ajith

parvathi
“முன்பெல்லாம் யார் கூட நடிக்கணும்னு ஆசை?” என்ற கேள்வியை கேட்டால் ரஜினியுடன் என்பார்கள் நடிகைகள். இப்போது அப்படியே உல்டா! அஜீத் சாருடன் நடிக்கணும் என்றோ, விஜய் சாருடன் நடிக்கணும் என்றோ இன்ஸ்ட்டன்டாக ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு படத்தில் அவருடன் நடித்தாலும், ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒருமுறை பார்த்ததோடு சரி. இன்னமும் அஜீத் அஜீத் என்று கனவிலும் நினைவிலும் ‘கரைந்து’ கொண்டிருக்கிறார் பார்வதி நாயர். என்னை அறிந்தால் படத்தில் அருண்…
ajithajith
அஜீத்தின் இமை அசைகிற இடத்தை பார்த்து அதற்கேற்ப அசைகிறவர் டைரக்டர் சிவா! “சினிமாங்கறது ஏதோ பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குகிற பயணம் அல்ல. குறைந்தது ஆறு மாதங்களாவது ஒரே திசையில் பயணம் செல்கிற வேலை. அதுக்கு டைரக்டர், புரட்யூசர், ஹீரோ மூணு பேருக்கும் வேவ் லெங்க்த் ஒண்ணாயிருக்கணும். அப்பதான் லாங் டிராவல் போக முடியும்” என்பதுதான் அஜீத்தின் பாலிஸி. தன் மனசுக்குள் இறங்கி மகுடி வாசிக்காத எவரையும் கிட்டே…
Ajith next
அவர் பாட்டுக்கு சிவனே என்றுதான் இருக்கிறார். ஆனால் செய்திகள்தான் றெக்கை கட்டி பறக்குது! “நீங்க கதை பண்ணுங்க. தயாரிப்பாளர் நான் சொல்றேன்” என்று வேதாளம் சிவாவிடம் சொல்லிவிட்டு தினம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார் அஜீத். அதெப்படி? அவர் வீட்டிலேயே ஒரு பிரமாதமான தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. யுஎஃப்ஓ, விஎப்எக்ஸ் மூலம் அவ்வப்போது ரிலீஸ் ஆகும் புதுப்படங்களை அதே சூடு குறையாமல் பார்த்துவிடுகிறார் அஜீத். சில தினங்களுக்கு முன் ரிலீசான ‘ரஜினி…
Ajith Fans threternd
விட்டால் நாக்கில் தீச்சட்டி ஏந்துவார்கள் போலிருக்கிறது அஜீத் ரசிகர்கள். ஏன்? விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் நிகழ்ச்சி அப்படி! கடந்த பல வருடங்களாகவே அஜீத் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஒரு வெட்டு குத்து நடந்து கொண்டேயிருக்கிறது. இது குறித்து கவலைப்படாத பத்திரிகைகளோ, ஊடகங்களோ இல்லை எனலாம். அப்படியிருந்தும் இந்த குழாயடி சண்டையில் குடுமியை கொடுப்பானேன் என்று அட்வைசோடு கிளம்பிவிடுகிற ஊடகங்களுக்கு நடுவில், நிஜமாகவே அக்கறை எடுத்து இவ்விரு ரசிகர்களையும் ஓரிடத்தில்…
politics ajith
ஆறே சதவீதம் ஓட்டு வங்கி வைத்திருக்கிற விஜயகாந்த்தை, ‘விஷய’காந்தாக கருதி ஒட்டுமொத்த தமிழ் நாட்டு அரசியலும் அவரது வீட்டை சுற்றி சுற்றியே இருக்கிறது. அவரோ வந்தவங்களுக்கு நாலு பிரட்டும் ஒரு வாட்டர் பாட்டிலும் கொடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். தேறியது அவ்ளோதானா, அதற்கும் மேலா? என்பதை தேர்தல் நிவாரணம்(?) கேட்டுப் போன அந்த அரசியல் கட்சிகள்தான் சொல்ல வேண்டும். அதற்குள் கடந்த நான்கு நாட்களாக வேறொரு செய்தி வந்து உலுக்கிக் கொண்டிருக்கிறது…
