பெப்ஸி ஸ்டிரைக்! பெரும் அதிர்ச்சியில் ரஜினி?

சுயநலத்திற்காக பொது நலத்திற்கு பெப்பே காட்டும் சினிமாவுலகத்தில், பெப்ஸி விவகாரம் பலரது நிஜ முகத்தை தோலுரித்து காட்டியிருப்பதாக குமுறுகிறார்கள் இங்கே. அதில் ரஜினி பெயரும் அடிபட்டது அவ்வளவு ஈஸியாக கடந்து போகிற விஷயம் அல்ல.

பெப்ஸி தொழிலாளர்களின் அதிகப்படியான பேட்டா தொகை, ரஜினி படத்திற்கும் அதே சம்பளம், விமல் படத்திற்கும் அதே சம்பளம் என்கிற கோட்பாடு, பத்து பேர் இருந்தால் போதும் என்கிற வேலையை கூட, 60 பேர் இல்லாமல் செய்யக்கூடாது என்கிற அழிச்சாட்டியம், உறங்குவதற்கும், ஒன் பாத் ரூம் போவதற்கும் கூட பேட்டா கேட்டுத் தொல்லை பண்ணுகிற அராஜகம்… இப்படி ஓராயிரம் நெருக்குதல்களில் சிக்கி தவித்த தயாரிப்பாளர்கள் பெப்ஸிக்கு மூடு விழா காண முடிவெடுத்திருந்தார்கள்.

இனி பெப்ஸி தொழிலாளர்களுடன் மட்டும்தான் வேலை செய்வோம் என்கிற ஒப்பந்தம் செல்லாது. நாங்கள் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக் கொள்வோம் என்றார்கள். இதற்கு இயக்குனர் சங்கமும் ஒத்துழைக்க, காலா மாதிரியான படங்கள் இந்த புது விதியை அமல் படுத்தினால், சகலத்தையும் சரி பண்ணிவிடலாம் என்று நினைத்தது விஷால் தலைமை.

ஆனால் அதை முதலில் முறியடித்தவர் ரஜினிதான். விஷாலின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்த பெப்ஸியை அழைத்துப் பேசிய ரஜினி, காலா ஷுட்டிங் முடியற வரைக்கும் ஸ்டிரைக்கை தள்ளிப் போடுங்க என்று கேட்டுக் கொண்டாராம். இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் சங்கம் படு அப்செட். ரஜினி சொன்னபடி மீண்டும் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் வாங்கியது பெப்ஸி.

இப்போது ரஜினி பேச்சையும் மீறி விட்டது விவகாரம். நேற்று நாளிதழ்களில் ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால் கடுப்பான பெப்ஸி, கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துவிட்டது. இன்றிலிருந்து காலா, மெர்சல் உள்ளிட்ட பெரிய படங்களின் ஷுட்டிங் மற்றும் பின் தயாரிப்பு பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

ரஜினி தன் மருமகன் தனுஷின் பணம் வீணாகிறதே என்று மீண்டும் பெப்ஸியை அழைப்பார். இந்த முறை அவர்கள் போகணுமே? போனாலும் ரஜினி சொல்லை கேட்கணுமே?

பின் குறிப்பு- இந்த வேலை நிறுத்தம் ஆறு மாதம் நீடித்தாலும் சரி. இறங்கி வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் விஷால்.

4 Comments

 1. Kumaran says:

  ஒரு வெப்சைட் கிடைச்சா எந்த கருமத்த வேணும்னாலும் எழுதலாமா சார்? As if like u were part of the discussion where Rajini told them to hold till Kala….

 2. Vijay says:

  FAKE NEWS.

 3. தமிழ்நேசன் says:

  தலைவர் ரஜினி அவர்களை பற்றி தவறாக செய்திகளை வெளியிட வேண்டாம்.
  ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.

 4. கிரி says:

  “விஷாலின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்த பெப்ஸியை அழைத்துப் பேசிய ரஜினி, காலா ஷுட்டிங் முடியற வரைக்கும் ஸ்டிரைக்கை தள்ளிப் போடுங்க என்று கேட்டுக் கொண்டாராம்.”

  “ரஜினி தன் மருமகன் தனுஷின் பணம் வீணாகிறதே என்று மீண்டும் பெப்ஸியை அழைப்பார். இந்த முறை அவர்கள் போகணுமே? போனாலும் ரஜினி சொல்லை கேட்கணுமே?”

  அந்தணன் எப்படி உங்களால் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இது போல எழுத முடிகிறது.

  உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. ரஜினி இது போல எண்ணத்தில் கூறி இருப்பார், பேசி இருப்பார் என்று!

  நீங்கெல்லாம் பாவத்தை சம்பாதித்துக்கொண்டு உள்ளீர்கள். ஒரு தளம் இருக்கிறது என்பதால், உங்கள் விருப்பத்துக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை எழுதி மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்.

  இதற்கான கர்மாவை நீங்கள் நிச்சயம் அனுபவிப்பீர்கள். சந்தேகமே இல்லை!

  பாவத்துக்கு மேல் பாவத்தை சேர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் வாழ்க்கையில் சிரமப்படும் போது இவை உங்கள் நினைவுக்கு வந்து வாட்டும்.

  நடக்குதா இல்லையான்னு பாருங்க..

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Kurangu Bommai Review
குரங்கு பொம்மை – விமர்சனம்

Close