ரஜினி கமல்னா வேற… அடுத்த லெவல் ஹீரோன்னா வேற… விசிலுக்கு அடங்காத சவுன்ட் என்ஜினியர்!

‘பேராண்மை’ படத்திற்காக சிறந்த சவுன்ட் என்ஜினியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது உதயகுமாருக்கு. சினிமா என்பது கூட்டு முயற்சி. ஆனால் எண் சாண் உடம்புக்கு தலையே பிராதனம் என்பது போல எல்லாப் புகழும் இயக்குனருக்கே போகிறது. இந்த நேரத்தில், திரைக்கு பின்னாலிருந்து உழைக்கும் கலைஞர்களின் உழைப்பையும் கண்டு கொள்ள ஆரம்பித்திருக்கிற விருதுகளால்தான் லேசாக ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள் அவர்கள்.

KNACK ஸ்டூடியோவில் ‘விவேகம்’ படத்தின் மிக்சிங்கில் இருந்த உதயகுமாரை சந்தித்தோம்.

“கடந்த பத்து வருஷத்துக்கும் மேல இந்த துறையில் இருக்கேன். பெரிய பட்ஜெட் படங்களும், சின்ன பட்ஜெட் படங்களும்னு நிறைய பண்ணியிருக்கேன். சில படங்கள் ரொம்ப மெனக்கெட வைக்கும். அப்படி மெனக்கெட வைத்த படமான பேராண்மைக்காக எனக்கு விருது கிடைத்ததில் உள்ளபடியே மகிழ்ச்சி. அந்தப்படம் காடு சம்பந்தப்பட்ட படம் என்பதால், காட்டுக்குள்ளிருக்கும் சப்தங்களை அப்படியே திரையில் கொண்டு வர நான் எடுத்துக் கொண்ட முயற்சிதான் இப்போது விருதாக கிடைத்திருக்கிறது”.

“பொதுவாக சப்தம் பற்றிய அளவுகோல் மனசுக்குள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இப்போது இந்த இடத்தில் காற்று எப்படி அடிக்கிறது. இதுவே பீச் பக்கத்தில் நின்றால் அதன் சவுண்ட் என்ன மாதிரியிருக்கும் என்பதையெல்லாம் மனக்கணக்கு போல அறிந்து வைத்திருக்க வேண்டும். இப்படி ஒரு சப்தம் மட்டுமல்ல, கண்ணால் பார்க்கும், காதால் கேட்கும் எல்லா சப்தங்களையும் மனசுக்குள் லைப்பரரி போல போட்டு வைத்துக் கொள்வதுதான் என் வேலை”.

“அவ்வளவு ஏன்? ரஜினி சார் படம் மாதிரி பெரிய ஹீரோக்களின் படங்கள் வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். முதல் ஒரு வாரத்திற்கு அவர் என்ன டயலாக் பேசுகிறார் என்பதை கேட்கவே விட மாட்டார்கள் ரசிகர்கள். கூச்சல், விசில் என்று கொண்டாடுவார்கள். அந்த சப்தங்களையும் மீறி டயலாக் காதில் விழ வேண்டும் அல்லவா? அதற்காக டயலாக் பகுதியில் வரும் சப்தத்தை மட்டும் அதிகப்படுத்தி வைப்பேன்”.

“‘விசாரணை’ படத்தில் விழும் போலீஸ் அடி, அந்த கொடூரத்தை அப்படியே மனதில் இறக்கி வைக்கும். இதற்காக நான் நிறைய மெனக்கெட்டேன். இப்பவும் என்னை தேடி வரும் இயக்குனர்கள் பலர், பைட் சீனில் ‘விசாரணையில் நீங்க ஒரு பஞ்ச் சவுண்ட் கொடுப்பீங்கல்ல? அதை கொடுங்க’ என்கிறார்கள். இதுதான் ஒரு சவுண்ட் என்ஜியரின் வெற்றி” என்றார் உதயகுமார்.

தமிழ்சினிமா முன்னணி இயக்குனர்களின் ‘தேவை’ லிஸ்ட்டில் இருக்கிற உதயகுமாருக்கு, தேசிய விருதுகள் கூட கிடைக்க வேண்டும். அதற்காக பலமான ஒரு கைதட்டல். (காதுல விழுதா என்ஜினியரே?)

1 Comment

  1. Kumaran says:

    He mentioned only Rajini..but u included kamal in heading :-) :-)

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Kamal twit
தமிழால அடிச்சுப்புடுவேன் பார்த்துக்க! கமல் ட்விட்டும், கதி கலங்கும் அரசியல் மார்க்கெட்டும்!

Close