளியீட்டு உரிமையை வாங்கியிருப்பதே அனேகன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ்…
Page 12 of 14« First...1011121314

all news