தரமணி- பெண்களின் அதீத சுதந்திரத்துக்கு ஆதரவான படமா?

பேசுவதில் மட்டுமல்ல… படீர் திடீரென படம் எடுக்கிற விஷயத்திலும் ராம் ஒரு நடமாடும் பீரங்கி வண்டி! கருத்து கந்தசாமி என்று விமர்சித்தாலும் சரி, கம்பீர சினிமாக்காரன் என்று பாராட்டினாலும் சரி. அவற்றையெல்லாம் ஒரு பீட்சா வேகத்தில் மென்று தின்று விட்டு நடையை கட்டுவது ராமின் ஸ்டைல்!

அவரது லேட்டஸ்ட் படம்தான் தரமணி. மனுஷன் என்ன சொல்லப் போறாரோ என்று பஞ்சாயத்து கூட்டுவதற்கு சமூகவலைதள கூட்டம் தயாராக இருக்கிறது. அதே நேரத்தில் ‘பெண்ணுரிமை என்ற பெயரில் நடக்கும் அதீத சுதந்திரத்துக்கு ஆதரவு கொடுப்பாரு போலிருக்கே…’ என்று காத்திருக்கிறது ஜீன்ஸ் ஸ்டைல் யுவதிகள் கூட்டம்!

இத்தகைய எதிர்பார்ப்புக்கு இடையில், தரமணி பற்றி ராம் சொல்வதென்ன?

”அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் ‘தரமணி’. உலகமயமாக்கத்தால் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்கம் தங்கள் காதலி/மனைவியை புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி ‘தரமணி’ படத்தில் பேசியுள்ளேன். இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையை பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல. ‘தரமணி’ பல கலாச்சாரம், பல்வேறு பின்னணியிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக ‘தரமணி’ இருக்கும் ” என்கிறார்.

ஆகஸ்ட் 11 ந் தேதி தடதடப்பு சற்றே ஜாஸ்தியாக இருக்கும் போலதான் தெரிகிறது.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Namma vivasayam-news
விவசாயப் புரட்சிக்கு தயாராகும் நம்ம விவசாயம்!

Close