சில்க் நினைவுகள்! அவங்க நெஞ்சுக்கும் இடுப்புக்கும் ஒரு நீ….ண்ட பயணம்! ஓவியர் ஸ்யாம்!

“உங்களின் மனம் கவர்ந்த ஆதர்ச நாயகி யார்?” என்று பிரபல ஓவியர் நண்பர் Shyam Sankar ஸ்யாமிடம் கேட்டேன். ” சில்க் ஸ்மிதா” தான் என் மனம் கவர்ந்த நாயகி என்று பட்டென பதில் வருகிறது அவடமிருந்து. ஆதர்சநாயகியின் நினைவுகளில் மூழ்கி பேசத்தொடங்கினார் ஸ்யாம்,

” சில்க் ஸ்மிதாவோட அழகைப்பார்த்து ரசிக்காத;பிரமிக்காத நாளே இல்ல. அதுவும், அவங்களோட கண்ணு இருக்கே சான்ஸே இல்ல. ஒரு மாடலிங் கேர்ளுக்கு கழுத்துக்கு கீழ இருக்கிற இரண்டு பக்க எலும்புக்கு மேலேயும் குழி இருக்கணும். அந்தக்குழியில் ரெண்டு ஸ்பூன் எண்ணையை விட்டா அப்படியே நிக்கணும். அதுமட்டுமில்ல, அந்த எலும்பு பள பளப்பா மின்னணும். அதுக்காக, ஃபேஷன் ஷோவுல கலந்துக்கிற மாடலிங் கேர்ள்ஸ் துளசி, வெங்காய ஜூஸ்ல ஆரம்பிச்சு விதவிதமான ஜூஸ்களை சாப்பிடுவாங்க. ஆனா, பளபளப்பான போர்ன், அந்தக்குழி சில்க் ஸ்மிதாவுக்கு இயல்பாகவே இருந்ததை கவனிச்சிருக்கேன். அதாவது, எல்லோருக்குமே உள்ளுக்குள்ள எலும்புக்கூடுதான் இருக்கு. ஆனா, அந்த எலும்புக்கூட்டோட வடிவம்தான் ஒரு பெண்ணோட அழகா கட்டமைக்குது. சில்க் ஸ்மிதாவோட எலும்புகள் ரொம்ப அழகா கட்டமைக்கப்பட்டது. அதுமட்டுமில்ல, அவங்களோட நெஞ்சுக்கும் இடுப்புக்கும் அவ்வளவு நீன்ன்ண்ட பயணம் இருக்கும். அந்த வளைவு சாதாரண வளைவு இல்ல. அதுவும், அவங்க பளிச்சுன்னு ரொம்ப வெள்ளையா இருந்திருந்தா ரசிச்சுட்டு அப்படியே விட்டிருப்போம். ஆனா, சாக்லேட் கலர்ல ஒரு கிரேக்க பேரழகி மாதிரி இருந்ததாலதான் இன்னைக்கு வரைக்கும் அவங்களை ரசிச்சுக்கிட்டே இருக்கிறோம். அவங்களோட லிப்ஸ், மூக்கு, கன்னம் யார் ஜாடையிலும் இருக்காது. அவங்க யார் மாதிரியும் கிடையாது. அவங்களோட நீண்ட ஹேர்ஸ்டைல்… இப்படி அவங்களுக்கு ஆயிரமாயிரம் லைக்ஸ் கொடுத்துக்கிட்டே இருக்கலாம். குழந்தைத்தனமாத்தான் இருக்கும் அவங்களோட பேச்சு.

அப்போ, எனக்கு 18 வயசு. அம்புலிமாமாவுல நான் ஓவியரா இருக்கும்போது பக்கத்திலேயே ராகிணி ஸ்டுடியோவுல ‘அன்று பெய்த மழை’ ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்தது. அப்போத்தான் என்னோட ஆதர்ச நாயகியை நேர்லப்பார்த்தேன். பார்த்துக்கிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல ஷூட்டிங் ப்ரேக்ல இருந்த என்னோட ஆதர்ச நாயகி, “என்னப் பார்க்குற?”ன்னு திடீர்னு என்னைப்பார்த்து கேட்டப்போ ஒரு நிமிஷம் நிலைகுலைஞ்சு போயிட்டேன். மறுபடியும் அதே குரல்,

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க”-பட்டுன்னு சொல்வேன்னு நான் நினைச்சுக்கூடப்பார்க்கல.

