aniruth

Vijay-Kaththi
கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நேற்று இரவு சுமார் பதினொரு அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதில் சுமூக முடிவையும் எட்டியது கத்தி தயாரிப்பாளர் வட்டாரம். கத்தி விளம்பரங்களில் லைக்கா பெயரை பயன்படுத்துவதில்லை, படத்தின் டைட்டிலில் லைக்கா…
Vijay-Kaththi
தரப்பட்ட போஸ்டரை ஒட்டுவதா, வேண்டாமா? முன் பதிவு தொடங்கலாமா, இல்லையா? இப்படி கேள்வியும் கிறுக்கலுமாக கிடந்த அத்தனை தியேட்டர்களுக்கும் ஆரவார முடிவு கிடைச்சாச்சு. கடந்த இரண்டு நாட்களாகவே செம இழுபறியில் இருந்த கத்தி வெளியீட்டு பிரச்சனை, சற்று முன்னர் முடிவுக்கு வந்ததாக தகவல் பரவுகிறது. தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் தமிழர் சார்ந்த இயக்கங்கள் ‘லைக்கா’ என்ற பெயரை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று…
vishal-kaththi
இன்று காலையிலிருந்தே பற்றிக்கொண்டு எரிகிறது சினிமா வட்டாரம். என்னவாம்? கத்தியை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கத்தி துக்காத குறையாக நின்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. போலீஸ் ஆணையர் அலுவலகத்திலும், வெளியேயும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது பஞ்சாயத்து. மிக பிரபலமான ஒருவர், அதுவும் தியேட்டர் வட்டாரங்களில் முக்கியமான ஒருவர், ‘எனக்கென்ன கட்டிங் தருவீங்க?’ என்கிறாராம் தீடீரென மூக்கை நுழைத்து. கொடுத்தால்தான் தியேட்டர் பக்கம் வர முடியும் என்பது அவரது மிரட்டல்.…
Kaththi triler
kaththi- business
‘இன்னும் ட்ரெய்லர் வர்லீயே அண்ணாச்சி’ என்று விஜய் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்க, ‘ட்ரெய்லர் என்னத்துக்கு? மெயின் பிக்சரே ரெடி’ என்று ஷட்டரை ஓப்பன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் கத்தி தயாரிப்பாளர்கள். படம் வருமா? வராதா? என்கிற வதந்தியை கடைசி நிமிடம் வரைக்கும் பரப்புகிற கோஷ்டி ஒன்று விஜய் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது குழப்பதை ஏற்படுத்தி வந்தாலும், அது யார்? எதற்காக? என்கிற உண்மையையும் கண்டு பிடித்த கத்தி டீம், அமைதியாக கவனித்துக்…
winstar-vijay
போஸ்டர்ல சாணியடிப்போர் சங்கம், பில்லி சூனிய மந்திரவாதிகள் சங்கம், மொத்த விலையில் முடிகயிறு விற்போர் சங்கம், அலறும் குழந்தைகளை அடக்க முடியாதோர் சங்கம்… இப்படி எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ஒரே படம் வின் ஸ்டார் விஜி நடித்த ‘எப்போதும் ராஜா’! ‘கொதிக்கிற அயர்ன் பாக்சுல குடிச்சுட்டு குப்புற விழுந்த மாதிரி ஆளே ஒரு தினுசா இருக்காரு… இவருதான் வின் ஸ்டாரா?’ என்று அவரது புகைப்படத்தை பார்க்கிற அத்தனை பேரும்…
Kaththi Movie Samantha Vijay Stills
கத்தியை பொருத்தவரை இது அடுத்த பாய்ச்சல்தான். கத்தி தீபாவளிக்கு வருமா, வராதா? என்ற எண்ணத்தை வெகுவாக தகர்த்திருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் ட்விட். யெஸ்… கத்தி திரைப்படத்திற்கான சென்சார் ஷோ இன்று சென்னையில் நடைபெற்றது. எந்த காட்சியை நீக்க சொல்வார்களோ? எதை சொல்லி குறுக்கே கட்டையை போடுவார்களோ? என்று கோடம்பாக்கம் திகிலோடு காத்திருக்க, க்ளீன் யூ சர்டிபிகேட் கொடுத்துவிட்டதாம் சென்சார் அமைப்பு. இதை தொடர்ந்து வரிவிலக்கு ஷோ ஒன்றும் தனியாக ஏற்பாடு செய்யப்படும்.…
Kaththi Movie Samantha Vijay Stills
நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். அந்த சிக்கலை மேலும் உறுதி படுத்துவதை போல தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், கத்தியை எதிர்க்கும் தமிழர் அமைப்புகளுக்கான குழுவின் தலைவருமான வேல் முருகன் ‘இந்த பாடல்…
soundarya
நல்ல நேரத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறது ‘கத்தி’யின் போக்கு. விட்டேனா பார்… என்று மொத்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அருவாளை தீட்டிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இருந்தாலும் படத்தின் பாடல் வெளியீட்டு தேதி, மற்றும் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை எவ்வித தொய்வும் இன்றி செய்து கொண்டிருக்கிறது கத்தி டீம். கத்தி- லைக்கா பிரச்சனை ஸ்டார்ட் ஆன அடுத்தடுத்த நாட்களிலேயே இந்த படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை…
aniruth
ஈர்க்குச்சி சைசுக்கு இருந்தாலும், தார் குச்சி போல முன்னேறிவிட்டார் அனிருத். அவரது லேட்டஸ்ட் படமான ‘வேலையில்லா பட்டதாரி’யும் சரியான கலெக்ஷ்ன். ஆளாளுக்கு நான் நீ என்று அனிருத்தின் கால்ஷீட்டுக்காக அடித்துக் கொள்கிறார்கள். விஜய்யின் கத்தி படத்திற்கும் இவர்தான் மியூசிக் என்பதால் இன்னும் கிரேஸ்! போதாத குறைக்கு டைரக்டர் ஷங்கரும் போகிற இடத்திலெல்லாம் அனிருத்தை புகழ்ந்து பேச, ராட்டினம் அந்தரத்திற்கும் மேலே போய், ஆகாயத்தையும் இடிக்க ஆரம்பித்திருக்கிறதாம். வேறொன்றுமில்லை. இந்த புகழுரைகளையும்…
kabilan-lyricist
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் ,இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதிய அனுபவத்தை பற்றி அவரே சொல்கிறார். ஷங்கர் சாருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில் நம்மை அமர வைத்து அந்த பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம்…
vijay sethupathy
சொல்லுகிற வாக்கு பலித்தால் அவருக்கு கரிநாக்கு என்பார்கள். விஜய் சேதுபதிக்கு சரியான (கோழிக்)கறிநாக்கு போல! சொன்னது நடந்து விட்டதே? விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ‘நீங்க யாரையாவது கடத்தணும்னா யாரை கடத்திட்டு போவீங்க?’ என்றொரு கேள்வி. யோசிக்காமல் பதில் சொன்னார் விஜய் சேதுபதி. ‘கண்டிப்பா நயன்தாராவைதான்’ என்று. அதற்கப்புறம் அவரிடம் இது குறித்து கேட்ட மீடியாக்களிடம், ‘சும்மா தோணுச்சு சொன்னேன். அதுக்கு முன் பின் அர்த்தமெல்லாம் கற்பிச்சிராதீங்க’ என்றார். ம்ஹும்… இனி…
RAJINI-ASHWARYA
கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ படத்தின் ‘எடிட் வெர்ஷன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ என்கிறார்களே…. அது எந்த நேரத்தில்? அந்த பிள்ளைகள் பெற்றோரின் பெருமையை காப்பாற்றும் போதுதானே! அந்த வகையில் இந்த படத்தை வெகுவாகவே ரசித்து பாராட்டினாராம் ரஜினி. அதுமட்டுமல்ல, நிஜமாகவே அவருக்கு படம் பிடித்திருந்ததாம். அந்த இனிப்பான நேரத்தில்தான்…
aniruth-vijay-angry
‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இந்நேரம் நடந்திருக்க வேண்டும். மூன்று பாடல்கள் மட்டும் தயாராகி விட்டது. மிச்சமிருக்கிற பாடல்களை போட்டு தருவதற்குள் பேய்க்கு பிரசவம் பார்த்த நிலைக்கு ஆளாகிவிட்டாராம் அனிருத். முதலில் தரப்பட்ட அந்த மூன்று பாடல்களுமே சிவகார்த்திகேயனின் ‘டாணா’ படத்திற்காக போடப்பட்டது என்பதையும், ரிலாக்ஸ் மூடில் அதை விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கும் அனிருத் போட்டுக் காட்ட, ‘அதையே கொடுங்க. டாணாவுக்கு வேற கொடுங்க’ என்று அந்த மூன்றையும் இவர்கள்…
VIJAY facebook
