ajithkumar

Adlee with Ajith
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன்… இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது. அஜீத்தின் ஆடிட்டர்தான், அட்லீயின் அப்பா! தெறி படம் வெளி வருவதற்கு முன்பே, அட்லீயின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கு சர்ப்பரைஸ் விசிட் அடித்தார் விஜய். “என் பிறந்த நாள் கிஃப்ட் இதுதான். சீக்கிரம் ஒரு கதையை சொல்லுங்க. உங்களுக்கு என் கால்ஷீட் எப்பவும் உண்டு!” கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், ஒரு படைப்பாளிக்கு இதுதானே பேரின்பம்?…
thala57
இன்று கொழுத்த முகூர்த்த நாள். சும்மாவே ஆயிரம் சென்ட்டிமென்ட் பார்க்கும் சினிமாக்காரர்களுக்கு சொல்லவா வேண்டும்? கோடம்பாக்கத்தில் திரும்பிய இடமெல்லாம் தீபாராதனை! நடிகர் விக்ரம் பிரபு சொந்தப்பட நிறுவனம் ஒன்றை இன்று படு விமரிசையாக தொடங்கினார். ஏற்கனவேதான் சிவாஜி புரடக்ஷ்ன் இருக்கு. அப்புறம் இன்னாத்துக்காம்? என்று சிலர் மோவாயை திருப்பினாலும், அவரோட திட்டமே வேற என்ற கிசுகிசுப்பும் கேட்கிறது. பெரிதாக ஒன்றுமில்லை… அவரது மார்க்கெட் வேல்யூ என்பது அவருக்கே தெரியவில்லையாம். அவர்…
FMS_Ajith
அஞ்சும் அஞ்சும் எட்டுன்னா கூட மன்னிச்சுடலாம். அஞ்சும் அஞ்சும் அறுபது என்றால் எப்படியய்யா? ஐங்கரன் நிறுவனத்தின் ஆதாரபூர்வமான வெப்சைட் வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கு, அஜீத் ரசிகர்களின் வயிற்றில் அடுப்பை மூட்டி, அதில் நம்பிக்கையை போட்டு வறுத்துக் கொண்டிருக்கிறது. நிஜமா, பொய்யா என்று தெரியாமல் தடுமாறிப் போயிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் கோடம்பாக்கம் சொல்கிற கணக்கு, ஐங்கரன் கணக்கை ஐயோ பாவம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. அண்மையில் வெளியான அஜீத்தின் வேதாளம் மலேசியாவில் 165…
Aaluma Dolumaa
நேற்று ராத்திரி ஒரு பன்னிரெண்டு மணி இருக்கும். அப்ப தான் அந்த அற்புதமான கானம் என் காதில் விழுந்தது. அதோட அர்த்தத்தை ஆழமா சிந்திச்சதில் மீதி ராத்திரிக்கு என் தூக்கமே போச்சு. படக்குன்னு எழுந்து உட்கார்ந்திட்டேன்ல *ஆலுமா டோலுமா ஈஸாலங்கடி மாலுமாபேச்சு கலீஜ்ஜின்னா கிராக்கி விட்டா சாலுமா அரிகல்லுதெரிகல்லு கொத்து விட்டா கலக்கலு* அதாவது ஆல் என்றால் ஆல மரம். டோல் என்பது டோலக்கு செய்ய உதவும் கடம்பு மரம்.…
Ajith-AIADMK
தேர்தல் திருவிழா முடிந்தாலும் செண்டை மேள கச்சேரி முடிய இன்னும் சில காலம் ஆகும் போலிருக்கிறது. 6 வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொள்ளும் ஜெ.வை வாழ்த்த திரையுலகம் க்யூ கட்டி நிற்கிறது. அம்மா… தேவை ஒரே ஒரு அப்பாயினிட்மென்ட் என்று சினிமா சங்கங்கள் அத்தனையும் கடிதம் கொடுத்துவிட்டு காத்துக் கிடக்கின்றன. அது ஒருபுறமிருக்க, முதல்வர் பொறுப்பேற்றுக் கொள்ளும் அந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்ட பல்வேறு…
AIADMK Ajith
கடிகாரத்தை தின்று விட்டு காலண்டரை விரித்துதான் தூங்கும் கொக்கு! ஏன்? உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்கணுமா வேணாமா? அதனால்தான்.. அப்படியொரு கொக்காக காத்திருந்தார் அஜீத் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அஜீத் நடித்து விரைவில் துவங்குவதாக சொல்லப்பட்டிருக்கும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1 ந் தேதி துவங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் இன்னும் என்று நாட்களை கடத்தி வந்தார் அவர். இன்னொரு பக்கம் கதையில்…
ஓட்டுப்போட வந்த அஜீத்தை சூழ்ந்து கொண்ட பொதுஜனம்
Ritigasingh with Ajith