vedalam 2015
பின்னே ஏன்யா கார்த்திக் சுப்புராஜை வெறுங்கையோடு அனுப்பி வைக்க மாட்டார்? யெஸ்… அஜீத்தை சந்தித்து கதை சொன்ன கார்த்திக் சுப்புராஜிடம், “இந்த கதையில் நடிப்பதை பற்றி நான் நிறைய யோசிக்கணும்” என்று நாசுக்காக சொல்லியனுப்பிவிட்டார் அஜீத். ஏன் இப்படியொரு பதில்? அவர் நல்ல இயக்குனர்தானே? அவர் படத்தில் அஜீத் நடித்தால், நல்ல பெயர் கிடைக்குமே? என்றெல்லாம் அஜீத் ரசிகர்கள் யோசித்திருக்கலாம். கடந்த வருடத்தில் வெளியான அத்தனை படங்களின் கலெக்ஷன் ரிப்போர்ட்டையும்…
Om namasivaya
‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்! இந்த தலைப்பில் வெளியான புத்தாண்டு தின செய்தியில் அஜீத் விவகாரம் அடுத்த நாள் தொடர்கிறது… என்று கூறியிருந்தோம் அல்லவா? http://www.newtamilcinema.com/rajith-than-ajith/ இதோ அது- லிங்காவுக்கு பின் ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வர சற்றே தாமதம் ஆனதைதான் நாடு அறியுமே? நடுவில் லிங்காரவேலன் அண் கோவினரின் குழப்பத்தால் அப்செட் ஆகியிருந்தார் ரஜினி. விரைவில் ஒரு குதிரைப்பாய்ச்சல் நடத்த வேண்டும் என்று திட்டமிட்ட…
superstar rajini
இதை புத்தாண்டு ஸ்பெஷலாக வைத்துக் கொள்ளுங்களேன்… லிங்கா படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்! ரஜினிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார் சரவணன். பிரபல மேக்கப் மேன் பானுவின் உதவியாளர் இவர். கோடிக்கணக்கான ரசிகர்களை கும்பிட வைக்கிற முகம். எவ்வளவு பயபக்தியோடும் பணிவோடும் நடக்க வேண்டும் அது? அப்படிதான் நடந்தது. ஆனால் மேக்கப் போடுகிற சமயத்தில் அவருக்கு ஒரு போன் வர, அதை எடுப்பதா? வேண்டாமா? பெரும் குழப்பத்தோடு தவித்த சரவணனிடம், “போனை எடுத்துப்…
2016 predictions
ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங்…
black and white
எதை தின்றால் பித்தம் தெளியும் என்றுதான் இருக்கிறது பலரது சினிமா முயற்சிகள். புதுசாக முயலலாம். ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை என்றால்? அதனால் பழசையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதும் இதே ஏரியாவில்தான்! தலைப்பு வைக்கிற விவகாரத்தில் கூட, முழுசாக ஒரு முடிவுக்கு வர முடியாதளவுக்கு ஆயிரம் யோசனைகள், இடைஞ்சல்கள். இந்த நேரத்தில்தான் ஒரு புதிய முயற்சியாக ‘பிளாக் அண்ட் ஒயிட்’ படம் ஒன்றில் நடிக்கலாமா என்று யோசித்து வருகிறாராம் அஜீத்.…
ajithvijay
நெஞ்சை பிளந்து ராமன் சீதையை காட்டுகிற அனுமனாக நாம் நினைத்துக் கொண்டிருந்த பல ஹீரோக்களின் நெஞ்சில், ராமனும் இல்லை. ரசிகனும் இல்லை. ஈரமும் இல்லை. நேசமும் இல்லை என்பதை தெளிவாக்கிவிட்டு போனது நம்ம சென்னை வெள்ளம்! கொடுக்க மனசில்லாமல் முக்கி முனகியபடி அவர்கள் கொடுத்த உதவித் தொகை குறித்த வயிற்றெரிச்சல் இன்னும் பல ஏரியாக்களில் வற்றவே இல்லை. அதற்குள் அஜீத் 60 லட்சம் கொடுத்தார். விஜய் மூன்று கோடி கொடுத்தார்…
