arya

aambala
‘அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்’ என்று விஜய்யின் அப்பாவே விஷாலை புகழ்கிற அளவுக்கு இருக்கிறது அவரது செயல்பாடு. எப்படி? இன்று ‘ஆம்பள’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும் அது. சுந்தர்சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ‘ஆம்பள’ படம் எதிர்வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ‘ஒரு படம் துவங்கும் போதே, அந்த படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவிப்பது சாதாரண விஷயம் இல்ல. அதுக்கெல்லாம் ஒரு தில்லு…
vishal
‘நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போமே’ என்று கிளம்பிவரும் ஒரு கூட்டம். அப்படி கிளம்பிய ஒரு கூட்டம்தான் சிசிஎல் என்று சொன்னால் கூட தவறில்லை. அல்மோஸ்ட் சினிமாவில் மார்க்கெட் போனவர்கள் மட்டுமே கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் விஷால் ஆர்யாவெல்லாம் உள்ளே வந்ததுதான் ஒரே மர்மம்! இருந்தாலும் வந்த கடமைக்கு தேமே என்று பேட்டை பிடித்துக் கொண்டு நிற்காமல் நிஜமான அக்கறையோடு மேட்சில் பிய்ச்சு உதறிய…
arya
‘ஆஹா… இவரல்லவோ ஹீரோ’ என்கிற பாராட்டை அவ்வப்போது தட்டிக் கொண்டு போவதில் ஆர்யாவுக்கு நிகர் ஆர்யாவே! ‘சம்பள பாக்கியை இப்பவே வச்சாவணும். இல்லேன்னா படம் வெளியில வர்றதுக்கு நானே முட்டுக்கட்டை போட்ருவேன்’ என்று பல ஹீரோக்கள் பலம் காட்டுவது கோடம்பாக்கத்தின் சாபக்கேடு. இதையெல்லாம் சமாளித்துதான் ரத்தக்கண்ணீர் வடித்து படத்தை வெளிக் கொண்டு வருகிறார்கள் ஒவ்வொரு தயாரிப்பாளரும். மீகாமன் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்குக்கும் அப்படியொரு நிலை. மதுரை பிரமுகர் ஒருவர் கடனுக்காக…
ajith-vijay-bike
Harley Davidson! நடிகர் விஜய் வாங்கியிருக்கும் புது பைக்தான் இது. பெருகி வரும் டிராபிக் காரணமா, அல்லது ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே என்றா, தெரியவில்லை. இப்போதெல்லாம் பல முன்னணி ஹீரோக்கள் பைக்கிலும், சைக்கிளிலும் படப்பிடிப்புக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்கிற அச்சம் வருமே? மண்ணாங்கட்டி! முகத்திற்கு ஒரு ஹெல்மெட் போட்டுக் கொண்டால் போச்சு. இப்படிதான் ஆர்யா தினந்தோறும் படப்பிடிப்புக்கு சைக்கிளில் வருகிறார். உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆச்சு…
ilayaraaja
‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது பேமிலி. இந்த நேரத்தில் தானே ஒரு படத்தை தயாரித்தால் என்ன என்று வெகு காலத்திற்கு பின் ஆசைப்படுகிறாராம் ராஜா. பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து கொடுக்கதான் அவரை சுற்றி பாலா போன்ற அனுபவ…
meegaman
வெள்ளி கிண்ணத்துல வெண்ணைய வச்ச மாதிரிதான் நடிகைகளை தாங்கி பிடிப்பார்கள் இயக்குனர்கள். ஏன்? ஏன்னா… அப்படிதான் அது! ஹீரோ ஹீரோயின்களை கம்ஃபர்ட்டாக வச்சுக்கணும் என்பது சினிமாவுலகத்தின் அறிவிக்கப்படாத பாலிஸி என்பதால், பல இயக்குனர்கள் அவர்களை முகம் சுளிக்க விட மாட்டார்கள். அவர்கள் சின்னதாக கவலைப்பட்டாலும் பெரிய ஸ்கிரீனில் அது வெளிப்பட்டு விடும் என்கிற அச்சம் காரணமாகவும் இருக்கலாம். இந்த நிலையில்தான் ‘மீகாமன்’ பட இயக்குனர் மகிழ் திருமேனி செய்திருக்கும் ஒரு…
kushpoo-vishal
கேப்டன் ஆஃப் த ஷிப் ஆகிக் கொண்டிருக்கிறார் விஷால். கடனில் சிக்கிய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த் என்றால், அங்கு கட்டிடம் கட்ட மல்லுக்கு நிற்பது விஷால் தலைமையிலனா குரூப். ‘அடுப்பு பத்த வைக்கிறேன்னு வீட்ட கொளுத்திட்டு போயிராதீங்க’ என்று இந்த சண்டை சச்சரவு பற்றி பேச ஆரம்பித்தாலே மீடியாக்களிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் அவர். இருந்தாலும், என் உயிரே போனாலும் அந்த இடத்துல கட்டிடம் கட்டாம ஓய மாட்டேன் என்று…
