aniruth

ARMURUGADOSS-MINJUR GOPI
கிட்டதட்ட ஒரு முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது அந்த வீடியோ பதிவை பார்க்கும் போது. (https://www.youtube.com/watch?v=epiG28XXBaQ) ஒரு பொய் அவ்வளவு சப்தமாக ஒலித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ‘நான் பொய் சொல்லுகிறேன் என்று பேசுவதற்காகவாவது என்னோடு விவாதிக்க தயாரா?’ என்கிறார் கத்தி கதை என்னுடையது என்று கூறிவரும் கோபி. எதிர் தரப்பு கள்ள மவுனம் சாதிக்கிறது. மீடியா முன் தோன்றி விளக்கம் கொடுக்கக் கூட முடியாத அளவுக்கு திணறுகிறார் முருகதாஸ்.…
vijay-vishal
பூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ்! கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன் குதிரைக்கு ஒரு ரேட்! அதன்படிதான் அள்ளுகிறது வசூலும். இருந்தாலும் இந்த மேம்பட்ட நிலையை தங்களுக்கு வாரி வழங்கிய ரசிகர்களை சந்திக்கவில்லை என்றால் எப்படி? சொல்லி வைத்தாற் போல கிளம்பிவிட்டார்கள் இருவரும். விஜய் கோவை…
alexpaul menon
அலெக்ஸ் பால் மேனன். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. கடந்த 2012-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்மா மாவட்ட ஆட்சியராக அலெக்ஸ் பால் பணியாற்றியபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளில் கடத்தப்பட்டு 12 நாட்கள் கழித்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர். இப்போது அதே சத்தீஷ்கர் மாநிலத்தில் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார் அலெக்ஸ் பால். சினிமாக்கள் முதற்கொண்டு அனைத்து விஷயங்களை பற்றியும் இணையத்தளங்களில்…
video-kaththi
 
anirudh-2014
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ரயில் விட்டாங்க. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவா இருந்திருக்கணும். அதனால் ரயில்வே துறையின் பட்ஜெட்ல பெட்ஷீட் விழுந்திருக்கணும். இல்லேன்னா திட்டம் ரத்தாகுமா? கிட்டதட்ட அப்படியொரு ரயில் சேவையை ஆரம்பித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இங்கிருக்கும் டெக்னீஷியன்களை வடக்கு பக்கம் கொண்டு செல்வதுதான் அவரது திட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஷரத்து. (ஐயய்யோ… சரத்குமாரையெல்லாம் அழைச்சுட்டு போகலைங்க. ஷரத்து ஷரத்து!) முதல் கட்டமாக தமிழில் ஹிட்டடித்த மௌன குரு படத்தின் கதையைதான் இந்தியில்…
kaththi-review
சொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள் உயர்த்துகிறார். ‘விவசாயம்தான்டா முதுகெலும்பு. அதையும் இழந்துட்டு எதை வச்சு உயிர் வாழ்வே? என்று கேள்வி கேட்கிறார். டீப் வில்லேஜ் தொடங்கி டாப் சிட்டி வரைக்கும் விஜய்க்கென இருக்கும் மாஸ், இந்த படத்தின் கருத்தை எங்கேயோ கொண்டு போய் சேர்க்கும். அந்த ஒரு…
Thuppakki New Stills
நாளை கத்தி ரிலீஸ். ஆனால் இந்த நிமிடம் வரை பதற்றம் ஓயவில்லை. கத்தியை வெளியிடும் தியேட்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து அவசர கூட்டம் போட்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு விரைந்துள்ள ஐங்கரன் கருணா, கத்தி ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருக்கிறார். தியேட்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் படத்தை எப்படி திரையிடுவது என்று குழம்பி போயிருக்கும் தியேட்டர்காரர்கள் சுணக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்த…
