ஜெ.வுக்கு ரஜினிகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி

தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்ந்த அம்மா ஜெ.வின் மறைவு, நாட்டையே நிலைகுலைய வைத்திருக்கிறது. நாடெங்கிலும் இருந்து திரண்டு சென்னைக்கு வந்த அதிமுக தொண்டர்களால், ஜெ.வின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி மண்டபம் கண்ணீர் கடலால் தத்தளித்து வருகிறது. அரசியல், திரையுலகம், இலக்கிய உலகம் என தமிழகத்தின் முக்கிய விஐபிகள் அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சுமார் 11.30 மணியளவில் தனது குடும்பத்தினருடன் ராஜாஜி மண்டபத்திற்கு நேரில் வந்தார் ரஜினிகாந்த். ஜனக்கடலில் நீந்தி வந்தவருக்கு போலீஸ் அதிகாரிகள் கடும் பாதுகாப்போடு ஜெ.உடல் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர். தன் தலையை அப்படியே சாஷ்டாங்கமாக குனிந்து வணங்கிய ரஜினி, தன் இரு கண்களையும் துடைத்துக் கொண்டார். பொங்கி வந்த அழுகையை அவர் அடக்கிக் கொண்டதை கவனிக்க முடிந்தது.

பின் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் தோள்களை பிடித்து தன் வருத்தத்தையும் ஆறுதலையும் அவருடன் பகிர்ந்து கொண்டார். பின்பு அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அரங்கத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

1 Comment

  1. Swathi says:

    மிர்ச்சி பாலாஜி, ரஜினி இவன் மாறி பச்சோந்திகளுக்கு அம்மாவ கடைசியா பார்க்க அனுமதி? இவனுகலுக்கு பதிலா எத்தனை தாய்மார்கள் கதறிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அம்மாவை தரிசிக்க வாய்ப்பு கொசுத்திருக்கலாம்

Leave a Reply

Facebook

Follow Us on Twitter