அவங்க புன்னகைச்சுக்கிட்டே, “ம்… எந்த யூனிட்?”- அதாவது நானும் ஷூட்டிங்ல ஒர்க் பன்றவன்னு நினைச்சுக்கிட்டு கேட்டாங்க.

“நான் சினிமா ஆர்ட்டிஸ்ட்லாம் இல்ல மேடம். பத்திரிகை ஆர்டிஸ்ட்”

“ஓ… நல்லா வரைவீங்களா?”

“உங்களோட ஓவியத்தை வரைஞ்சதால அடில்லாம் வாங்கியிருக்கேன்”

“என்ன சொல்றீங்க?”

”அலைகள் ஓய்வதில்லை… சூரக்கோட்டை சிங்கக்குட்டி படம்லாம் பார்த்துட்டுவந்து கணக்கு நோட்டுலயும் புக்லேயும் உங்க படத்தையே வரைஞ்சுவெச்சுட்டேன். கணக்கு வாத்தியார் பார்த்துட்டு செம்ம அடி… பிண்ணிட்டாரு”

கோல்டு காயின்களை அள்ளிவீசியதுபோன்று அவரது சிரிப்பு, “இப்போ அந்த புக் இருக்கா?”

”ஊர்லதான் இருக்கு. கண்டிப்பா எடுத்துட்டு வந்துக் காட்டுறேங்க”

“என்னை ஒரு ஓவியம் வரைஞ்சு எடுத்துட்டு வர்றீங்களா?”

“இதை நீங்கக் கேட்டுத்தானா செய்வேன்?”

-இதுதான் எனது ஆதர்ச நாயகியை பார்த்தது முதலும் கடைசியுமாய். அதற்குப்பிறகு, அவர் ஷூட்டிங்கில் பிசியாகிவிட்டதால் அவரைப் பார்க்கமுடியவில்லை. அவங்கள எவ்ளோ பார்த்தாலும் ‘போர்’ அடிக்காது. தனிப்பட்ட முறையில் ஒரு கவர்ச்சி நடிகையா ஜெயிக்கிறதுங்கிறது சாதாரண விஷயம் இல்ல. அதுவும், சாப்பாடு சமைச்சு வியாபாரம் செஞ்சு பொழைச்சுக்கிட்டிருந்த ஒரு பெண் இந்தளவுக்கு வந்தது எவ்வளவு பெரிய கிரேட்!

அவங்களோட இடத்தை யாராலையும் நிரப்பமுடியல; நிரப்பவும் முடியாது. பாலுமகேந்திராவின் ஆஸ்தான கதாநாயகி அவங்கதான். எவ்ளோ அழகான நடிகை ஸ்ரீதேவி. அவங்களுக்கே புடிச்ச நடிகை சில்க் ஸ்மிதாதான்னு அவங்களே ரசிச்சு சொல்லியிருக்காங்க. சுஜாதாக்கிட்ட சில்க் ஸ்மிதாவைப்பற்றி பேச ஆரம்பிச்சோம்னா போதும். பிரமிச்சுப்போயி பேசுவாரு. அப்படியொரு ஊடுருவல் அழகு அவங்க. அதனாலதானே, அவங்க கடிச்சுட்டு வெச்சு ஒரு ஆப்பிள் 1000 ரூபாய்க்கு ஏலம் போனது. பிரதாப் போத்தனின் படங்களில் மாடர்லிங் கேரளா நடிச்சுருப்பாங்க. அடேங்கப்பா… அசிங்கம்.. அறுவறுப்பு இல்லாத கவர்ச்சி… பெண்களே ரசிக்கும் நடிகை. அவங்களோட முரட்டுத்தனத்தை பாக்யராஜ் ரகசியபோலீஸ் 100 படத்துல ரொம்ப அழகா பயன்படுத்தியிருப்பாரு. இப்படி என்னோட ஆதர்ச நாயகியைப்பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா, உங்களுக்குத்தான் பக்கம் போதாது :)

நன்றி -மனோசெளந்தர்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Konjam Konjam Review
கொஞ்சம் கொஞ்சம் – விமர்சனம்

Close