நாளுக்கு நாள் நெருக்கடிதான் கத்திக்கு! ஒரு புறம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னொருபுறம் புதுப்புது முடிச்சாக விழுந்து கொண்டேயிருக்கிறது. லேட்டஸ்ட் சிக்கல் இது. பொதுவாக விஜய் படத்தின் பாடல்கள் கலக்கு கலக்கென கலக்கும். பட்டிதொட்டியெங்கும் பரவலாக சென்று பரபரப்பாக மாஸ் கிளப்பும். தனது படத்திற்கு இசையமைப்பது யாராக இருந்தாலும், அந்த பாடல்களில் ஒரு எளிமையும் அதிரடியும் இருப்பதை போல பார்த்துக் கொள்வார் விஜய். முழு…
vijay-sad
லைக்கோ, லைக் இல்லையோ? கடந்த ஒரு மாதமாகவே நாளிதழ்களையும் இணையங்களையும் இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறது லைக்கா விவகாரம். தெரியாமல் இதில் சிக்கிக் கொண்ட விஜய், இதிலிருந்து எப்படி விடுபடுவதென தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இயக்குனரையும் அவர் சொல்லும் கதையையும் மட்டுமே நம்பும் ஹீரோக்கள், அந்த இயக்குனர் சொல்லும் நிறுவனத்திற்காக நடிக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் பின்னணியில் இப்படியொரு பகீர் இருக்கிறதென்றால் அதற்கு பாவம்… விஜய்தான் என்ன செய்வார்? இப்படியெல்லாம் அவரது ரசிகர்கள்…
vijay-house
அரசியல் தலைவர்கள் கூட அவ்வப்போது விலை போகலாம். ஆனால் மாணவர்கள்? அவர்கள் வில்லை எடுத்தால், அம்பு பாய்வது நிச்சயம்! தமிழீழ ஆதரவு மாணவர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் மாணவர்கள். அந்த கூட்டமைப்புதான் சமீபகால சில முக்கியமான விவாதங்களை முன் வைக்கிறது. கேள்வி கேட்கிறது. போராடுகிறது. அவர்களின் சமீபத்திய கேள்வி, கத்தியை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய விடலாமா என்பதுதான். கத்தியும், புலிப்பார்வையும் தமிழனால் தடை செய்யப்பட வேண்டிய படங்கள்…
vijay-happy
கலைஞர் ஆட்சியிலிருக்கும் போது எம்ஜிஆர் நடித்த படங்களில் எல்லாம் கலைஞர் ஆட்சியை கண்டந்துண்டமாக கூறு போடுவார். ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் ’ என்றும், ‘தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்’ என்றும் பாட்டாலேயே போட்டுத் தாக்குவார். கலைஞர் மட்டும் சும்மாயிருப்பாரா? எம்ஜிஆர் ஆட்சியிலிருந்த இவர் வசனத்தில் வந்த படங்கள் எல்லாம் எம்ஜிஆரின் ஆட்சியை ரவுண்டு கட்டி…
vijay-lika
‘லைக்கா’ மொபைல் அதிபர் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் தாயார் பிறந்த நாள் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இங்கிருக்கும் ‘கத்தி’ டீம் அத்தனை பேரையும் அழைத்திருந்தார் அவர். தனி பிளைட் போடவும் திட்டமிட்டிருந்தார். அதற்குள் இங்கு செய்தி கசிந்துவிட்டது. ‘ராஜபக்சேவின் கூட்டாளி வீட்டு விசேஷத்திற்கு செல்வதா?’ என்று அத்தனை ஊடகங்களும் அபாய சங்கு ஊத, முருகதாஸ், சமந்தா, அனிருத் ஆகியோர் திட்டத்தை கைவிட்டுவிட்டு கம்பி நீட்டினார்கள். ஆனால் விஜய் மட்டும்…
vijay-aniruth
நல்லவை எங்கிருந்தாலும் அதை சுட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிற வழக்கம், சாமானியர்களுக்கு மட்டுமல்ல, ஏ.ஆர்.முருதாஸ் போன்ற பெரிய மனிதர்களுக்கும் உண்டு போலும். கத்தி படத்திற்காக நல்ல நல்ல பாடல்களாக போட்டுத்தர வேண்டும் என்று அனிருத்தை மேலும் ‘இளைக்க’ வைத்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். அடிப்படையில் ரஹ்மான் போலவே ராக் கோழியான அனிருத்தும், இரவெல்லாம் உறங்காமல் மாய்ந்து மாய்ந்து ட்யூன்களை போட்டுக் கொண்டிருக்கிறார். இது வேணும் அது வேணும்… என்று…
Page 6 of 7« First...34567

all news