arya

Arya Nayanthara
‘சம்திங் ஸ்பெஷல்’ என்று ஒரு காலத்தில் கொண்டாடிய நட்பெல்லாம், ஒரு கட்டத்திற்கு மேல் ‘சம்திங் க்ரூயல்’ ஆகிற நேரம் ஒன்று வந்தால் அதைதான் கோட்டான் விழிக்கிற நேரம் என்பார்கள் சினிமாக்காரர்கள். இப்போது ஆர்யாவுக்கு கோ.வி.நே! எழுதறதுக்கு எதுவுமே இல்லேன்னா, ‘ஆர்யாவும் நயன்தாராவும் அங்கிட்டு திரிஞ்சாங்களாம்’ என்று எழுதுகிற அளவுக்கு இருவர் நட்பும் ஒரு காலத்தில் பிரசித்தி! இப்போதென்னவாம்? பழசையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு “மறுபடியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கலாமா?” என்கிறாராம்…
Bangalore Natkkal Review
க்ளைடாஸ் கோப்புக்குள் வளையல்களுக்கு பதிலாக வண்ணங்களை கொட்டி வைத்த மாதிரி ‘டாப் கிளாஸ்’ படங்கள் எப்போதாவது வரும்! தியேட்டருக்கு வந்திருப்பதை ரசிகன் அறிவதற்குள், அப்படத்தின் ‘வாய்தாவே’ முடிந்திருக்கும்! ஆனால், ஆர்யா, பாபிசிம்ஹா, ராணா, சமந்தா, பார்வதி, ஸ்ரீதிவ்யா என்று நட்சத்திரங்கள் நிரம்பியிருப்பதால், ரசிகர்களின் மூக்கிலேயே போஸ்டர் தடவி ஒட்டப்பட்டது போல ஒரு களேபர ‘வௌம்பரம்’ கிடைச்சிருக்குமே? அதை நம்பி தியேட்டருக்கு வருகிறவர்களை தாலாட்டுதா படம்? பார்க்கலாம்… ஸ்ரீதிவ்யாவின் கசின்கள்தான் ஆர்யாவும்,…
arya-iasmcon-stills-015
CCL-2016
பணம் உள்ளே வந்தால் நிம்மதி வெளியே போய் விடும் என்பது, பேங்குகளை தவிர மீதி எல்லா இடத்திலும் சொல்லப்பட வேண்டிய சூத்திரம்! ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த சிசிஎல், இப்போது கடும் குடைச்சலுக்கு ஆளாக்கி விடும் போல் தெரிகிறது. இதனால் ‘பேட்’டை தூக்கிக் கொண்டு எந்நேரமும் விளையாட்டு நினைப்போடு திரிந்த நம்ம ஊர் ஸ்டார்களுக்கு கண்ணோரத்தில் எரிச்சல். காதோரத்தில் புகைச்சல்! செலிபிரிட்டிகள் விளையாடும் இந்த கிரிக்கெட் போட்டியை ஆரம்பத்தில் தலைமை தாங்கி…
bangalore naatkal
‘பெங்களுர் நாட்கள்’ படத்தை இயக்கியிருக்கும் பொம்மரிலு பாஸ்கருக்கு சொந்த ஊர் நம்ம வேலூர்தான். ஆனால் அவர் இப்போ ஆந்திராவாசி. ஏனென்றால் பொம்மரிலு ஹிட். அதற்கப்புறம் அவர் இயக்கிய படங்களும் ஹிட். விடுமா ஆந்திரா? இந்த நிலையில்தான் மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்யும் வேலையை இவரிடம் ஒப்படைத்தது பிவிபி நிறுவனம். வெளி மாநிலத்தில் நானெல்லாம் பெரிய ஆளு தெரியுமா? என்று மனசு சொன்னாலும், தாய்…
Jeeva, Arya, Mirchi Shiva at CCL 3 Chennai Rhinos Team at MA Chi
முதலில் சரத்குமார் தலைமையிலும் அதற்கப்புறம் விஷால் தலைமையிலும் நடந்து வந்த சிசிஎல் கிரிக்கெட் விளையாட்டு, புரபஷனல் கிரிக்கெட் வீரர்களின் மேட்சை விட படு பிரமாதமாக அமைய, நாடெங்கிலும் அதற்கு நல்ல வரவேற்பு. ஸ்பான்சர்களும் குஷியாக இந்த குழுவிற்கு ஆதரவளித்ததால், நாளொரு பந்தும் பொழுதொரு உருட்டலுமாக சந்தோஷ ஆட்டம் நடத்திக் கொண்டிருந்தது சென்னை ரைனோஸ் அணி. இப்படி மட்டையும் பந்துமாக இருந்தால், மார்க்கெட்ல முட்டை விழுந்துரும் என்பதை சற்று லேட்டாக புரிந்து…
samantha-bangalore
மலையாளத்தில் வெளிவந்து எல்லாருடைய மனசையும் கொள்ளையடித்த ‘பெங்களூர் டேஸ்’ படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்கிறது பிவிபி நிறுவனம். ஆர்யா, ராணா, பாபிசிம்ஹா, சமந்தா, ஸ்ரீதிவ்யா, பூ பார்வதி ஆகியோர் நடிக்க, பிரபல தெலுங்கு இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு மற்ற எல்லாரும் வந்திருக்க, சமந்தாவை மட்டும் ஆளைக் காணோம். என்னவாம்? ஐயோ பாவம். அவருக்கு கண் வலி. (அப்படியே வந்திருந்தா கூட எங்க கண்ணு…
aryaa
‘போதும்டா பிறவிப்பயன்’ என்கிற அளவுக்கு வெள்ளம் தலைக்கு ஏறிக் கிடக்கிறது. இருந்தாலும் மழையே…கொஞ்சம் நிக்கிறீயா? மத்தியான ஷோ பார்த்துட்டு வந்துர்றேன் என்கிற அளவுக்கு வளர்ந்து வாட்டமாக நிற்கிறது ரசிகர்களின் சினிமா ரசனை! படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கோம். பாருங்க… என்றால் அதற்கு ஏது மரியாதை? மக்களை தியேட்டரை நோக்கி திருப்புகிற வேலையை கனக்கச்சிதமாக செய்தாலொழிய அப்படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வராதே? புலி கேம், மாஸ் கேம், வேதாளம் கேம் என்று…
inji iduppazhagi
பெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான ‘இஞ்சி இடுப்பழகி’ ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமா இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அனுஷ்காவை போலவே ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படமும் தன்னுடைய எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.ஆர்யா,…
bala-kutra parambarai
பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி…” என்பார்கள் சொல்லி வைத்தார் போல. அவர்கள் சொன்னதெல்லாம் நிஜம்தான் போலிருக்கிறது. பாலா அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், சூர்யாவை தவிர அவர் படத்தில் நடித்த மற்ற ஹீரோக்கள் அத்தனை பேரும் இருப்பார்கள் என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.…
nayan-arya
வெறும் ப்ளே பாய் மட்டுமல்ல, நினைத்த மாதிரியெல்லாம் உருட்டிக் கொள்ள வசதியான ‘க்ளே’ பாயும்தான் ஆர்யா! ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், தயாரிப்பாளரின் ஹீரோவாகவும், டைரக்டரின் ஹீரோவாகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற நல்ல ஹீரோ! ஆனால் அவரைதான் பாம்பு வாயில் சிக்கிய பரமபத காயாக உருட்டிக் கொண்டு வந்து கீழே விட்டுவிட்டது சினிமா. அவர் கைவசம் இருக்கிற ஒரே படம் இப்போது இஞ்சி இடுப்பழகிதான்! இந்தப்படம் ஓடினால்தான் ஆர்யாவின் சம்பளம்…
atlee-vijay
வேகமாக எந்த ஹீரோ வளர்ந்தாலும், முதுகில் ஒரு செல்லத்தட்டு தட்டி(?), “கொஞ்சம் அடங்குறீயா” என்பார்கள் போலிருக்கிறது இங்கே! அதுவும் அந்த இம்சையை சற்று அதிகமாகவே சந்தித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒருபுறம் தனுஷ் இவரை அடக்க நினைக்க, இன்னொரு புறம் விஜய்யும் அத்தகைய அலப்பறையை மேற் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எப்படி? ஏன்? அட்லீ இயக்குகிற புதிய படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே,…
NRD-Heros copy
பெரிய பெரிய ஹீரோக்களெல்லாம் மண்ணை கவ்வுகிற காலத்தில் ஒரு படம் ஓடுவதென்பதே திருவாரூர் தேரை சுண்டுவிரலால் இழுப்பதற்கு சமமான சாதனைதான்! அண்மையில் தனி ஒருவன் படம் அந்த சாதனையை நிகழ்த்தி தமிழ்சினிமாவின் எல்லா தரப்புக்கும் லாபம் தந்தது. (அப்படியிருந்தும் அந்த படத்திற்கு ஒரு பெரிய வெற்றி விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. அது ஏன்? என்பதை தனியாக இன்னொரு செய்தியில் சொல்வோம்) தனி ஒருவனுக்கு சற்றும் குறையாத வெற்றியை தந்திருக்கிறார் ‘நானும்…
thakkana pizhaikkum-rajivgandhi
‘கடைசியில எங்கிட்டேயிருந்து சுட்டதுதானா இது?’ என்று விஷால் கேட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. ஏனென்றால் விஷாலை பேட்டியெடுக்கப் போன ஒரு நிருபர், அவர் சொன்ன பதிலில் இருந்தே ஒரு கதையை உருவாக்கி, அதையே டீஸராக கொண்டு போய் அவருக்கு காட்டினால், பாவம்… அந்த மனுஷன்தான் என்னவார்? அப்படியே ஷாக்காகிவிட்டார் விஷால். இருந்தாலும், சாஃப்ட் நேச்சருக்குரிய நிருபர், இப்படி பற்றியெறியும் ஒரு ட்ரெய்லரோடு வந்து நின்றது அவரை ரொம்பவே ஆச்சர்யத்திற்குள்ளாகிவிட்டது. விஷால் ஆர்யாவை அசத்திய…
Vishal team
கூட்டத்தில் கண்கள் தேடுகின்ற மூவரும் இப்போது அங்கு இல்லை. தேடுகிற கண்களுக்கு விஷால் சொல்லப் போகும் பதில் என்ன? இதுதான் பத்திரிகை, தொலைக்காட்சி, இன்டர்நெட் வாசகர்களின் பெரும் கேள்வியாக இருக்கிறது சமீப காலமாக. நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில், சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிக் கொண்டிருக்கிறார் விஷால். எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஒவ்வொரு ஓட்டாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் இந்த விஷயத்தை கூர்ந்து கவனித்து வரும் பத்திரிகையாளர்கள். இந்த நேரத்தில்…
santhanam-salary
‘தயாரிப்பு செலவை குறைச்சாகணும்…’ இதுதான் தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய ராஜ கட்டளை! “குறைக்கறது நல்லதுதான். அதுக்காக குரல்வளையில கைய வைக்கணுமா?” என்று வேறொரு குரூப் கதறாத குறையாக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை. தயாரிப்பு செலவு தாறுமாறாக கசியாமலிருக்க சங்கம் கட்டியிருக்கும் முதல் தடுப்பணை, டி.விக்களுக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பதுதான். இதில் ஏகப்பட்ட கருத்து மாறுபாடுகள். அதுவும் சங்க உறுப்பினர்களுக்குள்ளேயே? “விளம்பரம் மட்டும்தான் இப்போ பிரச்சனை என்பது மாதிரி…
yatchan-review
‘யட்சன்’ என்றால் இயக்குபவன் என்று அர்த்தமாம்! இவ்வளவு பழசான வார்த்தையை அகராதியில் தேடிக் கண்டுபிடித்து தலைப்பாக வைத்திருக்கும் நம்ம விஷ்ணுயட்சனின் ட்ரீட்மென்ட் என்ன? அதை காண்பதற்கு படு குஷியுடனும் பேரார்வத்துடனும் தியேட்டருக்குள் குவிந்திருப்பார்கள் ஆர்யாவின் ரசிகர்கள். விஷ்ணுயட்சனின் தம்பி கிருஷ்ணாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றாலும், ஐகான் என்னவோ… நம்ம ஆர்யாதான்! இரண்டு ஊர்களிலிருந்து இரண்டு வித நோக்கத்தோடு சென்னை வரும் ஆர்யா, மற்றும் கிருஷ்ணாவுக்கு ஒரே இடத்தில் ஒரு…
yatchan
விஷ்ணு வரதன் அவர்கள் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா  நடித்திருக்கும் திரைப்படம் “யட்சன்”. இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர்  விஷ்ணு வரதன் அவர்களோடு இனணந்து  திரு.தனஞ்ஜெயன் அவர்கள் தயாரித்துள்ளார். எழுத்தாளர்கள் சுபா அவர்கள் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளனர். இந்த யட்சனின் மைய கரு ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்து…
Arya-JayamRavi
தமிழ்சினிமாவில் டேக் இட் ஈஸி ஹீரோ என்றால் அது ஆர்யாதான். ‘வந்தா மல, வரலேன்னா விடுலே…’ என்கிற டைப் அவர். கிசுகிசு எழுத்தாளர்கள் ஊற்றிய சாம்பாருக்கெல்லாம் இந்நேரம் அவர் மிளகாய் பொடியாகவே வாந்தி எடுத்திருக்க வேண்டும். அதற்கும் டேக் இட் ஈஸி என்பதுதான் ஆர்யாவின் அழகு, லட்சணம், புகழ், பெருமை இத்யாதி… இத்யாதி… “யாரு கூப்பிட்டாலும் போய் கெஸ்ட் ரோல் பண்றீங்களே? அது உங்க ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாதா?” என்று…
rajeshM
டாஸ்மாக் காட்சிகள் எதையும் காட்டக் கூடாது என்று ஒரு சின்ன உத்தரவு மட்டும் போட்டுப் பாருங்களேன்…சினிமாவிலிருந்தே கழன்று கொண்டு ஓடி விடுவார் டைரக்டர் ராஜேஷ்.எம். அவரது முதல் படமான ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஆரம்பித்த குடி மேட்டர் அவரது லேட்டஸ்ட் படமான ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ வரைக்கும் தொடர்கிறது. படம் முழுக்க ஊற்றி ஊற்றி குடித்துவிட்டு, மாற்றி மாற்றி நையாண்டி செய்வதுதான் அவரது படத்தின் ஒன் லைன்.…
Page 5 of 8« First...34567...Last »

all news