ajithkumar

ajith-MSV
ஒரு சகாப்தம் முடிந்தது. இனியொரு எம்.எஸ்.வி இந்த மண்ணில் பிறப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனதாலும், நினைவாலும், பழக்கத்தாலும் ஒரு குழந்தையாகவே இருந்தவர் அவர். கவிஞர் வைரமுத்து சொன்னதை போல, அவருக்கு செல்போன் இயக்கத் தெரியாது. டி.வி சேனல் மாற்றத் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் ஆர்மோனியமும் அதில் வழியும் இசையும்தான். யாருக்கும் கெடுதல் நினைக்காத அப்படிப்பட்ட ஒருவரின் இறுதி சடங்குக்கு சென்னையிலிருந்தும் வராத அஜீத்தை என்னவென்று சொல்வது?…
appu
யாரையும் அவர்களே நினைத்துப்பார்க்க முடியாத விதத்தில் ஆச்சர்யமூட்டி பார்ப்பதில் அஜீத்தை விட்டால் ஆளேயில்லை. தினந்தோறும் படப்பிடிப்பில் யாரையாவது கவராமல் போவதேயில்லை அவர். அஜீத் பட ஷுட்டிங்கில் பணியாற்றிய எவரை கேட்டாலும், அஜீத் குறித்த ஒரு நல்ல சம்பவம் வைத்திருப்பார். அப்படியொரு அனுபவமும் சம்பவமும் இப்போது அப்புக்குட்டி வாயால் வருவதில் ஆச்சர்யமில்லைதான். அப்படியென்ன செய்துவிட்டார் அஜீத்? அதை அப்புக்குட்டி என்கிற சிவபாலன் வாயால் கேட்டால்தான் தெரியும். ‘ வீரம் படப்பிடிப்பின் போது…
ajith-batsha
‘தெரியாத்தனமா விக்ஸ் வாங்கிட்டேன். ஜலதோஷமே வா….’ என்பதை விடவும் மோசமாக இருக்கிறது இந்த விஷயம். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அஜீத் நடிக்கும் புதிய படத்தின் கதை என்ன? என்பதுதான் மீடியாக்களின் பெருந்தீனி. பிரபல வார இதழ் ஒன்று, இதுதான் தல 56 கதை என்று பாட்ஷா கதையை அப்படியே எழுதப் போக, கதைக்குரியவர்கள் சும்மாயிருப்பார்களா? பொங்கி எழுந்துவிட்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் தனது ஆபிசுக்கு வந்த நூற்றுக்கணக்கான…
thala ajith
‘என்னவோ தெரியலைப்பா… அவரு இப்பல்லாம் அப்படிதான் நடந்துக்குறாரு’ என்கிறார்கள் அஜீத் குறித்து. அதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்! அதுவும் நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்காக. ‘காதல் கோட்டை’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கு முன்பு வரை அஜீத் ஒன்றும் பெரிய வெற்றிப்பட ஹீரோ இல்லை. அந்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னை சாலிகிராமத்திலிருக்கும் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவர் டப்பிங் பேச பேச, ஸ்பாட்டிலிருந்த டைரக்டர்…
ajith-vijay-reporters
முன்னணி ஹீரோ ஒருவரின் படங்கள் வெளியானால் அந்த ஹீரோவை சந்திப்பதும், அவரிடம் படம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை கேட்பதும் மீடியாவுக்கு பெரிய விஷயமல்ல. சம்பந்தப்பட்ட ஹீரோவும், ‘சந்திக்கலாமே’ என்று பேச முன்வருவார். படப்பிடிப்பில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதில் எழுத தகுதியானதை மட்டும் எழுதி வந்தார்கள் நிருபர்கள். ஆனால் சமீபகாலமாக அந்த இயல்பு கெட்டுப்போயிருக்கிறது. நடிகர்கள் மீடியாவை சந்திக்கவே அஞ்சுகிறார்கள். முன்பெல்லாம் அஜீத்தின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும்…
ajith-vivek
விவேக், அஜீத் படங்களில் நடித்து கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ‘கிரீடம் ’ படத்தில் நடித்திருந்தார். அதற்கப்புறம் கால இடைவெளிகள், சின்ன சின்ன நெருடல்கள் என்று இவரை அவரும், அவரை இவரும் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை. என்ன ஆச்சர்யம்? தான் இயக்கும் படத்தில் விவேக்கையும் நடிக்க வைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் விரும்ப, சந்தோஷமாக ‘யெஸ்’ சொன்னார் அஜீத். சமீபத்தில் ‘சிக்கிம்’ மாநிலத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பினார்கள் இருவரும்.…
ajith-lingusami
எத்தனை அர்னால்டுகள் வந்தாலும் தமிழ்நாட்டை பொருத்தவரை உள்ளூர் அர்னால்டுகளுக்குதான் மவுசு…! ஐ எப்போ என்று கேள்வி கேட்கிற ரசிகர்கள் அடுத்து கேட்பது அஜீத் படம் எப்போ? என்றுதான். இப்படி ஒரேயடியாக மக்கள் மனசில் ஊடுருவியிருக்கும் அஜீத்தின் செல்வாக்கை ‘அப்படியே சாப்பிடலாம்’ என்று ஆசைப்படாத தயாரிப்பாளர்கள் யாராவது உண்டோ? அண்மையில் அஞ்சானில் விழுந்து இமேஜ் சிராய்ப்பு ஏற்பட்டு தவிக்கும் லிங்குசாமிக்கும் அந்த ஆசையிருக்கிறது. ஏற்கனவே அஜீத் நடிப்பில் ‘ஜி’ என்ற படத்தை…
ajith-new-stills
