ரஜினி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அபராதம்! விவேகம் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடு. அதை மீறி வேலைக்காரன் படத்திற்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தது 24 AM Studios நிறுவனம். தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த விளம்பரம் கடும் சலசலப்பை ஏற்படுத்த… சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அழைத்து விளக்கம் கேட்டது சங்கம். கடைசியில் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாம். (ஆரம்பத்தில் இரண்டு கோடி என்று நிர்ணயிக்கப்பட்ட தொகை, கடைசியில் 25 ஆயிரமாக குறைந்தது)

வேலைக்காரன் கொடுத்தால் நான் கொடுக்க மாட்டேனா என்று வேறு வேறு முதலாளிகள் இறங்க… விவேகம், 2.0, மெர்சல் படங்களுக்கும் ஒரு பக்க விளம்பரங்கள் வந்தது. இதையடுத்து நொந்தே போனது தயாரிப்பாளர் சங்கம். தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.

முறையான விளக்கம் வந்த பின் அவரவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் போல தெரிகிறது. இவ்வளவு நெருக்கடியிலும் ஒருவருக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளதாம். அந்த ஒருவர் மெர்சல் தயாரிப்பாளர். தமிழக பி.ஜே.பி யினர் புண்ணியத்தில் இந்தப்படம் 200 கோடி கலெக்ஷனை தொட்டிருந்தாலும், விநியோக முறை, ஜி.எஸ்.டி போன்ற விவகாரங்களால் தயாரிப்பாளருக்கு எப்படியும் சில கோடிகள் நஷ்டம் என்று கணக்கிடப்பட்டுள்ளதால், அவருக்கு மட்டும் அபராத தொகையை தள்ளுபடி செய்வது என்று முடிவெடுக்கப்பட்டதாம்.

படகுன்னு நினைச்சு திமிங்கலம் முதுகுல ஏறிட்டாரே நம்ம தயாரிப்பாளர்?!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
dheeran-athikaram-ondru
போலீஸ்னா பொறுக்கி இல்ல! கார்த்தி தரும் கவுரவம்!

Close