இலங்கை அழைப்பு! மீண்டும் சர்ச்சையை கிளப்புவாரா ரஜினி?

நான் நல்லா பண்றனோ இல்லையோ? நீ நல்லா பண்றப்பா… என்று சந்தானம் ஆதங்கப்படுவாரல்லவா? அந்த சீனுக்கு சற்றும் குறைச்சல் இல்லை இங்கிருக்கும் அரசியல்வாதிகளின் அலட்டல். இலங்கைக்கு போகக் கூடாது. போகவே கூடாது என்று கடந்த பல வருஷங்களாகவே சினிமாக் காரர்களுக்கு மட்டும் கட்டம் கட்டி வருகிறார்கள் அவர்கள். இப்படி தொழிலதிபர்களை சொல்கிற துணிச்சல் இல்லை என்பதால்தான் சிக்கிய சினிமாக் காரர்களை கொக்கி போட்டு குடைகிறார்கள்.

போன மாதம் கூட இளையராஜாவின் வீட்டு வாசலில் கூடிய ஒரு கூட்டம் போகாதே… “போகாதே… இலங்கைக்கு போகாதே” என்று அவரை தடுத்தது. அங்கு போய் இலங்கை அரசுடன் ஒப்பந்தமா போடப் போகிறார் அவர்? அல்லது ஷாப்பிங் மால் கட்டப் போகிறாரா? அங்கு நாறிப் போயிருக்கும் நம்ம தமிழனுக்கு ஆறுதலாக நாலு பாடல்கள் இசைக்கப் போகிறார். அவ்வளவுதான். அது அவனுக்கும் ஆறுதல். பாடப் போன இவருக்கும் ஒரு ஆத்ம திருப்தி. அதுதான் பொறுக்கவில்லை இவர்களுக்கு.

லைக்கா நிறுவனம் தமிழர்களுக்காக கட்டிய வீடுகளை திறந்து வைக்க கிளம்பிய ரஜினிக்கும் இதே சிக்கல். (லைக்காவின் அழைப்பை ஏற்று ரஜினி அங்கு போகக் கூடாது என்றால், அந்த நிறுவனம் நடிக்கும் படத்தில் மட்டும் ரஜினி நடிக்கலாமோ? அதை மன்னித்துவிடுவார்களாம் இவர்கள்) எப்படியோ… கனத்த மனதோடு அந்த நிகழ்ச்சிக்கு போகாமல் நின்றுவிட்டார் அவர்.

இந்த நிலையில்தான் அவரை மீண்டும் அழைத்திருக்கிறது அந்நாட்டு அரசு. இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர், “ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம்” என்று கூறியிருக்கிறார்.

முன்பு ரஜினி வெறும் நடிகர். இப்போது எந்த நேரத்திலும் கட்சி துவங்குகிற நிலையிலிருக்கும் அரசியல்வாதி. இந்த ஒரு அச்சமே அவருக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களின் கழுத்தெலும்பை மிரட்டி வைக்கும். மறுபடியும் மூச் விட மாட்டார்கள் என்று நம்புவோம்!

1 Comment

  1. Jegan says:

    தலைவரின் அரசியல் பயணம் தொடங்கப்போகிறது ..சில்லறைகள் சிதறி போகிறார்கள் .தலைவரின் உடல்நிலை ஒத்துழைத்தால் நீண்ட காலம் இந்த சில்லறைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் .

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter