ரஜினிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு? வொய்? வொய்?

‘நாயகன்’ திரைக்கு வந்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் நாயகன் போல பர்பெக்டாக ஒரு தாதா படம் தமிழில் வரவேயில்லை. அதே கதையை ஆயில் பெயின்ட் அடித்து பளபளப்பாக கொடுக்க நினைத்த பல இயக்குனர்கள் தங்கள் முகத்தில் கரியை பூசிக் கொண்டதுதான் மிச்சம். இந்த கறையை கழுவுவாரா கபாலி ரஞ்சித்? இதுதான் இப்போதைய மிலியன் யூரோ கேள்வி.

அதே தாராவி பகுதியில் கத்தியையும் புத்தியையும் ஒரு சேர தீட்டி வாழ்ந்த பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் கதைதான் விரைவில் ரஞ்சித் இயக்கவிருக்கும் ரஜினி படம். இந்த விஷயம் எப்படியோ ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனுக்கு தெரியவர, “எங்கப்பாவை பற்றி தப்பு தப்பா எடுத்தீங்கன்னா சும்மா விட மாட்டேன்” என்று ரஜினிக்கு லெட்டரே எழுதி விட்டார். படமே ஆரம்பிக்கல. அதுக்குள்ள இப்படியொரு ஓப்பனிங்(?) கிடைக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத பா.ரஞ்சித் அண் கோ, அதே தாராவியில் எடுக்கவிருந்த காட்சிகளை ரூட் மாற்றிவிடும் எண்ணத்திலிருப்பதாக தகவல். ஒரு காட்சிக்காக கூட மும்பை போகப் போவதில்லை என்கிறது படக்குழுவிலிருந்து கசியும் தகவல்கள்.

இது ஒருபுறமிருக்க… ரஜினியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அதிகம் சிரமம் தராமல் படப்பிடிப்பை சென்னையிலேயே வைத்துக் கொள்ளப் போகிறார்கள். ஈவிபி ஸ்டூடியோவில் இதற்கென பிரமாண்டமான மும்பை தாராவி செட் போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ரஜினிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

“எங்க தலைவரே ஒரு துப்பாக்கிதான். துப்பாக்கிக்கே துப்பாக்கியா?” என்று நெஞ்சை விடைத்துக் கொள்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

2 Comments

  1. ஜீவா says:

    எங்கள் தலைவருக்கு பாதுபாப்பு தமிழக மக்கள் தாண்டா. வாங்கடா வந்து பாருங்கட வெண்ணவெட்டிகளா.

  2. Mathivanan says:

    சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கை வைத்து பார்க்கட்டும் உன் தலை இருக்காது, மவனே,.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
ss rajamouli
எஸ்.எஸ்.ராஜமவுலி மீது நடவடிக்கை பாயுமா? மத்திய அரசு ‘திருதிரு ’

Close