சிவகார்த்திகேயனை விரட்டும் கீர்த்தி சுரேஷ்! ஆனால்?

பைக் நம்மளதுதானேன்னு சும்மாவிட்டால்? அது துரு பிடிச்சு துவம்சம் ஆகிவிடும் என்பதை தெரியாதவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்!

மேக்கப் இல்லாத கீர்த்தி சுரேஷை ‘தொடரி’ படத்தில் பார்த்தவர்கள், அதற்கப்புறம் முனியாண்டி கோவிலில் முப்பட்டை அடித்த பின்பும் நடுக்கம் குறையாமல் திரிந்ததை நாடு அறியும்.

இருந்தாலும் பாலீஷ் போட்டு பக்குவமாக காட்டுவதில் கை தேர்ந்த கேமிராமேன்கள் ராஜ தேவதையாக்கிவிட்டார்கள் அவரை. தமிழில் உச்சத்திலிருக்கும் போதே தெலுங்கிலும் உச்சத்தை பிடிக்க அங்கு நகர்ந்தார் கீர்த்தி. ஐயகோ… அவர் நடித்து சமீபத்தில் வந்த ஒரு படம் படு பிளாப். (இப்போதுதான் இந்த செய்தியின் முதல் வரிக்கு வரவேண்டும்)

அங்கு போனதிலிருந்தே சிவகார்த்திகேயனின் கான்டாக்ட்டை சற்று விலக்கி வைத்திருந்த கீர்த்தி சுரேஷ், அவரும் கண்டு கொள்ளாமல் விட்டதில் நொந்தே போய்விட்டாராம். மீண்டும் தமிழ்ப்படங்களில், அதுவும் ஹிட் ராஜா சிவகார்த்திகேயனின் படத்தில் நடித்தால்தான் பிழைப்பு வேகமெடுக்கும். இதை புரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அவருக்கு போன் அடிக்க… எதிர்முனை தொடர் அலட்சியம் காட்டி வருகிறதாம்.

ஆண்டிய நம்பி பாண்டியை கைவிட்டால், இதுதான்மா நிலைமை!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Thana Serndha koottam
சூர்யா அதிருப்தி? நசுங்கும் விக்னேஷ் சிவன்!

Close