jeeva-review
ரிக்க்ஷாகாரரிலிருந்து ரிச் மேன்கள் வரைக்கும், காறி உமிழ்ந்து கவலைப்பட்ட விஷயத்தைதான் ஆழ இறங்கி அகழ்வராய்ந்திருக்கிறார் சுசீந்தரன். ‘ஏன்தான் இப்படி சொதப்புறாங்களோ?’ என்று டி.வி பெட்டிக்கு முன் அமர்ந்து இதயம் வெடித்த கோடானு கோடி ரசிகர்களின் கோபம்தான் ஜீவா! என்றாலும் ஒரு கமர்ஷியல் படத்திற்குள் காதல் வேண்டுமே? ஒரு இளஞ்ஜோடியின் காதலையும் நுரைக்க நுரைக்க வைத்து டீன் ஏஜ் பசங்களின் காதல் ஜீன்களையும் டச் பண்ணுகிறார் சுசீந்திரன். இதுவரை மட்டுமல்ல, இனிமேலும்…
amarakaviyam -review
கட்டி அணைப்பதாக நினைத்துக் கொண்டு எலும்பை நொறுக்கி விடுகிற அறியாமை காதலுக்கு மட்டும்தான் உண்டு. அப்படியொரு காதலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு காதல் ஜோடியை பற்றிய கதைதான் ‘அமரகாவியம்’. ‘பூமரத்துக்கு கீழே, புழுக்கத்துக்கு ஏது வேல?’ என்பது மாதிரிதான் பியூர் காதல் படங்களும்! அந்த அழகான ஜோடி, எப்படியாவது சேர்ந்து விடக் கூடாதா என்கிற ஏக்கத்தை வரவழைக்கிறது கதை நடக்கும் களமும், கேரக்டர்களை சுமந்திருக்கும் முகமும்! மயங்க வைக்கும்…
Amara Kaaviyam Movie
‘வீட்ல பாட்டு வுழுது… சும்மாயில்லாம இவன் செஞ்ச வேலை’ என்று ‘அமரகாவியம்’ படத்தின் டைரக்டரான ஜீவா சங்கரை நோக்கி ஆர்யா கைநீட்ட, பக்கத்திலிருந்த ஆர்யாவின் தம்பி சத்யா படு பவ்யமாக ரியாக்ஷன் காட்டினார். என்னவாம்? சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன் ஆர்யாவை சந்திக்க போன ஜீவா சங்கர், வீட்டில் சத்யாவை பார்த்திருக்கிறார். ‘ஏம்ப்பா… நீயும் உங்க அண்ணன் மாதிரி ஹீரோவாகலாமே?’ என்று புகையை போட்டுவிட்டு போக, அதற்கப்புறம் சினிமா ஆசை…
kadhai thiraikkadhai vasanam iyakkam
கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச வைத்திருக்கிறது. நல்ல சினிமாவை நேசித்து தோற்கிற எவருக்கும் வருகிற எரிச்சல்தான் அது என்றாலும், இந்த கல்லை ஏதோ மாணிக்க கல்லாக நினைத்து மண்டையை நீட்டலாம் ரசிகர்களும், ஆ கோக்கள் நிறைந்த கோடம்பாக்கமும்! ஏனென்றால் படத்தில் அவர்…
mekkaman
மீகாமன் பிரஸ்மீட்! ‘ஹன்சிகா அழுதுட்டாரு தெரியும்ல… ’ என்று அப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதில் ஏதும் உள் குத்தோ, பப்ளிசிட்டி ஸ்டன்ட்டோ இருப்பதாக தெரியவேயில்லை. அப்புறமென்ன? பொச பொசவென பிடித்துக் கொண்டது மீடியா. ‘இல்லைங்க… அத விட்ருங்க. வேற பேசுவோம்’ என்றெல்லாம் அவர் சமாதானப்படுத்தினாலும், விடுவதாக இல்லை ஒருவரும். பக்கத்திலிருந்த ஆர்யா அந்த ரகசியத்தை அவிழ்த்தார். ஒண்ணுமில்லங்க. நானும் அவங்களும் நெருக்கமா நடிக்க வேண்டிய சீன். வழக்கத்தை விட கொஞ்சம்…
nayan-arya
‘பிக்கப் டிராப் நடிகர் ’ என்றே பேர் வாங்கிவிட்ட ஆர்யாவுக்கு, இப்போது ஒரு நடிகையை ‘டிராப்’ பண்ணுவதுதான் பெரும் லட்சியமாக இருக்கிறது. யார் வம்பும் நமக்கு வேணாம்ப்பா… என்பதால் இருக்கலாம். அல்லது இவருக்கே அவர் அலுத்துப் போயிருக்கலாம். எப்படியோ? இந்த நியூஸ் ஆனந்த குயிலின் பாட்டு அல்ல! அந்த குயிலுக்கே வைக்கப்பட்ட வேட்டு! தெலுங்கில் ‘பொம்மரிலு’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால், பொம்மரிலு பாஸ்கர் என்றே எல்லாரும் அழைக்கிற…
hansika-nayanthara
குஷ்புவையும் பிரபுவையும் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஜோடியாக்கி பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் சில இயக்குனர்கள். அப்படியொரு இயக்குனரின் கதையே கேட்டுவிட்டு குஷ்பு நடிக்க சம்மதித்ததாக கூட நடுவில் சில தகவல்கள் கசிந்தன. ஆனால் அந்த சூடு ஏறுவதற்குள், சட்டென அதில் நீரை பாய்ச்சி நெருப்பை குளிர வைத்தார் குஷ்பு. ‘இல்லை இல்லை இல்லவே இல்லை. நான் பிரபுவுடன் இணைந்து நடிக்க ஒருபோதும் சம்மதிக்கவில்லை’ என்று…