vedalam siva ajith
நாம் ஏற்கனவே அரசல்புரசலாக எழுதியிருந்த விஷயம்தான்! http://www.newtamilcinema.com/is-it-fact/ ஆனால் இன்னும் கூட அதே நிலையில்தான் இருக்கிறதாம் சோதனையும் வேதனையும்! வேதாளம் படத்தின் வெற்றியை ‘ஸ்வீட் எடு… கொண்டாடு’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட முத்தரப்பும்! இங்குதான் அந்த தப்பும்! இவ்வளவு பெரிய வெற்றியை குந்தாமல் கூசாமல் அறுவடை செய்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இன்னமும் வேதாளம் படத்தின் டைரக்டருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை தரவில்லை.…
Rajini-Kamal-Ajith-Vijay
கட் அவுட்டுக்கு பால் ஊத்துனவங்க தலையிலும் கைப்பிடியளவு கழிவு மண்ணை அள்ளி வச்சுட்டு போயிருச்சு வெள்ளம்! சினிமாவில் வரும் குறியீடுகளை பற்றி நிறைய அறிந்திருக்கும் ரசிகனுக்கு இந்த ‘மண்டையில மண்’ சமாச்சாரமும் ஒரு குறியீடுதான் என்பது தெரியாமலிருக்காது. ‘உடல் மண்ணுக்கு, உயிர் ஹீரோவுக்கு’ என்று கடந்த பல ஆண்டுகாலமாகவே ஒரு பாலிஸி வைத்திருக்கும் ரசிகர்களுக்கெல்லாம், இந்த வெள்ளம் தந்த மெசேஜ் அசாதாரணமானது! உன் தலைக்குள் என்ன இருந்ததோ, அதை எடுத்துதான்…
chennai floods
இந்த வெள்ளம் நிறைய பேரின் நிஜத்தை தோலுரித்து காட்டிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா “தனியார் கல்யாண மண்டபங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கலாம். தனியார் முதலாளிகளை உதவி செய்யும்படி பணித்திருக்கலாம். தி.நகரின் குறுமஹா ராஜாக்களிடமிருந்து ஒரு பெட்ஷீட் கூட கிடைக்கவில்லை மக்களுக்கு. அவ்வளவு கூட வேண்டாம். தன் கட்சிக்காரர்களுக்கு “உடனடியாக களத்தில் இறங்குங்கள். நான் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறேன்” என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும். ஒரு அறிக்கை…
ajith-Rest
எடைதாங்க முடியாத சந்தோஷம் ஒருபக்கம்! வலி தாங்க முடியாத கால் மறுபக்கம் என்று அஜீத் இப்போ டபுள் ஆக்ட் பேபி. சந்தோஷத்திற்கு காரணம் சொல்லவே தேவையில்லை. அஜீத் படங்களின் முந்தைய ஹிட்டுகளை அவரே முறியடிக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது வேதாளம் கலெக்ஷன். உலகம் கண்களை விரித்து ஆச்சர்யப்பட்டது அந்த ஹிட்டை பார்த்துக் கூட அல்ல. தமிழ்நாடே மிதக்குற அளவுக்கு மழை. இவ்வளவு மழையிலும் வேதாளம் தியேட்டர்கள் புல் ஆனதே… அதை நினைத்துதான்!…
welfare fund