நயன்தாரா, த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட சுமார் ஒரு டசன் ஹீரோயின்களை லிஸ்டிலிருந்து நீக்கிவிட்டார் அஜீத். வர வர கதைக்கு மட்டுமல்ல, கதையின் நாயகிக்கும் கூட அஜீத் அதீத அக்கறை காட்டி வருகிறார் அல்லவா? அதை தொடர்ந்துதான் இந்த கன்னாபின்னா டெலிட்! அவரது படத்திற்கு எப்படி தலைப்பு தேடுவார்களோ, அதைவிடவும் பெரிய கஷ்டமாக இருக்கிறதாம் ஹீரோயின் செலக்ஷன். ஒவ்வொரு உதவி இயக்குனரும் பொருத்தமான பத்து கதாநாயகியை லிஸ்ட் செய்ய வேண்டும். அது…
Santhanam With Ajith
சந்தானம் ஹீரோவான நாளில் இருந்தே, ஒட்டடை படிந்து உருத்தெரியாமல் போகின்றன பல யங் ஹீரோக்களின் படங்கள்! சந்தானம் இல்லேன்னா என்ன? சதீஷ், கருணாகரன், இடிச்சப்புளி ஜெகன், கொடுக்காப்புளி கோவிந்தன் என்று இருக்கிறவங்களை வச்சு சமாளிச்சுக்கலாம் என்று கணக்கு போட்டவர்களுக்கு, அசலும் தேறவில்லை. அண்டாவும் கொதிக்கவில்லை. இந்த நேரத்தில் அந்த வடிவேலுவும் முறுக்கிக் கொண்டதால், அல்மோஸ்ட் ரிட்டையர் ஆன விவேக்கை மீண்டும் கெஞ்ச வேண்டிய நிலைக்கு ஆளானது இன்னொரு கூட்டம். இன்டஸ்ட்ரியை…
ajith shooting news
கோடம்பாக்கத்தில் உலவிய தகவல்களின் படி பார்த்தால் கூட இந்நேரம் பாதி கிணறை தாண்டியிருக்க வேண்டும் சிவாவும் அஜீத்தும். ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு இவ்விருவரும் இணையும் படத்தின் ஷுட்டிங் இப்போது மே தாண்டி, ஜுன் தாண்டி, ஜுலைக்கு போயிருக்கிறது. அதுவும் தாண்டுமா என்பதை இப்போதைக்கு உறுதிபடுத்த முடியாது என்றாலும், அவ்வளவு தயக்கத்திற்கும் காரணம் சென்டிமென்ட்தான் என்கிறது அஜீத்தின் புதுப்பட வட்டாரம். மே 1 ந் தேதி அஜீத்தின் பிறந்த நாளில்…
Thala story
அஜீத்தின் அடுத்தப்பட அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி சோல்ஜர்களும் எக்கச்சக்க வெயிட்டிங்! இந்த நிலையில் வேதாளம் பட இயக்குனர் சிவா அடுத்த கதையை இன்னும் இன்னும் என்று மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம். நடுவில் அவருக்கு ஒரு திட்டம் அல்லது யோசனை. அதை அஜீத்திடம் கேட்டு உறுதி செய்து கொண்டு மேற்கொண்டு டெவலப் செய்யலாம் என்று நினைத்தாராம். அதற்கு அஜீத் சொன்ன பதில்தான், பின்னாலேயே வெயிட்டிங்கில் இருக்கும் விஷ்ணுவர்த்தனை செமத்தியாக போட்டு…
sivalinga Rajini
“கருவிதான் மாறியிருக்கு. கதை அதேதான்!” சினிமாவை மாத்துறோம் என்று மல்லுக்கட்டும் வித்தியாச இயக்குனர்கள் தெருவுக்கு தெரு கும்பலாக கிளம்பி வரும் இந்த நாளில், இயக்குனர் பி.வாசு சொன்ன சின்ன தத்துவம்தான் இது. “அம்மாவை அம்மான்னுதான் சொல்ல முடியும். புதுமை பண்றேன்னு அம்மாவை படம் முழுக்க சும்மான்னு சொல்ல முடியாதுல்ல?” பி.வாசுவின் இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது அறிவுஜீவி இயக்குனர்கள்தான். போகட்டும்… விஷயம் அதுவல்ல. சினிமாதான் தன் மூச்சு என்று…
Uthayanith Ajith
ஒட்டுமொத்த நடிகர் நடிகைகள் மனசும் இந்தியா பாகிஸ்தானின் ஒன் டே மேட்ச் கிரவுண்ட் போலவே விறுவிறுத்துக் கிடக்கிறது. நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியால், உள்ளுக்குள் இன்னொரு போட்டி உருவாகி தலை ஒருபக்கமும் வால் இன்னொரு பக்கமுமாக இரண்டு தரப்பினரின் கைகளில் சிக்கி அல்லோலப்படுகிறது. இதில் யார் யாரை கவிழ்ப்பார்கள் என்ற போட்டி முடிவு ஒருபக்கம் இருக்கட்டும். அவ்வளவு பரபரப்பிலும் ஒருவர் வர்லீயே… அது ஏன்ப்பா? என்று கேட்டு வந்தார்கள்…
aaluma doluma
திகுதிகுவென பற்றிக் கொண்டு நிற்கும் தேர்தல் சூட்டை விட கடுமையாக சுட்டுக் கொண்டிருக்கிறது நடிகர் சங்க விவகாரம். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வராததும், அவரது ரசிகர்கள் இந்த போட்டியை புறக்கணித்ததும் பெரிய விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழகத்தில். இந்த நிலையில்தான் அந்த கொடும் கலவரத்தில் கொள்ளை கொள்ளையாய் கடுகை அள்ளிப் போட்டு தாளித்துவிட்டது இன்னொரு விவகாரம். இந்த நட்சத்திர கிரிக்கெட் முடிந்ததும் தேனாம்பேட்டையிலிருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது.…
