dhanush

DhanushVote
“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே கருக வச்சுருவானுங்க” என்று நினைத்தார் போலும். எனக்கு ஷுட்டிங் இருக்கு என்று கூறிவந்த கமல், எப்படியோ அடித்து பிடித்துக் கொண்டு வந்து ஓட்டு போட்டுவிட்டார். இந்த தேர்தலில் எந்த மாதிரியானவர்கள் ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறீங்க என்ற…
Dhanush-Rajini
இதை அனுபவம்னு சொல்றதா? தொழில் பக்தின்னு சொல்றதா? திறமைன்னு சொல்றதா? இப்படியொரு முக்கூட்டு குழப்பத்தை ரசிகர்களுக்கு அளித்து அவர்களை திடுக்கிட வைத்திருக்கிறார்கள் ரஜினியும் தனுஷும். அப்படியென்ன நடந்துவிட்டது? கபாலி படத்திற்கு டப்பிங் பேச வந்த ரஜினி, மளமளவென இரண்டே நாளில் பேசி முடித்துவிட்டு நடையை கட்டினார். இந்த வேகம் வேறு எந்த ஹீரோக்களுக்கும் இல்லை என்றது இன்டஸ்ட்ரி. எல்லா டயலாக்குமே சிங்கிள் டேக்கில் பேசி முடித்துவிட்டு கிளம்பிவிட்டார் ரஜினி. பொதுவாக…
Hansika-TOI
மக்களுக்கு பிடித்த நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், திடீரென ஆட்டத்தை கலைத்து தனுஷுக்கே வெற்றி என அறிவித்த அந்த ஆங்கில நாளிதழ் பற்றி ஜி.வி.பிரகாஷ் போட்ட ட்விட், சினிமா ரசிகர்களிடைய பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில்தான் இன்னொரு பொல்லாப்பு. அதே போல நடிகைகளுக்கும் இன்னொரு லிஸ்ட் போட்டது அந்த நாளிதழ். நயன்தாரா த்ரிஷாவில் ஆரம்பித்து நேற்று வந்த நண்டு சிண்டுவெல்லாம் இடம் பிடித்திருந்த அந்த லிஸ்ட்டில் ஹன்சிகாவின் பெயர்தான் இல்லை.…
Samuthirakkani
சமுத்திரக்கனியின் ‘அப்பா’ என்ற படம் இன்னொரு காக்கா முட்டையாக பெருமை தேடித் தரும் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். முழு படத்தையும் எடுத்து முடித்துவிட்ட சமுத்திரக்கனி, இதற்கு இளையராஜா இசையமைத்தால்தான் சரியாக இருக்கும் என்று அங்கு போனாராம். வெறும் பின்னணி இசை மட்டும் போதும். படத்திற்கு பாடல்களே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த சமுத்திரக்கனியிடம், ராஜா ஓரிடத்தை சொல்லி “அந்த இடத்தில் மட்டும் ஒரு பாட்டு வச்சுப்போம்” என்று சொல்ல அப்ஜக்ஷன் ஏது? இப்போது…
GvPrakash-Vijay
ஹீரோவாக அவதாரம் எடுத்த பின்பு ஜி.வி.பிரகாஷுக்குள் இருக்கிற பைட் மாஸ்டர் அவ்வப்போது தலையெடுத்து, “அடிக்கட்டுமா? உதைக்கட்டுமா?” என்று கேட்பார் போலிருக்கிறது. இருந்தாலும் இந்த முறை அவர் கோபப்பட்டத்தில் நியாயம் இல்லாமலில்லை. ஒரு பிரபல ஆங்கில நாளேடு ‘இந்த வருடத்தின் விரும்பத்தக்க நடிகர் யார்?’ என்ற கேள்வியுடன் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பெரும்பாலான வோட்டுகள் விஜய் என்றே வர, அவரை சந்தித்து இது தொடர்பாக ஒரு பேட்டியையும் எடுத்துவிடலாம் என்று…
StarCriket Vijay
கடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம் விஜய்க்கு. இந்த வாரம்தான் தெறி திரைக்கு வந்திருக்கிறது. படம் தொடர்பான தொலைக்காட்சி பிரமோஷன்களுக்கும் சரி, படம் வெளியாவதற்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கும் சரி. விஜய் வரவேயில்லை. நிலைமை இப்படியிருந்தாலும், பேசியவர்களின் லைனுக்கு வந்த விஜய், “முயற்சி பண்ணுறேன்” என்று…
Star Criket -Rajini kamal
சாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது. திருவாளர் பொதுஜனங்கள் என்று சொல்லப்படுகிற (?) ஒரு குரூப் தொடர்ந்து இந்த நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராக பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வேலை பார்த்ததன் விளைவு நேற்று அப்பட்டமாக தெரிந்தது. நட்சத்திர கிரிக்கெட் நடந்த ஸ்டேடியத்தின் உள்ளே பல கேலரிகள் காலி! இருந்தாலும்…