தலைப்பு ரெடி! ஆனால் அஜீத் என்ன சொல்கிறார்? ஆவலோடு காத்திருந்த கவுதம் வாசுதேவ மேனனுக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கும் ஏக திருப்தி. ஏனென்றால் இவர்கள் சொன்ன அந்த தலைப்பை மனப்பூர்வமாக டிக் அடித்துவிட்டாராம் அஜீத். அப்புறமென்ன? அறிவித்துவிட வேண்டியதுதானே…? அங்குதான் ஒரு ஸ்பீட் பிரேக் போட்டிருக்கிறார் ஹீரோ. ‘என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே’ என்றவர் அதற்கான காரணத்தையும் தெள்ளந்தெளிவாக எடுத்து சொன்னபோது ‘ஆமென்’ என்று கூறிவிட்டு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார்கள்…
koopidu-15
நடிகர் நடிகைகளை கையாளும் விதம் செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்து காட்டியதை போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை. உதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி…
Director-shankar-with-Vijay
டைரக்டர் ஷங்கரின் நட்பு வளையத்திற்குள் வருவதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ரிங் மாஸ்டர்தான். ஆனால், சவுக்குக்கு பதிலாக அதில் பூச்சரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படிதான் மென்மையாக பழகுவார். படப்பிடிப்பில் தாம் தும் கூச்சல் இல்லாத டாப் இயக்குனர் ஒரே ஒருவர் என்றால் அது ஷங்கர்தான். அப்படிப்பட்டவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பார்ட்டி கொடுக்கிறார் என்றால், ஆஞ்சநேயர் கோவில் சுண்டல் கடலை மாதிரி அள்ளி அள்ளியா…
koopidu-14
‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியிலிருக்கிற அம்மா உணவகம்தான் இன்று தாய் போல பல உதவி இயக்குனர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய் பேட்டா வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட அந்த பணத்தை சேமித்து வைத்து ஷுட்டிங் இல்லாத நாட்களில் இங்கு…
goutham-menon
எப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ ஸ்லோ… என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். அஜீத் படத்திற்கும் அதே நிலைமை வந்ததுதான் யாராலும் ஜீரணிக்க முடியாத‘ ஐயோடா… ’ தீபாவளிக்கு படத்தை வெளியிட்டு விடணும் என்ற கண்டிஷனோடுதான் அவரை ஒப்பந்தமே செய்தார் ஏ.எம்.ரத்னம். இப்போது போகிற வேகம் அப்படி தெரியவில்லையாம். பிரச்சனை…
ajith-surya-dhanush
அதி தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, ஆவரேஜ் ரசிகர்கள் கூட இல்லையென்றால் ஒரு ஹீரோ கண்டிப்பாக ஜீரோதான். இந்த உண்மையை அவ்வப்போதுஆணி அறைந்து நிரூபித்து வருகிறது காலம். இப்போதெல்லாம் எந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாக்கள் என்றாலும், மேல் மாடியை ரசிகர்களுக்காக ஒதுக்கிவிடுகிறார்கள் ஹீரோக்கள். பேசும்போது அவர்களை நோக்கி அண்ணாந்து பார்த்துக் கொண்டே பேசுகிறார்கள். தனியார் தொலைக்காட்சிக்காக கவரேஜ் செய்ய வரும் ஒளிப்பதிவாளர்கள், ‘அண்ணேய்… இங்க பார்த்து பேசுங்க, இல்லேன்னா நார்மலா…
Ajith family
சொல்லெல்லாம் இனிப்பு, சுவையெல்லாம் இனிப்பு என்றாகிக் கிடக்கிறது அஜீத் வட்டாரம். அவர்களுக்கு கிடைத்த நல்ல செய்தி அப்படி. அஜீத் மீண்டும் அப்பாவாக போகிறாராம். மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது இந்த தகவல்! காரணம், மீடியாவில் இப்படியெல்லாம் செய்திகள் வருவதை அஜீத் விரும்ப மாட்டார் என்பதால்தான். ஆனால் சில முக்கியமான செய்திகளை எப்படி பாதுகாத்தாலும் வெளிவராமல் தடுக்க முடியாதே? அப்படி கசிந்ததுதான் இந்த தகவல். மகள் அனோஷ்கா பிறந்ததிலிருந்து அந்த குழந்தையை…
ajith-new-film
சென்னையின் அடையாளமாக கருதப்படுவது மவுண்ட் ரோடு. ஒரு டைனோசரின் முதுகு தண்டை போல நீண்டு கிடக்கும் இந்த சாலையின் இப்போதைய கதி? மெட்ரோ ரயில் சினேகிதர்களின் கைங்கர்யத்தில் உருவான பள்ளம் மேடுகள்தான். கடந்த வாரம் நள்ளிரவில் சாலை அப்படியே ஓரிடத்தில் உள் வாங்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். நல்லவேளையாக அந்த நேரத்தில் ஒரு டூ விலர் கூட அந்த இடத்தை கிராஸ் செய்யாதது ‘அம்மா’ செஞ்ச புண்ணியம். இல்லையென்றால் சட்டசபையில் அதற்கும்…
thala-thalapathy
தெரிந்தோ தெரியாமலோ அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை எழுப்பி, அவர் விஜய்தான் என்ற முடிவையும் கொடுத்தது பிரபல வார இதழான குமுதம். இதையடுத்து நாடு முழுவதுமிருக்கிற அஜீத் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலமான கொந்தளிப்பு நிலவி வருகிறது. அஜீத் வீட்டிற்கு தபால் எடுத்து வரும் தபால்காரர் தனியாக போர்ட்டர் வைக்க வேண்டிய அளவுக்கு கண்ணீர் கடிதங்கள் நிரம்பி வழிகிறதாம். ‘எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டங்களின் மீதெல்லாம் விருப்பம்…
Page 12 of 12« First...89101112

all news