Ajith-Vishal-war
அஜீத் வர மாட்டார் என்பதற்காகவே அவர் போகாத இடத்தை ‘போக்கற்ற’ இடமாக்குகிற கொடுமை, இனி வரும் காலங்களிலும் நீடிக்கும் போல தெரிகிறது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கட்டி சுண்ணாம்பு கூட என் கையால் தர மாட்டேன் என்று இருக்கும் அஜீத்திற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பொங்குவது ஒன்றும் தப்பில்லை. அது அவர்கள் தன் தலைவரிடம் கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அதற்காக விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளை தொடர்ந்து…
Ajith-Vishal
நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் இன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட்டில் அஜீத் மற்றும் சிம்பு இருவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வரும் செய்திகளையும், அது தொடர்பான விவாதங்களையும் கருத்தில் கொண்டுதான் இது வெளியிடப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக உணர முடிகிறது. நடிகர் சங்கமே தனக்கு ஆதரவான சிலரது உதவியுடன் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது அதிலிருக்கும் விஷயங்கள். இதோ…
Ajith-May1st
நடிகர் சங்கம் சார்பில் நடக்கவிருக்கும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கெல்லாம் விடை தெரிந்து பல மணி நேரம் ஆச்சு! “….டாரு, …மாட்டாரு, ….வரமாட்டாரு, ….வரவே மாட்டாரு” என்பதாக முடிந்துவிட்டது அந்த எதிர்பார்ப்பெல்லாம்! “அவர் கால் இன்னும் குணமாகலே” என்று இப்போதைக்கு பதில் சொல்லப்பட்டிருக்கிறதாம் நடிகர் சங்கத்திற்கு. இது ஒரு புறமிருக்க, அஜீத்தின் புதிய படத்துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறதாம் சத்யஜோதி பிலிம்ஸ்.…
Ajith-AMRatnam
‘தனியொருவன்’ என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்தக்கூடிய ஒரே ஸ்டார் அஜீத் மட்டும்தான்! தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தே பழகிவிட்டாரா, அல்லது பழக்கப்படுத்திவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் உறுப்பினாராக இருக்கும் நடிகர் சங்க தேர்தலுக்கே ஓட்டுப் போட வரவில்லை அவர். அதற்கான சரியான காரணம் இன்று வரை யாருக்கும் தெரியவும் இல்லை. “பெரிய ஹீரோவாச்சே… ஏன் சார் வரலே” என்று கேட்கிற திராணியும் நடிகர் சங்கத்திற்கு இல்லை. இதெல்லாம்…
Ajith-Jai
சமீபகால விஜய் படங்களில் எல்லாம் லேசாக அரசியல் எட்டிப் பார்க்கும். ஆனால் அதற்கான அவஸ்தையை அந்தந்த படங்களின் ரிலீசின்போதே பார்த்துவிடுவார் அவர். திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி. விஜய்க்கு ஏழரையை கூட்டாமல் படத்தை ரிலீஸ் செய்யவிட்டதில்லை அவர்கள். இன்று நேற்றல்ல, எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் தொடங்கி, தேசிய கீதம் எடுத்த சேரன் வரைக்கும் இப்படியெல்லாம் தொல்லை வந்து சேர்ந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்துதான் அரசியல் நையாண்டி…
Ajith-Rithvik
அஜீத்தின் மொபைல் நம்பர் என்னவென்பது செவ்வாய் கிரகத்தில் சில பேருக்கும், கோடம்பாக்கத்தில் சில பேருக்கும் மட்டுமே தெரிந்த தேவ ரகசியம். அந்த நம்பர் தெரிந்தவர்கள் அதை, ‘இந்தாங்க’ என்று மற்றவர்களுக்கு ஷேர் பண்ணி, அவர்கள் ஷேர் பண்ணிய விஷயம் அஜீத்திற்கு தெரிந்தால் நம்பர் கொடுத்த நபரை தன் பிரண்ட்ஸ் லிஸ்ட்டிலிருந்து (?) நிமிஷத்தில் நீக்கிவிடுவார். இதை தெரிந்து வைத்திருக்கும் அந்த சில பேரும், விஜயகாந்தே கம்ப ராமாயணத்தை பற்றி அரை…
Page 10 of 13« First...89101112...Last »

all news