நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி! ரஜினியின் அண்ணன் போட்ட டூப்?

ரஜினி அரசியலுக்கு தகுதியானவர்தான் என்பது மிக சரியாக நிரூபிக்கப்பட்டு முழுசாக ரெண்டு நாள் ஆகிவிட்டது. எப்படி? அரசியல்வாதிகளுக்குரிய அத்தனை தகிடு தத்தங்களும் ரஜினிக்குள்ளும் அடைக்கலமாகிருச்சோ என்ற ஐயத்தை விளைத்த சந்திப்புதான் அது. நதிகள் இணைப்பு போராட்டக்குழு தலைவர் அய்யாகண்ணுவை ரஜினி சந்தித்தார். அப்போது அய்யாக்கண்ணு ரஜினியிடம், “நதிகள் இணைப்புக்காக நீங்கள் தருவதாக சொன்ன ஒரு கோடியை உடனே பிரதமரிடம் கொடுக்க வேண்டும்” என்றாராம்.

“அதுக்கென்ன… இப்பவே வாங்கிட்டு போங்க” என்று கூறிய ரஜினி அந்த பணத்திற்கான செக்கை அய்யாக்கண்ணுவிடம் கொடுக்க முனைந்தாராம். இந்த தகவலை அய்யாக்கண்ணுவே கூறியிருக்கிறார். இவர் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நமக்கு வரும் டவுட் ஒன்றே ஒன்றுதான்.

அதை ரஜினி பேமிலிதான் கிளியர் பண்ண முடியும்.

2016 ம் வருடம் ஜுன் மாதம் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது ரஜினி அமெரிக்காவிலிருந்தார். அண்ணாரிடம் பேட்டி கண்ட நிருபர்கள், “நதிகள் இணைப்புக்கு ரஜினி ஒரு கோடி தருவதாக சொன்னாரே… அதை எப்ப தரப்போறீங்க?” என்று கேள்வி எழுப்பினார்கள். பதிலளித்த சத்யநாராயணன், “அந்த பணத்தை அப்பவே தேசிய வங்கியில் டெபாசிட் பண்ணிட்டோம். எப்ப நதிகள் இணைப்புக்கு நாள் குறிக்கப்படுதோ, அன்று அந்த பணம் தரப்படும்” என்று கூறியிருந்தார்.

உண்மையிலேயே அந்த ஒரு கோடி நதிகள் இணைப்புக்காக மட்டும் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், யாராவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இப்போது கூட அறிய முயற்சிக்கலாம். அப்படி வரவு வைக்கப்பட்டிருந்தால், வீட்டிலிருந்த செக்கை எடுத்து அய்யாக்கண்ணுவுக்கு ரஜினி கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தப்பட்ட வங்கியின் விபரத்தை கொடுத்திருந்தாலே போதும்.

யார் சொல்வது பொய்? ரஜினியா, சத்யநாராயணனா? அல்லது நம்ம அய்யாக்கண்ணுவா? மண்டை குழம்புது மகாதேவா!

2 Comments

  1. ஜேம்ஸ் says:

    நீ என்ன செய்த்தாய் தமிழ் நாட்டுக்கு
    தமிழ் நாட்டை ஆள்பவன் என்ன செய்தான்
    வயித்து எரிச்சல் புடித்தவனே, ரஜினி ஆட்சி தான் இனி தமிழ்நாட்டில். சினிமாவிலும் அவர் தான் சூப்பர் ஸ்டார். அரசியலுக்கும் அவர் தான் சூப்பர் முதல்வர்.

  2. Rajesh says:

    எங்கள் தலைவர் ரஜினி அவர்களை பற்றி பேச அவனுக்கு எந்த அருகதையும் கிடையாது.,

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Ajith “UNSATISFIED”| Vivegam Updates.
Ajith “UNSATISFIED”| Vivegam Updates.

https://youtu.be/3Ij24k2p2Rw

Close