ARMurugadoss

Spyder Movie Review
Spyder-Review
Rangoon audio launch stills012
Famous Director Slams AR Murugadoss-Ajith Film Issue.
ajithkumar ar murugadoss
Childrens Hero Vijay
இப்போதிருக்கும் ஹீரோக்களில் குழந்தைகள் மத்தியில் செல்வாக்கு யாருக்கு? இப்படியொரு போட்டி வைத்தால், மற்றவர்களையெல்லாம் தவிடு தின்ன வைத்துவிட்டு முதலிடத்தை பிடிப்பார் விஜய். அதற்கப்புறம் சிவகார்த்திகேயன். கபாலி வந்ததிலிருந்தே, சின்னக்குழந்தைகளும் “கபாலிடா…” என்று முழங்குவதால், அட ரஜினியும் ஆட்டத்தில் இருக்கிறார். எங்கோ தொலை தூரத்தில் விஜய்யையோ, சிவகார்த்திகேயனையோ, ரஜினியையோ ஸ்கிரீனில் மட்டும் பார்த்து என்ஜாய் பண்ணும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இவர்களை தொட்டு நக்கி பார்க்கிற அளவுக்கு ஆர்வம் கொப்பளிக்கலாம். ஆனால் நினைத்தால்…
Nayanthara-Gopi
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் காலத்தை சற்றே பிளாஷ்பேக் அடிப்பது நல்லது! “அந்தக் கதை என்னுடையது. நான் ஏ-ஆர்.முருகதாசிடம் சொல்லியிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிவிட்டு மொத்த கதையையும் சுருட்டிக் கொண்டார்” என்று கண்ணீர் மல்க போராடிய மிஸ்டர் கோபி, ஒரு தலித்! அவர் சார்ந்த சமூகத்தினர் பலர் இன்று பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்களே… அப்போது ஒருவர் கூட கோபி பக்கம் இல்லை. முருகதாசா,…
Uthayanith Ajith
ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் மனசும் இந்தியா பாகிஸ்தானின் ஒன் டே மேட்ச் கிரவுண்ட் போலவே விறுவிறுத்துக் கிடக்கிறது. நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியால், உள்ளுக்குள் இன்னொரு போட்டி உருவாகி தலை ஒருபக்கமும் வால் இன்னொரு பக்கமுமாக இரண்டு தரப்பினரின் கைகளில் சிக்கி அல்லோலப்படுகிறது. இதில் யார் யாரை கவிழ்ப்பார்கள் என்ற போட்டி முடிவு ஒருபக்கம் இருக்கட்டும். அவ்வளவு பரபரப்பிலும் ஒருவர் வர்லீயே… அது ஏன்ப்பா? என்று கேட்டு வந்தார்கள்…
ARMurugadoss-Kaththi
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தக் கிளம்பி வந்திருக்கிறார் தஞ்சையை சேர்ந்த ஒரு இளம் இயக்குனர். பெயர் அன்பு ராஜசேகர். இவர் எழுதி இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கையால் வெளியிட்டிருக்கிறார். அந்த குறும்படத்தைதான் ‘கத்தி’ என்ற பெயரில் படமாக ‘அடித்து’விட்டார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று குற்றம் சாட்டி வருகிறார் அன்பு ராஜசேகர். கத்தி வெளிவருவதற்கு முன்பே இவரும் ஊரிலிருந்து கிளம்பி வந்து பல்வேறு…
atharva-trisha
எல்லா விஷயத்திலும் நயன்தாரா பாலிசிதான் த்ரிஷாவுக்கும்! தன்னை விட வயசில் சின்ன ஹீரோக்களாக இருந்தாலும் சரி, பாலகிருஷ்ணா மாதிரியான பென்ஷன் வயசிலிருக்கிற ஹீரோக்களாக இருந்தாலும் சரி, தூண்டிலை வீசி மீனை மட்டும் லபக்குகிற பலே கில்லாடிகள்தான் இருவரும். அந்த வகையில் த்ரிஷாவின் தூண்டில் இப்போது அதர்வா மீது. அதன் பின் கதை, முன் கதை சுருக்கம் வருமாறு- ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் ஒருவர் அதர்வாவை சந்தித்து ஒரு கதையை சொன்னார். முதல்…
ARMurugadoss
‘ஈட்டி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வாவின் ஏரியா பிசியோ பிசி. தினத்தந்தி குருவியாரிடம் கன்னியாக்குமரியிலிருக்கும் கடைசி தமிழன் கூட “அதர்வா நடிக்கிற படம் அடுத்ததா எப்பங்க வருது?” என்றெல்லாம் கடுதாசி எழுதி கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை. “என்னோட அடுத்தப்படம் கணிதன்” என்று அதர்வாவும் போகிற இடத்திலெல்லாம் பெருமையோடு சொல்லிக் கொள்கிற மாதிரியான படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது அது. பிரபல ட்ரம்ஸ் மேதை சிவமணி இசையமைக்க, ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் டி.என்.சந்தோஷ்…
asin-marriage
நடிகைகள் கொத்துகிற எல்லா சீட்டிலும் ஒரு தொழிலதிபரின் படம் இருப்பதென்பது, தானாக அமைவதா? அல்லது அதுவாகவே அப்படி நடக்குதா? வெகுகாலமாக தமிழனின் உச்சி மண்டையில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு, இதோ- அசின் தாலி கட்டிக் கொண்ட இந்த நிமிஷம் வரைக்கும் விடையே இல்லை. ஆனால் அவர்களின் நுண்ணிய பார்வையில் எப்படிதான் விழுகிறார்களோ, அந்த தொழிலதிபர்கள்? போகட்டும்… சமீபத்தில் இருப்பதிலேயே பெரிய புளியங்கொம்பை கண்டு பிடித்து, அதில் ஊஞ்சல் கட்டிய…
vijay-thuppakki2
ராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் எந்திரன்2 படத்திற்கு நாங்கதான்யா மொதலாளி என்று அமர்க்களமாக அறிவித்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்க போய்விட்டார் அல்லிராஜா. நடுவில் இதே நிறுவனம் சில படங்களை வெளியிட்டு கல்லா கட்டியது தனி.…
10 enrathukkulla-review
எண்றதுக்கு ஆளே இல்லாத தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது. தலைப்பில்தான் எப்படியொரு பொருத்தம்! ஒருகாலத்தில், ‘ஜெயிக்றோம்’ என்று கிளம்பிய விக்ரமை, பத்து எண்றதுக்குள்ள ஜெயிக்க வைத்த ரசிகர்கள் மத்தியில், அதே பத்து எண்ணுதுக்குள்ள படவுலகத்தை விட்டே அனுப்பி வைக்கும் வேலையை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார் விஜய் மில்டன்! அவர்தான் அப்படி… கதை கேட்ட விக்ரமுக்கு கழுத்துக்கு மேலே வறட்சியோ என்னவோ? போதும் சாமீய்… உங்க…
samantha
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டுக் கொண்டிருந்தார் விக்ரம். இடம்- 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர் வெளியீட்டு விழா! இப்போதெல்லாம் எந்த ஹீரோவுக்கும், நம்ம படத்தின் பிரமோஷனுக்குதான் வருகிறோம். நிறுத்தி நிதானமாக படம் பற்றி நாலு வார்த்தை பேசுவோம் என்கிற அக்கறை துளி கூட இல்லை. அதன் ஒட்டுமொத்த உதாரணமாக இருந்தார் விக்ரம். தன்னுடன் வந்த சமந்தாவை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையில்…
TIN
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாராதான் எனக்கு ஜோடி’ என்று சாய்ஸ் வைத்து செலக்ட் பண்ணுகிற நிலைமையில் இல்லை ஜி.வி.பிரகாஷ். ஆனால் அப்படியொரு நிலைமை வந்துருமோ என்று தோன்ற வைத்தது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள். இன்று சத்யம் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏர்.ஆர்.முருகதாஸ், பார்த்திபன், தாணு உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வாழ்த்தினார்கள். என்னப்பா… என்னவோன்னு நினைச்சோம். தம்பி இந்த போடு போடுதே……
ajith
அஜீத்தின் தற்போதைய படத்திற்கே இன்னும் பெயர் வைக்கக் காணோம். அதற்குள் அவரது அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகள் தாறுமாறாகி கிடக்கிறது ரசிகர்கள் மத்தியில். சிறுத்தை சிவா படத்திற்கு பிறகு அவர் கடவுளின் பெயர் கொண்ட ஒரு இயக்குனருக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக செய்திகள். ஏற்கனவே அஜீத்தை வைத்து படம் இயக்கியவர் அவர். கடந்த பல வாரங்களாக வெளியாகி வரும் இந்த செய்தியை சம்பந்தப்பட்ட இயக்குனரும் சரி, அஜீத் தரப்பும் சரி. மறுக்கவும்…
anirudh
அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார் அனிருத். அவரது சம்பளம் ஒரு கோடி என்றும் இல்லையில்ல ரெண்டு கோடி என்றும் கோடம்பாக்கம் தாறுமாறாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு பொருத்தமாக ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என்று அனிருத்தை நோக்கி அவசர கதியில் பெரிய பெரிய இயக்குனர்களே ஓடுவார்கள் போல தெரிகிறது. ‘பாத்திரத்தை உருட்டுற மாதிரி என்னய்யா இசை இது?’ என்று மெலடி விரும்பிகள் மனம் கசங்கினாலும், யூத்துகள் மத்தியில் அனிருத்துதான் இப்போதைக்கு இசை ராசா!…
pathu enrathukkulla
கோடம்பாக்கத்தின் பரபரப்பு சிம்புவின் புலம்பல்தான்! ‘என்னை விட்டு எல்லாம் போயிருச்சு. உசுரு மட்டும்தான் மிச்சமிருக்கு’ என்று அவர் பேசியதை சற்று அதிர்ச்சியோடும் அனுதாபத்தோடும்தான் கவனிக்கிறார்கள் மக்கள். ஆனால் அவரது இந்த நிலைமைக்கு காரணம் வேறு யாருமல்ல, அவர் மட்டும்தான். தனது நிலைமை குறித்து அவர் புலம்பியதும், இனிமேலாவது அடுத்தவர்களுக்காக வாழப் போகிறேன் என்று அவர் கூறியதும் சாத்தான் வேதம் ஓதியதற்கு சமமானதுதான். இவ்வளவு புலம்புகிறவர் இப்போது கூட பாண்டிராஜ் இயக்கிவரும்…
arm
பரங்கிக்காய் விழுந்து சுண்டைக்காய் நசுங்கிய மாதிரிதான் தொழிலாளர்களின் வாழ்க்கை. அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரியான பெரிய பரங்கிக்காய்கள் விழுந்தால், ஐயோ பாவம்… இவர்கள்தான் என்ன செய்வார்கள்? விஷயம் ரொம்ப சீரியஸ். ஆனாலும் கோடம்பாக்கத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. ‘ரங்கூன்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் முருகதாஸ். இதை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். கவுதம் கார்த்திக்தான் ஹீரோ. அனிருத் இசை. ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்குகிறார். சமீபகாலமாக பர்மாவை குறிவைத்திருக்கும் முன்னணி…
Page 1 of 212

all news