வராத நாயகிக்கு வாய் கொள்ளாத பாராட்டு! என்னங்க சார் உங்க ஜொள்ஸ்?

காட்டிலேயே வளர்ந்த ஒரு காட்டுவாசி, நாட்டுக்குள் வசிக்க நேர்ந்தால் என்னாகும் என்பதுதான் ‘வனமகன்’ கதையாக இருக்க வேண்டும். தமிழில் எத்தனையோ படங்கள் எடுத்தாலும், ஏ.எல்.விஜய்யின் ‘மதராசப்பட்டினம்’ எப்படி தனி அப்ளாஸ் பெற்றதோ…. அதற்கு சற்றும் குறைவான படமாக இருக்கப் போவதில்லை ‘வனமகன்’. வழக்கம்போல தன் கேரக்டருக்காக உயிரை வாட்டி எடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்தப்படத்தில் அவருக்கு புலியுடன் ஒரு சண்டைக்காட்சியும் இருக்கிறதாம். அந்த ஒரு பைட்டுக்காகவே நிறைய மெனக்கெட்டிருக்கிறதாம் வனமகன் டீம்.

சுமக்குறவனுக்குதானே வலி தெரியும்? அந்த வலியை நேற்று ஜெயம் ரவியின் பேச்சில் உணர முடிந்தது. வனமகன் படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய ரவி, “இந்த படத்தை திருட்டுத்தனமா ஆன்லைன்ல போடாதீங்க” என்பதோடு விட்டிருக்கலாம். “ஒரு நிஜமான தமிழனா பிறந்த யாரும் இந்தப்படத்தை ஆன்லைன்ல வெளியிடக் கூடாது”ன்னு சொல்லப் போக, கடும் ஆட்சேபணை கிளம்பியிருக்கிறது சோஷியல் மீடியாவில். எப்படியோ… ஒரு வாரத்திற்கு இந்த பரபரப்பு இருக்கும் என்பது வேறு விஷயம்.

நிகழ்ச்சியில் கண்களை உறுத்தியது இன்னொரு முக்கியமான விஷயம். பேசிய அத்தனை பேரும் படத்தின் ஹீரோயின் சாயிஷாவை அழகி அழகி என்று வர்ணித்துக் கொண்டேயிருந்தார்கள். அவருக்கு தமிழ்சினிமாவுல முக்கியமான இடம் நிச்சயம் என்றெல்லாம் ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு பரபரப்பையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்ட அந்த அழகி…. அந்த விழா மேடையில் இல்லவே இல்லை! ஏன்?

வேறொரு வேலை இருந்ததால் வரவில்லையாம். தானில்லா மேடையிலும் தன்னை பற்றியே ஒருவர் பேச வைத்தாரென்றால் அவர் நிஜமான அழகிதான்.

அழகு மகள் சாயிஷாவே… நயன்தாரா இடம் உங்களுக்குதான். அழகி என்பதால் மட்டுமல்ல… நீங்கள் நடிக்கும் ஒரு படத்தின் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறீங்களே… அதனால!

பின்குறிப்பு- “ஒருவேளை இந்தப்படம் ஓடலேன்னா சம்பளமே வாங்காம இன்னொரு படம் ஏ.எல்.விஜய்க்கு நடிச்சுத்தருவேன்” என்று கூறினார் ஜெயம். அப்படியொரு இக்கட்டு யாருக்கும் வராமலிருக்கக் கடவதாக!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Anjali Jai Baloon
போன ஜென்மத்து காதலை இந்த ஜென்மத்திலும் தொடரும் அஞ்சலி-ஜெய்!

Close