ajithkumar

vedalam special-1
கோடம்பாக்கத்தில் இது பேய் சீசன்! நல்லவேளை, ரஜினி கமல் அஜீத் விஜய் தவிர மற்ற எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. சூர்யா வரைக்கும் கூட பேய் கதையில் நடித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் ‘வேதாளம்’ படத்தின் டீஸர் வந்ததும் பற்றிக் கொண்டது ஏரியா. கண்ணா மூச்சு ரே ரே… என்று குளோஸ் அப்பில் அஜீத்தின் உதடுகளும், பற்களும் டயலாக்கை சொல்ல சொல்ல இது பேய் படமாக இருக்குமோ என்ற சந்தேகமே…
veadalam-lakshimenon
ஒத்த கேள்வி, நெத்தி சுருக்க வைக்கும்ல? அப்படியொரு கேள்விதான் இதுன்னு வைங்களேன்? பாசமலர் படத்தின் ஹீரோயின் யாரு? சாவித்ரின்னுதானே பதில் வரும்? சிவாஜி ஹீரோன்னா, அவருக்கு தங்கையாக நடித்த சாவித்ரி எப்படி ஹீரோயினாக முடியும்? அந்தளவுக்கு அந்த தங்கை கேரக்டர் மனசுக்குள் புகுந்து புத்தியை தடுமாற வைக்குது இல்லையா? கிட்டதட்ட அப்படியொரு பதில்தான் வேதாளம் படத்தில் நடித்த லட்சுமிமேனன் விஷயத்திலும் வரப்போகிறது என்கிறார்கள் படத்தை பார்த்தவர்கள். ஹீரோயின் ஸ்ருதியாக இருந்தாலும்,…
ajith-histarical
பாகுபலி ஜுரம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடருமோ தெரியாது. ஆனால் அந்த டைப் படங்களில் கவனம் செலுத்தும் இயக்குனர்களுக்கு கைநிறைய கல்கண்டு கொடுத்தேயாக வேண்டும். ஏனென்றால் இதில் நடிக்கப் போகிற அத்தனை ஹீரோக்களும் முன்னணி இடத்தில் இருப்பவர்கள் மட்டுமே! கொட்டுகிற பணத்தை அறுவடை செய்ய வேண்டும் என்றால், ஜெய்யோ, சிபியோ…. நடக்குமா அதெல்லாம்? இல்லை… அதையெல்லாம் சகிக்கதான் முடியுமா? சரி, விஷயத்துக்கு வருவோம். அறிந்தும் அறியாமலும் துவங்கி சமீபத்தில் வந்த…
Vedalam-deepavali
‘வேதாளம்’ தீபாவளிக்கு வராது! கோடம்பாக்கத்தில் வெகு வேகமாக பரவி வரும் விஷயம் இதுதான். அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, இன்னும் ஆறு நாள் ஷுட்டிங் மீதியிருக்கிறது. செகன்ட் பார்ட் டப்பிங் பணிகளை அஜீத் இன்னும் முடிக்கவேயில்லை. இதையெல்லாம் எப்போது முடித்து எப்போது படத்தை ரிலீஸ் செய்ய? அதனால் இந்த தீபாவளிக்கு அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால் இப்படி வரும் செய்திகளை படித்தும் கேட்டும் பகீர் சிரிப்புக்கு ஆளாகியிருக்கிறதாம் வேதாளம் டீம்!…
anoshka
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று கலாஷேத்ரா! பரதநாட்டிய கலையின் கோவிலாக திகழும் இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட மாணவிகள் வந்து நாட்டியம் கற்றுக் கொள்கிறார்கள். இங்குதான் அஜீத்-ஷாலினி தம்பதிகளின் மகள் அனோஷ்காவும் நாட்டியம் கற்றுக் கொள்கிறாராம். சுமார் 7 வயதாகும் அனோஷ்காவின் முதல் அரங்கேற்றம் நாளை ஞாயிற்றுக் கிழமை இங்கு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் அங்கு படிக்கும் மாணவிகளின் குடும்பத்தினர் கலாஷேத்ராவுக்கு வரும் வழக்கமுண்டு.…
ajith-vedalam
அஜீத்துக்கு ஏதுப்பா தங்கச்சி? என்று அதிர்ச்சியாவார்கள் ரசிகர்கள். அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு மனைவியை தவிர மற்றவங்க எல்லாரும் அக்கா தங்கச்சிங்கதான்! ஆனால் நாம் சொல்ல வந்த விஷயமே வேற… வேதாளம் படத்தின் டீசர் பார்த்தவர்கள் ஓரளவுக்கு யூகித்திருப்பார்கள். அஜீத் உடம்புக்குள் ஆவி புகுந்திருப்பதை! ஆவி படக்கதை சீசன் இது. இந்த ஆவி அல்டிமேட் அஜீத்தை மட்டும் விட்டுவிடுமா என்ன? கண்ணாமூச்சி ரே ரே… என்று அச்சுறுத்த வைத்திருக்கிறது. செம…
ajith-angry-thala56
எவ்வளவு பெரிய டாப் நடிகர்களின் படமாக இருந்தாலும், தண்டவாளத்தில் கப்பல் விட்ட கதையாக விழி பிதுங்கி நிற்பது தயாரிப்பாளர்தான். ஆனால் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் ஷுட்டிங் நின்று முழு பிரேக்கில் இருக்கிறார் அவர். அதற்கு யார் காரணம்? ஒருவருக்கொருவர் சொல்ல முடியாமல் மென்று துப்பிக் கொண்டிருக்கிறார்களாம். பழியை தூக்கி இப்போதைக்கு ஸ்ருதி மீதும், படத்தின் இயக்குனர் சிவா மீது போட்டு வந்தாலும் நிஜமே வேறு என்கிறது நமக்கு…