prakashraj-kishore
ஆடுகளம், விசாரணை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட சுமார் பத்து படங்களுக்கு எடிட்டராக பணி புரிந்திருப்பார் கிஷோர். அதற்குள் அவரை காலம் கொண்டு போய்விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் அவரது அப்பா தியாகராஜன் அன்றாட பிழைப்புக்கே அவஸ்தை படுகிற நிலைமை. அவ்வப்போது தனுஷும் வெற்றிமாறனும் சிறிய அளவில் உதவி வந்தாலும், கிஷோருக்கு பயணம் படத்தில் பணிபுரிந்த வகையில் மூன்றரை லட்சம் சம்பள பாக்கி தர வேண்டியிருக்கிறதாம் பிரகாஷ்ராஜ். இந்த…
Dhanush Vetrimaran
விசாரணை படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் தயாரிப்பாளர் அவர்தானே? அதனால்தான் இந்த மகிழ்ச்சி. இது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் அவர். தனுஷ்- சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும் , இப்படைப்பு மிக முக்கிய இடத்தை பெறும் என்பது. அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற…
ashwarya Dhanush
எந்த காலத்திலும் ரஜினியின் புகழையும் திறமையையும் அவரது பிள்ளைகளால் முந்தவே முடியாது என்றாலும், ஐஸ்வர்யாவின் பன்முக திறமை பல நேரங்களில் வியக்க வைப்பதாகவே இருந்திருக்கிறது. “நான் ரஜினி பொண்ணுடா…” என்ற கோதாவே இல்லாமல் சினிமாவில் சொந்த திறமையால் ஜெயிப்பது மிக மிக கடினம். அதை அசால்ட்டாக செய்திருக்கிறார் அவர். எல்லாரும் வியக்கக்கூடிய மின் காந்தம் ஒன்றின் மகளாக இருப்பதே ஒரு விதத்தில் சவுகர்யம். இன்னொரு விதத்தில் பெருத்த அசவுகர்யம். இவ்விரண்டும்…
kodi
அரசியலை நையாண்டி செய்யும் ஆயிரம் படங்கள்தான் வரட்டுமே? அதற்காக ஒரு ரசிகனும் ஜீவா ஆக மாட்டான். (ஐ மீன் கொட்டாவி விட்டு கொல்ல மாட்டான்) எல்லா படங்களையும் ரசித்து சிரித்துவிட்டு போக வைக்கும் அரசியல் நையாண்டி படங்களை லாவகமாக கையாள்வதில் மறைந்த இயக்குனர் மணி வண்ணனுக்கு நிகர் அவரே. அதற்கப்புறம் அவர் பெயரை சொல்வது மாதிரி ஒரு படம் வரப்போகிறதென்றால் அது தனுஷின் கொடியாக இருக்கக் கூடும் என்கிறது சினிமா…
dhanush
யாருடனும் ஒட்டுவதில்லை, எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்றெல்லாம் அஜீத் பற்றி விமர்சனங்கள் வந்தாலும், இன்டஸ்ட்ரியின் இண்டு இடுக்குகளை கூட அறிந்து வைத்திருக்கிறார் அவர். நாள்தோறும் நடக்கும் தகவல்கள் அவரது காதுகளுக்கு செல்லாமல் இருப்பதில்லை. தனுஷின் கிராப் என்ன, சிம்புவின் பிளாப் என்ன, ஆர்யாவின் உயரம் என்ன, விஷாலின் வேகம் என்ன என்று எல்லாவற்றையும் அவதானித்து வரும் அவர், தனது மனைவியின் தங்கை ஷர்மிலி வந்து, “தனுஷுடன் நடிக்க ஒரு ஆஃபர்…
Rajini Film Tittles
யானைக்கு போர்த்துற அம்பாரித் துணியை பூனைக்கு போர்த்தினால் என்னாகும்? பூனைக்கும் மூச்சு முட்டும்! பார்க்கிறவர்களுக்கும் சிரிப்பு தாங்காது. ஆனால் இதையெல்லாம் புரியாத பூனைகள் ரஜினி, எம்ஜிஆர் மாதிரியான காலத்தால் வெல்ல முடியாத சூப்பர் ஸ்டார்களின் படத் தலைப்புகளை வாங்கி தன் படத்திற்கு வைத்துக் கொள்கிறார்கள். எம்ஜிஆர், ரஜினி என்று தேடுகிற போது கூகுளும், யு ட்யூபும் நிஜமான விபரத்தை சொல்ல முடியாமல் திணறி இந்த சின்னப் பையன்களின் விபரங்களை காட்டும்…
Dhanush-Trisha- Kodi
ஏறுமுகத்தில் இருந்த தனுஷுக்கு தங்க மகன் திரைப்படத்தின் ரிசல்ட், சத்தியமாக தங்கம் இல்லை. பித்தளையைவிடவும் கீழே! அப்படத்தின் தோல்வி தனுஷை ரொம்பவே உஷாராக்கிவிட்டது. உடனே துவங்குவதாக இருந்த அவரது அடுத்த படமான ‘கொடி’ படத்தின் ஷுட்டிங்கை தள்ளி வைத்ததோடு திரைக்கதை, வசனங்களை மீண்டும் பட்டி பார்க்க சொல்லியிருந்தார். தனுஷும் இன்னும் சில அனுபவசாலிகளும் இணைந்து ஒரு வழியாக அப்படத்தின் திரைக்கதையை செப்பனிட்டு விட்டார்கள். ஆனால் வசனத்தை படித்த தனுஷ்தான் பயங்கர…
