anandhi

Pandigai – Adiye Song Promo | Krishna, Anandhi
Kadavul Irukan Kumaru-Review.
kadavul-irukkan-kumaru-review
ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன் ஓட்டிய திறமைக்காக படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்முக்கு, அகில உலக விஞ்ஞானி விருது ரெடி!
GVPrakash-Lyca
டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று இரண்டு படங்களின் கலெக்ஷன், “நான்தாண்டா அடுத்த சிவகார்த்திகேயன்” என்று ஜி.வி.பிரகாஷை கொக்கரிக்க வைத்தது. அவரது ஸ்டுடியோவுக்கு போய் வரும் சினிமாக்காரர்கள் பலர், முகமெல்லாம் இருட்டோடு திரும்பி வருவதுடன், “தம்பியோட பேச்சு தாங்கலையே” என்று காதில் வழியும் ரத்தத்தை கையால் வழித்தெறிவதெல்லாம் சர்வ சாதாரணம். ஏன்? அதான் சொன்னோமே… நான்தான் நெக்ஸ்ட் சிவகார்த்திகேயன் என்று அவர் உதார் விட்ட விஷயத்தை? அப்படியே தனுஷ், சிம்புவோட…
Trisha Illana Nayanthara Official Teaser | G. V. Prakash Kumar, Anandhi
kayal-directors show
கயல் திரைக்கு வந்து சில தினங்களே ஆகியிருக்கிறது. அதற்குள் இந்தோனேஷிய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம். அண்டை நாடுகள் பலவற்றிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக நடந்ததுதான் என்றாலும், சுனாமியின் சீற்றத்தை விலாவாரியாக காட்டிய படம் என்றால் அது கயல்தான். இந்த நேரத்தில் சுனாமி அறிவிப்பு வந்தாலும் வந்தது. பலரும் ‘கயல்’ பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். கன்னியாக்குமரியில் அமைந்திருக்கும் திருவள்ளூவர் சிலையின் உயரத்தை தாண்டியது அலைகள் என்ற பழைய புகைப்பட…
kayal-review
ஆச்சர்யமானது இயற்கை! அதைவிட ஆச்சர்யமானது காதல்! இவ்விரண்டையும் வைத்துக் கொண்டு சித்து விளையாட முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன். அதுதான் கயல்! ஆறு மாதம் கடுமையாக வேலை செய்துவிட்டு கிடைக்கிற பணத்தை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிற இரண்டு நண்பர்கள், போகிற வழியெங்கும் சந்திக்கிற அனுபவங்கள்தான் கதை. புதையலை தோண்டிய இடத்தில் சுற்றிலும் குவிந்துகிடக்கிற மண் போல, படமெங்கிலும் அழகான காட்சிகளை குவித்து வைக்கிறார் டைரக்டர் பிரபு சாலமன். எல்லாவற்றையும் தாண்டியிருக்கும்…
‘தண்ணி’யிலேயே  கிடந்த கயல் ஆனந்தி? in மைனா… கும்கி… அப்புறம்…? இதுதான் பெரிய ரிஸ்க்! ஊர் உலகத்தின் எதிர்பார்ப்பெல்லாம் ‘கயல்’ படத்தின் மீதே இருக்கும். எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கும் பிரபுசாலமன் அதற்கேற்ற மாதிரி பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இந்த படத்தை இயக்கியிருக்கிறாராம். ஊரே வெயிட்டிங்… அதைவிட படு படு பதைப்புடன் கயல் ஆனந்தியும் வெயிட்டிங்! இந்த படம் வெளிவருவதற்குள்ளாகவே வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படமும் களவாணி சற்குணம் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்சினிமாவில் பென்ஷன் வாங்குகிற வயசு…
kayal
இரண்டரை வருடம் ஒரு படத்தை இயக்குவதும், அதற்கும் ஒரு தயாரிப்பாளர் பணத்தை இறைத்துவிட்டு பொறுமையோடு காத்திருப்பதும், ‘வௌங்கிரும்டா…’ டைப்பான அலுப்புதான். ஆனால் பிரபுசாலமன் திரையில் நிகழ்த்திக்காட்டியிருக்கும் அந்த அற்புதத்திற்காக இன்னும் ஐந்து வருடங்களை காவு கொடுக்க சொன்னாலும் கூட தப்பில்லை! மைனா, கும்கி, என்று படத்திற்கு படம் தன் சிறகுகளை விரித்துக் கொண்டே போகும் பிரபுசாலமனின் இந்த கயல், தமிழ்சினிமாவின் மிக மிக முக்கியமான படமாக இருக்கப்போகிறது. நமக்கு திரையிடப்பட்ட…
bala-pooja
‘பாய்ஸ்’ படத்தில் செந்தில் செல்வாரே, ‘இம்பிருமேசன்….’ என்று. அதே ஸ்டைலில் இந்த வார்த்தையை படிக்கவும். ‘ரெகும்டேசன்ன்ன்ன்….’ ‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்திக்குதான் கோடம்பாக்கத்தில் பலத்த ‘ரெகமன்டேஷன்’. இந்த தலையாய பணியை தயங்காமல் செய்து வருகிறார் அப்படத்தின் இயக்குனர் பிரபுசாலமன். இந்த படத்தின் அறிமுக விழாவில் ஆனந்தியின் கண்ணை குளோஸ் அப்பில் காட்டியதோடு சரி. அதற்கப்புறம் ஒன்னையும் காட்டவில்லை அவர். பிரமோஷன் வேலைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தால் திரும்புகிற இடமெல்லாம் ஆனந்தியாக…

all news