ரத்தம் சுண்டிப்போனதா ரஜினி ரசிகர்களுக்கு?

‘உடல் மண்ணுக்கு, உடல் ரஜினிக்கு’ ஒரு காலத்தில் கூட்டமாக நின்று கூவிய ரசிகர்கள் ‘இப்போது எங்கே போனார்கள்’ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது. முந்தாநாள் வரைக்கும் தோன்றாத இந்த ஐயம், இன்றிலிருந்து பட்டொளி வீசி பறக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம்…. சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம்தான். இந்தப்படத்தில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் கிழித்து தொங்க விட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் திரைவண்ணன்.

படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகராக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். ஆனால் பவர் ஸ்டார் என்ற போர்வைக்குள் ஒளித்து வைத்து டைரக்டர் காட்டியிருப்பது சூப்பர் ஸ்டார்தான் என்பது ரெண்டாம் கிளாஸ் குழந்தைக்குக் கூட பளிச்சென்று தெரியும். பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஓப்பனிங் சீன் வைக்கும் போதே, அவர் ரஜினியின் புகழ் பெற்ற டயலாக்கை சொல்லிக் கொண்டேதான் அறிமுகம் ஆகிறார். (பன்னிங்கதான் கூட்டமா வரும்… ) அதற்கப்புறம் அவரது ஒவ்வொரு பஞ்ச்-ம் ரஜினியைதான் வளைத்து வளைத்து வம்புக்கு இழுக்கிறது. இப்படி பட்டவர்த்தனமாக ரஜினியை தாக்கிய வசனங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.

லிங்கா படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் சிலரின் புலம்பலைதான் நீட்டி முழக்கி படமாக்கியிருக்கிறார்கள் என்று மிக தெளிவாகவே புரிகிறது. இப்படி நேரடியாக வேட்டியை உருவிவிட்ட பின், அவர்கள் சொல்லும் சமாளிப்புகள் எதுவும் எடுபடவேயில்லை என்பதுதான் உண்மை.

‘நீ அசைந்தால் புவி அசையும்’ என்கிற அளவுக்கு அவர் மீது வெறி கொண்டு திரிந்த அத்தனை பேரும், இந்த அநீதியை கண்ட பின்பும் எவ்வித ரீயாக்ஷனும் காட்டாமல் ‘விட்ரா மச்சான் விசிலை’ என்று ஒதுங்கிப் போவதுதான் சோகத்திலும் சோகம்!

எந்திரன் சிட்டியாக இருக்க வேண்டிய நேரமிது. இவர்களோ, வெறும் தாடி வளர்ந்த வசீகரன்களாக இருக்கிறார்களே…! எல்லாம் விதியய்யா விதி!

6 Comments

 1. sandy says:

  சினிமாவ பொழுதுபோக்காக பாத்துட்டு போறத விட்டுட்டு நீங்களும் உங்க பங்குக்கு ஏத்திவிடுறீங்களே பாஸ்…

 2. Thenali says:

  why vidih? This guy rajini a business man. You are also one of his victims like his fans. If you continue supporting him blindly then you must be a manga madayan.

 3. காந்த் says:

  சும்மா இருக்கறவங்களையும் நல்லா உசுப்பேத்தி உங்கள நல்லாவே திருப்திப்படுதுறீங்க. கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ். ஹாலிவுட்ல எத்தனையோ காமெடி படங்கள் இப்படி வந்திருக்கு, அதுமாதிரிதான் இதுவும்னு ரசிச்சுட்டு போவீங்களா அதவிட்டுட்டு, உங்க ரஜனி விசுவாசத்துக்காக ஊடக தர்மத்தை விக்காதீங்க.

 4. Dandanakka says:

  எப்படியோ ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றி உங்கள் படத்திற்கு நெகட்டிவ் புப்லிசிட்டி உருவாக்க நினைக்கிறீர்கள். இந்த படத்தை எல்லாம் ஒரு பொருட்டாக கூட எடுத்து கொள்ள மாட்டார்கள். போய் அட்ரா மச்சான் விசிலு படத்தை வேறுவிதமா விளம்பரம் பண்ணி கரை சேர்க்கிற வழிய பாருங்க மிஸ்டர் அந்தணன்.

 5. நாசர் says:

  LONG LIVE OUR TAMIL GOD SUPER STAR RAJINI

 6. இது ரஜினியைஎதிர்க்கும் படமாக இருந்தால் இந்த படத்தையும் …இந்த படத்தின் நாயகன் சிவா ..மற்றும் பவர் ஸ்டார் ஆகியோரின் இனி வரும் படங்களையும் மெளனாக கடந்து சென்று தவிர்த்து விடுகிறோம் ..இந்த படத்தை எல்லாம் எதிர்த்து அதற்கு ப ப் ளி குட்டி பண்ணி அதை ஓட வைக்க முயற்சி செய்ய மாட்டார்கள் ரஜினி ரசிகர்கள் ….

  பழைய பழமொழி தான் …

  ஆனாலும் சொல்கிறேன் …

  சூரியனை பார்த்து நாய் குலைத்தால் ……

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vigneshsivan-dhanush
தனுஷ் புஸ்பா புருசன் பிணக்கு தீர்ந்ததா?

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் வந்தாலும் வந்தது. அதில் வரும் ‘புஸ்பா புருஷன்’ கேரக்டர் மக்கள் மத்தியில் செம ஹைப் ஆகிக்கிடக்கிறது. அந்த கேரக்டரில் நடித்த சூரியை...

Close