இப்படியொரு மழை வரும் என்று மக்களும், இப்படியொரு நிலை வரும் என்று நடிகர்களும் நினைத்தே பார்த்திருக்கப் போவதில்லை. விட்டால் சட்டையை பிடித்து, “எங்கேய்யா நன்கொடை?” என்று கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது மக்களின் கோபம். பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் “சினிமாவுல மட்டும் வாரி வாரி கொடுக்கும் வள்ளல்களாக நடிக்கிற நீங்கள்லாம், நிஜத்தில் எங்கேப்பா போனீங்க?” என்று குடைய ஆரம்பித்துவிட்டார்கள். இனியும் பொறுத்தால் யார் வீட்டு சுவற்றிலும்…
Ajith-Siva
ஆபரேஷனுக்குப் பின் அஜீத் மீண்டும் கேமிரா முன் நிற்க அட்லீஸ்ட் ஆறு மாதங்களாகவாவது ஆகும் என்கிறது மருத்துவமனை வட்டாரம். ஆனால் அவரது செல்ப் திறன் என்னவோ? அதை அவர்தான் அறிவார். அதற்குள் இன்னொரு பரபரப்பான செய்தி கசிகிறது. அண்மைக்காலமாக சிவகார்த்திகேயனின் மனசு அஜீத் காம்பவுண்டையே சுற்றி சுற்றி வருகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் வீட்டிற்கு கிளம்பிவிடும் இவர், “சேர்ந்து நடிக்கலாம் வர்றீங்களா?” என்றால் “முடியாது” என்றா சொல்லப் போகிறார்?…
silent
“தமிழ்சினிமாவில் எனக்குதான் அதிக சம்பளம்” என்கிற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா ஹீரோக்களும். இப்படி சம்பளத்தில் போட்டி போடும் நடிகர்களோ, நடிகைகளோ… மக்களுக்கு ஒரு சங்கடம் என்றால், நான் நீ என்று போட்டி போடுகிற நிலைமை சத்தியமாக தமிழகத்தில் வரப்போவதில்லை. (அதற்கும் உதாரணமாக திகழ்வது அண்டை மாநில சினிமாக்கார்கள்தான்) தன் படங்கள் வரும்போதெல்லாம் கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்றிய ரசிகனின் ஊர், ரசிகனின் வீடு, ரசிகனின் உடமை, ரசிகனின்…
Ajith-Vijay-Theri
இரண்டு ஹீரோக்களுக்கு இடையே சண்டை வருவது இன்று நேற்றல்ல, தமிழ்சினிமா எப்போது வசனம் பேச ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே இருக்கிறது. பேஸ்புக்ல அடிச்சுக்குற அத்தனை ரசிகர்களும் போன பிறவியில் தியாகராஜ பாகவதருக்காகவும், கிட்டப்பாவுக்காகவும் எதிரெதிர் திசையில் நின்று பேச்சால் அடித்துக் கொண்டவர்கள்தான். அதற்கப்புறம் அது சிவாஜி எம்ஜிஆர் சண்டையாகி, ரஜினி கமல் சண்டையாக தொடர்ந்து இன்று அஜீத் விஜய்யாகி நிற்கிறது. இப்போது வசதியாக பேஸ்புக், ட்விட்டர். வாட்ஸ்ஆப், போன்ற கர்லா கட்டைகளும்,…
perarasu-ajith
சற்றே லேட்! ஆனால் செய்தியை கேட்டதிலிருந்தே கிறுகிறுத்துப் போயிருக்கிறது அஜீத் வட்டாரம்! “அவரா இப்படி பண்ணினார்? அவருக்கு நம்ம தல அவ்ளோ பண்ணினாரே? அவர் நடித்த படத்திற்கு இப்படியா கடைசி நேரத்தில் கட்டைய போடுவது?” என்று அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, “விஷயம் என்னங்க?’’ என்று புலம்புவோர் மத்தியில் விசாரித்தால், அவ்வளவு தகவலும் ஃபுல் டிராஜடி…! ‘வேதாளம்’ ரிலீஸ் கொண்டாட்டத்திற்கு உலகம் முழுக்க இருக்கிற அஜீத் ரசிகர்கள் தங்களை தயார் படுத்திக்…
Page 10 of 16« First...89101112...Last »