thala
அஜீத் எந்த டைரக்டரையும் தேடிப் போனதில்லை. அவரிடம் கதை சொல்வதற்காகதான் காத்திருக்கிறார்கள் பலரும். பில்லா, மங்காத்தா வெற்றிகளுக்கு பின்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை. கடந்த பல வருடங்களாகவே இதுதான் நிலைமை. கவுதம் மேனன் ஆகட்டும், வெங்கட் பிரபு ஆகட்டும், வீரம் சிவா ஆகட்டும்… அஜீத் வீட்டு கேட் திறந்தால்தான் எல்லாம் நடக்கும். ஆனால் அவரே  ஐதராபாத் சென்று டைரக்டர் விக்ரம் குமாரை சந்தித்து விட்டு வந்தார்…
ajith-moondru mugam
‘அஜீத்தின் அடுத்த படம் என்ன?’ டி.என்.பி.எஸ் சி தேர்வு தாளில் கூட இப்படியொரு கேள்வியை கேட்டு விடுகிற அளவுக்கு அவரை நெருக்கமாக வாட்ச் பண்ணிக் கொண்டிருக்கிறது ஊர் உலகம். அஜீத்தும், தனது முன்னாள் நண்பரும், சமீபத்திய எதிரியுமான எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு கால்ஷீட் கொடுக்கப் போகிறார் என்றெல்லாம் பேச்சு. ஆனால் எல்லாவற்றையும் காலி பண்ணிவிட்டது அந்த தகவல். ஆமாம்…. சத்யஜோதி நிறுவனத்திற்காக சைன் பண்ணியிருக்கிறாராம் அஜீத். இந்த படத்தை இயக்கப் போவது கே.வி.ஆனந்த்…
ajith-MSV
ஒரு சகாப்தம் முடிந்தது. இனியொரு எம்.எஸ்.வி இந்த மண்ணில் பிறப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனதாலும், நினைவாலும், பழக்கத்தாலும் ஒரு குழந்தையாகவே இருந்தவர் அவர். கவிஞர் வைரமுத்து சொன்னதை போல, அவருக்கு செல்போன் இயக்கத் தெரியாது. டி.வி சேனல் மாற்றத் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் ஆர்மோனியமும் அதில் வழியும் இசையும்தான். யாருக்கும் கெடுதல் நினைக்காத அப்படிப்பட்ட ஒருவரின் இறுதி சடங்குக்கு சென்னையிலிருந்தும் வராத அஜீத்தை என்னவென்று சொல்வது?…
appu
யாரையும் அவர்களே நினைத்துப்பார்க்க முடியாத விதத்தில் ஆச்சர்யமூட்டி பார்ப்பதில் அஜீத்தை விட்டால் ஆளேயில்லை. தினந்தோறும் படப்பிடிப்பில் யாரையாவது கவராமல் போவதேயில்லை அவர். அஜீத் பட ஷுட்டிங்கில் பணியாற்றிய எவரை கேட்டாலும், அஜீத் குறித்த ஒரு நல்ல சம்பவம் வைத்திருப்பார். அப்படியொரு அனுபவமும் சம்பவமும் இப்போது அப்புக்குட்டி வாயால் வருவதில் ஆச்சர்யமில்லைதான். அப்படியென்ன செய்துவிட்டார் அஜீத்? அதை அப்புக்குட்டி என்கிற சிவபாலன் வாயால் கேட்டால்தான் தெரியும். ‘ வீரம் படப்பிடிப்பின் போது…
ajith-batsha
‘தெரியாத்தனமா விக்ஸ் வாங்கிட்டேன். ஜலதோஷமே வா….’ என்பதை விடவும் மோசமாக இருக்கிறது இந்த விஷயம். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அஜீத் நடிக்கும் புதிய படத்தின் கதை என்ன? என்பதுதான் மீடியாக்களின் பெருந்தீனி. பிரபல வார இதழ் ஒன்று, இதுதான் தல 56 கதை என்று பாட்ஷா கதையை அப்படியே எழுதப் போக, கதைக்குரியவர்கள் சும்மாயிருப்பார்களா? பொங்கி எழுந்துவிட்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் தனது ஆபிசுக்கு வந்த நூற்றுக்கணக்கான…
thala ajith
‘என்னவோ தெரியலைப்பா… அவரு இப்பல்லாம் அப்படிதான் நடந்துக்குறாரு’ என்கிறார்கள் அஜீத் குறித்து. அதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்! அதுவும் நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்காக. ‘காதல் கோட்டை’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கு முன்பு வரை அஜீத் ஒன்றும் பெரிய வெற்றிப்பட ஹீரோ இல்லை. அந்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னை சாலிகிராமத்திலிருக்கும் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவர் டப்பிங் பேச பேச, ஸ்பாட்டிலிருந்த டைரக்டர்…
ajith-vijay-reporters
முன்னணி ஹீரோ ஒருவரின் படங்கள் வெளியானால் அந்த ஹீரோவை சந்திப்பதும், அவரிடம் படம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை கேட்பதும் மீடியாவுக்கு பெரிய விஷயமல்ல. சம்பந்தப்பட்ட ஹீரோவும், ‘சந்திக்கலாமே’ என்று பேச முன்வருவார். படப்பிடிப்பில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதில் எழுத தகுதியானதை மட்டும் எழுதி வந்தார்கள் நிருபர்கள். ஆனால் சமீபகாலமாக அந்த இயல்பு கெட்டுப்போயிருக்கிறது. நடிகர்கள் மீடியாவை சந்திக்கவே அஞ்சுகிறார்கள். முன்பெல்லாம் அஜீத்தின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும்…
ajith-vivek
விவேக், அஜீத் படங்களில் நடித்து கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ‘கிரீடம் ’ படத்தில் நடித்திருந்தார். அதற்கப்புறம் கால இடைவெளிகள், சின்ன சின்ன நெருடல்கள் என்று இவரை அவரும், அவரை இவரும் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை. என்ன ஆச்சர்யம்? தான் இயக்கும் படத்தில் விவேக்கையும் நடிக்க வைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் விரும்ப, சந்தோஷமாக ‘யெஸ்’ சொன்னார் அஜீத். சமீபத்தில் ‘சிக்கிம்’ மாநிலத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பினார்கள் இருவரும்.…
ajith-lingusami
எத்தனை அர்னால்டுகள் வந்தாலும் தமிழ்நாட்டை பொருத்தவரை உள்ளூர் அர்னால்டுகளுக்குதான் மவுசு…! ஐ எப்போ என்று கேள்வி கேட்கிற ரசிகர்கள் அடுத்து கேட்பது அஜீத் படம் எப்போ? என்றுதான். இப்படி ஒரேயடியாக மக்கள் மனசில் ஊடுருவியிருக்கும் அஜீத்தின் செல்வாக்கை ‘அப்படியே சாப்பிடலாம்’ என்று ஆசைப்படாத தயாரிப்பாளர்கள் யாராவது உண்டோ? அண்மையில் அஞ்சானில் விழுந்து இமேஜ் சிராய்ப்பு ஏற்பட்டு தவிக்கும் லிங்குசாமிக்கும் அந்த ஆசையிருக்கிறது. ஏற்கனவே அஜீத் நடிப்பில் ‘ஜி’ என்ற படத்தை…
ajith-new-stills
தலைப்பு ரெடி! ஆனால் அஜீத் என்ன சொல்கிறார்? ஆவலோடு காத்திருந்த கவுதம் வாசுதேவ மேனனுக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கும் ஏக திருப்தி. ஏனென்றால் இவர்கள் சொன்ன அந்த தலைப்பை மனப்பூர்வமாக டிக் அடித்துவிட்டாராம் அஜீத். அப்புறமென்ன? அறிவித்துவிட வேண்டியதுதானே…? அங்குதான் ஒரு ஸ்பீட் பிரேக் போட்டிருக்கிறார் ஹீரோ. ‘என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே’ என்றவர் அதற்கான காரணத்தையும் தெள்ளந்தெளிவாக எடுத்து சொன்னபோது ‘ஆமென்’ என்று கூறிவிட்டு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார்கள்…
koopidu-15
நடிகர் நடிகைகளை கையாளும் விதம் செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்து காட்டியதை போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை. உதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி…
Director-shankar-with-Vijay
டைரக்டர் ஷங்கரின் நட்பு வளையத்திற்குள் வருவதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ரிங் மாஸ்டர்தான். ஆனால், சவுக்குக்கு பதிலாக அதில் பூச்சரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படிதான் மென்மையாக பழகுவார். படப்பிடிப்பில் தாம் தும் கூச்சல் இல்லாத டாப் இயக்குனர் ஒரே ஒருவர் என்றால் அது ஷங்கர்தான். அப்படிப்பட்டவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பார்ட்டி கொடுக்கிறார் என்றால், ஆஞ்சநேயர் கோவில் சுண்டல் கடலை மாதிரி அள்ளி அள்ளியா…
koopidu-14
‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியிலிருக்கிற அம்மா உணவகம்தான் இன்று தாய் போல பல உதவி இயக்குனர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய் பேட்டா வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட அந்த பணத்தை சேமித்து வைத்து ஷுட்டிங் இல்லாத நாட்களில் இங்கு…
Page 9 of 10« First...678910

all news