Aniruth-Rajini
முளைக்கணும்னு முடிவு பண்ணிட்டா, மூடியாவது, வேலியாவது? அனிருத்தின் பீப் பாடலுக்கு பிறகு “அவ்வளவுதான் தம்பி…” என்ற முடிவுக்கு வந்த கோடம்பாக்கம் அசால்ட் ஆறுமுகம் மாதிரி, அசால்ட் அனிருத்தும் போல என்ற முடிவுக்கு வந்திருக்கும் இந்நேரம். முன்னைவிட படு ஸ்பீடாக இருக்கிறார் தம்பி. அந்த படத்திலிருந்து கழற்றப்பட்டார், இந்தப்படத்திலிருந்து கழற்றப்பட்டார் என்ற தகவல்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு, புதுப்புது படங்களாக அதுவும் முன்னணி இயக்குனர்களின் படங்களாக சைன் பண்ணிக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட்டாக கவுதம்…
Gautham menon
இருக்கிற சேனல்லேயே பாதி பேருக்கு ஒழுங்கா சம்பளம் வர்றதில்ல. இதுல இவரு வேறயா? என்று சிலர் அலுத்துக் கொள்ளக் கூடும். அந்தளவுக்கு விபரம் இல்லாதவரா கவுதம்? இவர் தொடங்கவிருக்கும் இந்த சேனல் யூ ட்பில் மட்டும் வருமாம்! வரட்டும்… வரட்டும்… இதிலென்ன விசேஷம்? ஒவ்வொரு வாரமும் இவரே விஐபிகளை அழைத்து பேட்டியெடுப்பார். அதற்கு பெயர் காபி வித் கவுதம்! தனது முதல் எபிசோட் மங்களகரமாக இருக்கட்டும் என்று நினைத்திருக்கலாம். ஆந்திராவிலிருக்கும்…
jayamravi-suseendran
விதை வைக்கும் போதே விலை வச்சாலும், சந்தைக்கு போகும் போதுதான் சறுக்கும். வழுக்கும்! விவசாயத்திற்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் அதே சூத்திரம்தான். இது சில நேரம் ஆத்திரத்தை கிளப்பினாலும், தொழில் நடக்கணுமே சாமீய்…? ‘‘சிவகார்த்திகேயன் சம்பளத்தை ஏத்திட்டாரு. என் கம்பெனியெல்லாம் அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு வளரல…” என்று மீடியாவில் பேசி ஜாடையாக குத்துகிற தனுஷும் சரி, பாண்டிராஜும் சரி. அவரவர்கள் வாங்கிய முதல் பட சம்பளத்தையா இப்போதும் வாங்குகிறார்கள்?…
Visaranai-Movie Review
‘இதுதாண்டா போலீஸ்’ என்ற கதைகளும், ‘இதுவும்தாண்டா போலீஸ்’ என்ற கதைகளும் தமிழில் மட்டுமல்ல, சகல மொழிப் படங்களிலும் சகஜம்! ஆனால் அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில் சிக்கி அநியாயமாக செத்துப் போகும் மூன்று கூலிகளின் வலியை அப்படியே மனசுக்குள் இறக்கி வைத்த வகையில் இந்த விசாரணை, விசா‘ரணம்’! டைரக்டர் வெற்றி மாறனுக்கு ஒரு பூ ‘விலங்கு’ பார்சேல்…! பார்க்கில் படுத்துறங்கி, பக்கத்து கிராமத்தில் வேலை பார்த்து வரும் தினேஷை போலீஸ் அள்ளிக்…
prabu soloman
மைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபுசாலமன். தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்த அவரை சந்தித்தோம்… · புதுமுகங்கள் என்கிற தாரக மந்திரம் தளர்ந்து போனது ஏன் ? அந்த நினைப்பு எப்போதும் எனக்கு உண்டு…சில கதைகளின் களம் புதுமுகங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சில கதைகளில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படும். இப்போது…
siddhu
“அட … நானே என்னைய சொல்லிக்கிட்டேங்க” என்று சொல்கிற வரைக்கும் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இன்று சித்தார்த் போட்ட ஒரு ட்விட்டர் மெசேஜால் பற்றிக் கொண்டு எரிகிறது வலைதளம். வேறொன்றுமில்லை. “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்கிற ஒரு தெருநாய்க்குக் கிடைக்கணுமுன்னு எழுதி இருந்தால் அதை யாராலும் மாத்த முடியாது..” இதுதான் சித்தார்த்தின் ட்விட். கருத்தில் பிழையில்லை. ஆனால் போட்ட நேரம்தான் பொல்லாத நேரமாகிவிட்டது அவருக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசு…
Page 11 of 14« First...910111213...Last »

all news