vijay-superstar
ஆகஸ்ட் 15 ந் தேதி மதுரை குலுங்கப் போகிறது. குலுக்குகிறவர்கள் விஜய் ரசிகர்களாக மட்டும் இருக்கப் போவதில்லை. கோடம்பாக்கத்தின் லப்பை சப்பை ஹீரோக்களின் ரசிகர்களாக இருந்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏன்? விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப் போகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கோடம்பாக்கத்தின் அத்தனை ஹீரோக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். குமுதம் வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில்தான் நடிகர் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை வழங்கியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.…
nambiyar
சந்தானம்தான் ஸ்ரீகாந்தின் மனசாட்சி என்றால், ‘மனசாட்சி இல்லாமல்’ நடந்த நிகழ்ச்சிதான் அது! சந்தானம் பாதி ஸ்ரீகாந்த் மீதியுமாக நடித்திருக்கும் படம்தான் நம்பியார். சற்றே வித்தியாசமான கதை இது. ஸ்ரீகாந்தின் மனசாட்சிக்கு ஒரு உருவம் கொடுத்து படம் முழுக்க ஸ்ரீகாந்தையும் அந்த மனசாட்சியையும் ஒன்றாகவே நடமாட விட்டிருக்கிறார் டைரக்டர் கணேஷா. அந்த மனசாட்சி கேரக்டரில்தான் நடித்திருக்கிறார் சந்தானம். வழக்கம் போலவே இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும் சந்தானம் ஆப்சென்ட். ஆனாலும்,…
anushka-new
ஒரு விறுவிறுப்பான சண்டை எங்கேயிருந்து துவங்கும்? பெரும்பாலும் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்படும் போதுதான். அப்படிதான் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்பட, அனுஷ்காவுக்கும் நயன்தாராவுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. நாம் இங்கே பிராப்பர்ட்டி என்று குறிப்பிடுவது யாரை? யாரும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு பாடல் வெளியீட்டு விழா மேடையைதான் நாம் அப்படி சொன்னோம். அண்மையில் தனது தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை…
arya-amarakaviyam
ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?! இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா எவ்வளவு ஸ்பெஷல் பர்சன் என்று. இந்த ஆடியோ விழாவுக்கு இயக்குனர் பாலா வந்திருந்தார், உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார் மற்றும் ஆர்யாவின் சொந்த பந்தமெல்லாம் வந்திருந்தாக… ஆனால் ஒருவரின் கண்ணுக்கும் இருவரை தவிர எவரையும் தெரியவில்லை. அவர்கள்…?…
puunnagai poo geetha
அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை தயாரித்தவர் புன்னகைப்பூ கீதா. மலேசியாவில் இயங்கி வரும் வானொலி ஒன்றின் ஆர்.ஜேவாக இருக்கும் கீதாவுக்கு, தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இல்லை. நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் வந்திருக்கிறது. ஒரு வகையில் பார்த்தால் அதற்கு தகுதியானவரும் கூட. வசீகரமான முகம், வளமான குரல், அசரடிக்கும் உயரம் என்று இந்த கால ஹீரோயின்களுக்கு இம்மியளவும் குறைச்சல் இல்லாதவர்தான் அவர். முதலிரண்டு…
pooja
பெங்களூரிலிருந்து நமக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி வைத்த யாரோ ஒரு புண்ணியவான் ‘என்னன்னு விசாரிங்க?’ என்று ‘நோட்’ போட்டிருக்கிறார். படத்திலிருப்பது நடிகை பூஜா, அருகிலிருப்பவர்தான் யாரென்று தெரியவில்லை. தமிழ்சினிமா கிசுகிசு கிங்கரர்களின் பிடியிலிருந்த பூஜா, எப்போது ஃபீல்டை விட்டு ஒதுங்கினாரோ, அப்போதிலிருந்தே அவர் பற்றிய கிசுகிசுக்களும் குறைந்துவிட்டது. யாருமே எதிர்பாராத விதத்தில் மீண்டும் திரும்பினார் அவர். ‘பிரஸ்காரங்கள்லாம் சேர்ந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஏன் சில பத்திரிகையில் எனக்கு…
Page 7 of 8« First...45678

all news