நெருங்கும் 31 ஃபுல் ஜர்க்கில் ரஜினி ரசிகர்கள்

கடந்த சில தினங்களாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி விருந்து கொடுக்கணும்னு ஆசையா இருக்கு என்று இப்போது(ம்) சொல்லி, நாக்கில் எச்சில் ஊற வைத்தவர், கடைசி வரை கிடாக் கறியை காட்டாதது போலவே அரசியல் நிலைபாட்டு விஷயத்திரும் இருந்து விடுவாரோ என்கிற அச்சம் அவர்களுக்குள் நீடித்து வருவதை உணர முடிகிறது.

அதை பலப்படுத்தும் விதத்தில்தான் இன்றும் பேசியிருக்கிறார் ரஜினி. அதென்ன?

கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம். அங்கே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலர் இருக்கிறார்கள். சச்சிதானந்த சுவாமிகளும், தயானந்த சுவாமிகளும் எனது குருமார்கள். சுவாமி சச்சிதானந்தர் அவர்களுக்கு அந்த பெயர் இமயமலையில் உள்ள சிவானந்த சுவாமிகளிடம் முக்தி பெற்ற பின்னரே அந்த பெயர் வந்தது. அவர்கள் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல நன்மைகள் மக்களுக்கு செய்து வருகின்றனர்.

ஒரு முறை நானும் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களும் கோவை சென்றிருந்த போது ரசிகர்கள் அங்கே குழுமியிருந்தனர். நாங்கள் சென்ற போது ரசிகர்கள் அனைவரும் என் பெயரைச் சொல்லி கத்த ஆரம்பித்தனர். பின் விழா முடிந்தவுடன் சிவாஜி ஐயாவிடம் இது குறித்த என் வருத்தத்தை தெரிவித்தேன். அதற்கு அவர் ரஜினி இதற்கு பெயர் தான் காலம். நான் பெரிய நடிகனாக இருந்த போது எனக்கும் இது போன்ற கூட்டம் இருந்தது. இப்போது இது உனக்கான காலம்.

எனவே எந்தவொரு செயலுக்கும் காலம் என்பது முக்கியம். நமக்கான காலம் வரும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

என்று கூறியிருக்கிறார் ரஜினி. எல்லாத்தையும் பூடகமா சொல்லி, ஊடகத்தையும் உளற விடுறதுதான் ரஜினியோட திட்டம் போலிருக்கு!

1 Comment

  1. சத்யராஜ் says:

    தலைவர் ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தலைவர் ரஜினி அவர்கள் தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி வழங்குவார் .
    உங்களை போன்ற கவர் வாங்கி கொண்டு எழுதும் சில ஊடகங்கள் தான் மக்களை குழப்ப பார்க்கிறது. மற்றபடி சூப்பர் ஸ்டாரும் அவரது ரசிகர்களும் தமிழக மக்களும் மிக மிக தெளிவாக இருக்கிறார்கள்.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Rajinikanth to Announce His Political Party on December 31st?
Rajinikanth to Announce His Political Party on December 31st?

https://www.youtube.com/watch?v=kOUbxXrUYx4&t=2s

Close