நொறுக்குத்தீனி… நூடுல்ஸ் கொடுமை! கத்தியை தூக்கும் சிவகார்த்திகேயன்!

இந்த பாழாப்போன உலகம் இன்னும் மாசு படுத்தாமல் விட்டு வைத்திருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் தாய் பால்! மற்ற எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் உடலுக்கும் மூளைக்கும் சங்கு ஊதாமல் விடுவதில்லை. பிளாஸ்டிக் அரிசி பற்றி உலகமே அலறி வரும் இந்த நாளில், உணவு கலப்பட கேடிகள் ஒரு கவலையும் இல்லாமல் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் நூடுல்ஸ் என்ற உணவின் கொடூரம் பற்றி பத்தி பத்தியாக எழுதிய பத்திரிகைகளும், பற்ற வச்சா எரியுது பார்…. என்று நூடுல்சை கொளுத்திக் காட்டி தீவிரத்தை உணர்த்திய சேனல்களும் தங்கள் கடமையை சொல்லிவிட்டு ஓய்ந்துவிட்டன. சில மாதங்கள் தடை செய்யப்பட்ட அந்த நூடுல்ஸ்…? இப்போது இல்லாத கடையே இல்லை. நடுவில் எல்லா பாக்கெட்டையும் கங்கையில் அமுக்கி எடுத்துவந்தார்களா? எப்படி கிடைத்தது மீண்டும் அனுமதி? இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரு விடையும் இல்லை.

ஆனால் சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் இந்த நூடுல்ஸ் கொடுமையை பற்றிதான் பேசுகிறார்களாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பல விஷயங்களில் முக்கியமானது ரெண்டே ரெண்டுதான். ஒன்று நூடுல்ஸ். இன்னொன்று சிவகார்த்திகேயன்.

இவரை வைத்தே நூடுல்சை தீர்த்துக் கட்டும் டைரக்டரின் தந்திரத்திற்காகவே ஒரு சபாஷ்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Libra 01
லிப்ரா புரடக்சன்ஸ் நடத்தும் பிரமாண்ட குறும்பட போட்டி..!

குறும்பட கலைஞர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறக்கும் லிப்ரா புரடக்சன்ஸ்..! தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரடக்சன்ஸ்.. நளனும் நந்தினியும்,...

Close