Vijay-Kaththi
கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நேற்று இரவு சுமார் பதினொரு அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதில் சுமூக முடிவையும் எட்டியது கத்தி தயாரிப்பாளர் வட்டாரம். கத்தி விளம்பரங்களில் லைக்கா பெயரை பயன்படுத்துவதில்லை, படத்தின் டைட்டிலில் லைக்கா…
Vijay-Kaththi
தரப்பட்ட போஸ்டரை ஒட்டுவதா, வேண்டாமா? முன் பதிவு தொடங்கலாமா, இல்லையா? இப்படி கேள்வியும் கிறுக்கலுமாக கிடந்த அத்தனை தியேட்டர்களுக்கும் ஆரவார முடிவு கிடைச்சாச்சு. கடந்த இரண்டு நாட்களாகவே செம இழுபறியில் இருந்த கத்தி வெளியீட்டு பிரச்சனை, சற்று முன்னர் முடிவுக்கு வந்ததாக தகவல் பரவுகிறது. தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் தமிழர் சார்ந்த இயக்கங்கள் ‘லைக்கா’ என்ற பெயரை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று…
vishal-kaththi
இன்று காலையிலிருந்தே பற்றிக்கொண்டு எரிகிறது சினிமா வட்டாரம். என்னவாம்? கத்தியை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கத்தி துக்காத குறையாக நின்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. போலீஸ் ஆணையர் அலுவலகத்திலும், வெளியேயும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது பஞ்சாயத்து. மிக பிரபலமான ஒருவர், அதுவும் தியேட்டர் வட்டாரங்களில் முக்கியமான ஒருவர், ‘எனக்கென்ன கட்டிங் தருவீங்க?’ என்கிறாராம் தீடீரென மூக்கை நுழைத்து. கொடுத்தால்தான் தியேட்டர் பக்கம் வர முடியும் என்பது அவரது மிரட்டல்.…
Kaththi triler
kaththi- business
‘இன்னும் ட்ரெய்லர் வர்லீயே அண்ணாச்சி’ என்று விஜய் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்க, ‘ட்ரெய்லர் என்னத்துக்கு? மெயின் பிக்சரே ரெடி’ என்று ஷட்டரை ஓப்பன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் கத்தி தயாரிப்பாளர்கள். படம் வருமா? வராதா? என்கிற வதந்தியை கடைசி நிமிடம் வரைக்கும் பரப்புகிற கோஷ்டி ஒன்று விஜய் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது குழப்பதை ஏற்படுத்தி வந்தாலும், அது யார்? எதற்காக? என்கிற உண்மையையும் கண்டு பிடித்த கத்தி டீம், அமைதியாக கவனித்துக்…
winstar-vijay
போஸ்டர்ல சாணியடிப்போர் சங்கம், பில்லி சூனிய மந்திரவாதிகள் சங்கம், மொத்த விலையில் முடிகயிறு விற்போர் சங்கம், அலறும் குழந்தைகளை அடக்க முடியாதோர் சங்கம்… இப்படி எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ஒரே படம் வின் ஸ்டார் விஜி நடித்த ‘எப்போதும் ராஜா’! ‘கொதிக்கிற அயர்ன் பாக்சுல குடிச்சுட்டு குப்புற விழுந்த மாதிரி ஆளே ஒரு தினுசா இருக்காரு… இவருதான் வின் ஸ்டாரா?’ என்று அவரது புகைப்படத்தை பார்க்கிற அத்தனை பேரும்…
Kaththi Movie Samantha Vijay Stills
கத்தியை பொருத்தவரை இது அடுத்த பாய்ச்சல்தான். கத்தி தீபாவளிக்கு வருமா, வராதா? என்ற எண்ணத்தை வெகுவாக தகர்த்திருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் ட்விட். யெஸ்… கத்தி திரைப்படத்திற்கான சென்சார் ஷோ இன்று சென்னையில் நடைபெற்றது. எந்த காட்சியை நீக்க சொல்வார்களோ? எதை சொல்லி குறுக்கே கட்டையை போடுவார்களோ? என்று கோடம்பாக்கம் திகிலோடு காத்திருக்க, க்ளீன் யூ சர்டிபிகேட் கொடுத்துவிட்டதாம் சென்சார் அமைப்பு. இதை தொடர்ந்து வரிவிலக்கு ஷோ ஒன்றும் தனியாக ஏற்பாடு செய்யப்படும்.…
