சிம்புவை தாக்க குண்டர்களை அனுப்பிய அதிமுக பிரமுகர்! டி.ராஜேந்தர் வீட்டில் களேபரம்!

கடந்த சில நாட்களாகவே சிம்பு ஆக்டிவாக இருக்கிறார். அதுவும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் காட்டிய மும்முரத்தை தமிழ்நாடே நோட் போட்டு பாராட்டியது. இப்படி சமூகம், இனம் என்று இன்னொரு கோணத்தை கையில் எடுத்துக் கொண்டு பரபரப்பு காட்டும் சிம்பு, படப்பிடிப்புக்கு செல்கிற விஷயத்தில் மட்டும் பழைய பாணியை மாற்றிக் கொள்வதில்லை. அதற்கு காரணம் சிம்புவின் கேரக்டர் மட்டும் இல்லை. அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ஒரு அட்வான்சை கொடுத்துவிட்டு மிச்ச பணத்தை தராமல் இழுத்தடிப்பதும்தான். சுமார் எட்டு கோடி வரை சம்பளம் வாங்கும் சிம்பு, ஒவ்வொரு முறையும் அந்த சம்பளத்தை வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது.

கவுதம் மேனன் மட்டுமல்ல, அவரை வைத்து படம் எடுத்த முன்னாள் தயாரிப்பாளர்களும் இதே அல்வாவைதான் சிம்புவுக்கு கொடுத்து வந்திருக்கிறார்கள். முழு சம்பளம் கொடுங்க. ஷுட்டிங் வர்றேன்… என்று பிடிவாதம் பிடிக்கிறார் சிம்பு. பிரச்சனையும் பின்னாலேயே வந்துவிடுகிறது.

அப்படி வந்த பிரச்சனைதான் இது.

சிம்புவை வைத்து இப்போது படம் எடுத்து வருகிறார் முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன். தே.மு.தி.க வில் இருந்து இவர் அதிமுக வுக்கு மாறியது மக்களுக்கு நினைவிருக்கலாம். இவர் தயாரித்து வரும் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படப்பிடிப்பு இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்றுதான் இதுவரை நடந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக முற்றிலும் ஷுட்டிங் நடைபெறவில்லையாம். இது பற்றி கேட்ட மைக்கேல் ராயப்பனிடம், சிம்பு தன் சம்பளத்தை கேட்க…. ஆரம்பித்தது வாய் தகராறு. இதில் சிம்பு அவரை ஒருமையில் திட்டிவிட்டதால் ஆரம்பித்தது கலகம்.

நள்ளிரவு சில குண்டர்களை சிம்புவின் வீட்டுக்கு அனுப்பி அவரை தாக்க சொன்னாராம் மைக்கேல் ராயப்பன். வாடா… முடிஞ்சா மேல கைய வச்சு பாருடா… என்று சிம்புவும் விடைத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதாக தகவல். அதற்குள் எழுந்து வாசலுக்கு ஓடிவந்த டி.ஆர் தன் பங்குக்கு சிங்கம் போல கர்ஜனை செய்ய… அந்த ஏரியாவே நள்ளிரவில் நாராசம் ஆகிவிட்டது.

சிம்புவை தாக்க வந்த குண்டர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்களாம். இதையடுத்து தன்னையும் தன் மகன் சிம்புவையும் தாக்க வந்ததாக மைக்கேல் ராயப்பன் மீது புகார் கொடுத்திருக்கிறார் டி.ஆர். போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கிறது.

அப்ப ட்ரிப்பிள் ஏ படம்? வந்தா மாதிரிதான்!

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter