இமானை சுற்றி நாலு பெண்கள் கலங்கிய காமெடி சூரி

கும்கி யானை போலிருந்த இசையமைப்பாளர் இமான், குழாப்புட்டு கிண்ணம் போல சின்னதாகிவிட்டார். பட்டினி கிடந்து இளைத்தாரா? படுத்து உருண்டு இளைத்தாரா? என்கிற ரகசியத்தையெல்லாம் வெளியிட அவர் தயாராக இல்லை. ஆனால் ஊரெல்லாம் பேசப்படும் ஒரு விஷயத்திற்கு சரியான பதிலடி கொடுத்தார். அப்படியென்ன பேசியது ஊர்? “இமான் இளைச்சுட்டு வர்றதுக்கு காரணமே அவர் ஜி.வி.பிரகாஷ் மாதிரி நடிக்கப் போறதுதான்…” என்று.

அம்மாகிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ பட விழா இன்விடேஷனில் இமானும் அவருடன் நாலைந்து இளம் பெண்களும் இருப்பதை போல ஒரு போட்டோவை போட்டுவிட்டார்கள். அவ்வளவுதான்… அவர் நடிக்கப் போறது கன்பார்ம் என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டார்கள். ஊர் வாயை மூடுவதற்குள் ஒரு பாட்டுக்கு ட்யூன் போட்டுவிடலாம்தான். இருந்தாலும் வேலை மெனக்கெட்டு அதற்கு விளக்கம் சொன்னார் டி.இமான். “நான் நடிக்கப் போறதில்ல. ஒரு போதும் அப்படி செய்ய மாட்டேன்.”

இதன் காரணமாக பலரும் நிம்மதி பெருமூச்சு விட, விழா நடந்த கலைவாணர் அரங்கமே அந்த நிம்மதி மூச்சுக்காற்றால் சூடானது வேறு விஷயம்.

அதற்கப்புறம் மைக்கை பிடித்த நகைச்சுவை நடிகர் சூரி, “நல்லவேளை… அவரு நடிக்கலேன்னு சொன்னார். ஒருவேளை அவர் நடிக்க வந்திருந்தா, நாங்க ஆர்மோனிய பொட்டியை கைப்பற்றி அதுல ட்யூன் போட ஆரம்பிச்சுருப்போம்” என்று சொல்ல, விழா அரங்கமே கலீர்!

அதர்வா, ரெஜினா கசன்ட்ரா, அதிதி போகன்ஹர் நடித்திருக்கும் இப்படத்தை ஓடம் இளவரசு இயக்கியிருக்கிறார்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vanamagan Review
வனமகன் -விமர்சனம்

Close