Kaththi Movie Samantha Vijay Stills
நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். அந்த சிக்கலை மேலும் உறுதி படுத்துவதை போல தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், கத்தியை எதிர்க்கும் தமிழர் அமைப்புகளுக்கான குழுவின் தலைவருமான வேல் முருகன் ‘இந்த பாடல்…
soundarya
நல்ல நேரத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறது ‘கத்தி’யின் போக்கு. விட்டேனா பார்… என்று மொத்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அருவாளை தீட்டிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இருந்தாலும் படத்தின் பாடல் வெளியீட்டு தேதி, மற்றும் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை எவ்வித தொய்வும் இன்றி செய்து கொண்டிருக்கிறது கத்தி டீம். கத்தி- லைக்கா பிரச்சனை ஸ்டார்ட் ஆன அடுத்தடுத்த நாட்களிலேயே இந்த படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை…
aniruth
ஈர்க்குச்சி சைசுக்கு இருந்தாலும், தார் குச்சி போல முன்னேறிவிட்டார் அனிருத். அவரது லேட்டஸ்ட் படமான ‘வேலையில்லா பட்டதாரி’யும் சரியான கலெக்ஷ்ன். ஆளாளுக்கு நான் நீ என்று அனிருத்தின் கால்ஷீட்டுக்காக அடித்துக் கொள்கிறார்கள். விஜய்யின் கத்தி படத்திற்கும் இவர்தான் மியூசிக் என்பதால் இன்னும் கிரேஸ்! போதாத குறைக்கு டைரக்டர் ஷங்கரும் போகிற இடத்திலெல்லாம் அனிருத்தை புகழ்ந்து பேச, ராட்டினம் அந்தரத்திற்கும் மேலே போய், ஆகாயத்தையும் இடிக்க ஆரம்பித்திருக்கிறதாம். வேறொன்றுமில்லை. இந்த புகழுரைகளையும்…
kabilan-lyricist
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் ,இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதிய அனுபவத்தை பற்றி அவரே சொல்கிறார். ஷங்கர் சாருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில் நம்மை அமர வைத்து அந்த பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம்…
vijay sethupathy
சொல்லுகிற வாக்கு பலித்தால் அவருக்கு கரிநாக்கு என்பார்கள். விஜய் சேதுபதிக்கு சரியான (கோழிக்)கறிநாக்கு போல! சொன்னது நடந்து விட்டதே? விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ‘நீங்க யாரையாவது கடத்தணும்னா யாரை கடத்திட்டு போவீங்க?’ என்றொரு கேள்வி. யோசிக்காமல் பதில் சொன்னார் விஜய் சேதுபதி. ‘கண்டிப்பா நயன்தாராவைதான்’ என்று. அதற்கப்புறம் அவரிடம் இது குறித்து கேட்ட மீடியாக்களிடம், ‘சும்மா தோணுச்சு சொன்னேன். அதுக்கு முன் பின் அர்த்தமெல்லாம் கற்பிச்சிராதீங்க’ என்றார். ம்ஹும்… இனி…
RAJINI-ASHWARYA
கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ படத்தின் ‘எடிட் வெர்ஷன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ என்கிறார்களே…. அது எந்த நேரத்தில்? அந்த பிள்ளைகள் பெற்றோரின் பெருமையை காப்பாற்றும் போதுதானே! அந்த வகையில் இந்த படத்தை வெகுவாகவே ரசித்து பாராட்டினாராம் ரஜினி. அதுமட்டுமல்ல, நிஜமாகவே அவருக்கு படம் பிடித்திருந்ததாம். அந்த இனிப்பான நேரத்தில்தான்…
Page 5 of 6« First...23456