இந்தப்படத்தை ரஜினியும் கமலும் பார்க்கணும்! பிரபல ஹீரோ ஆசை! நடக்குமா?

80 களில் நடந்த கதையை மீண்டும் திரைக்கு கொண்டு வரும் படங்கள், பெரும்பாலும் ஹிட்டுதான்! கதைக்காக ஹிட்டா? ஹிட்டுக்காக கதையா? தெரியாது. ஆனால் 80 களில் நடந்த வலுவான ஒரு மேட்டரை வடிவான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார் ராமுசெல்லப்பா. இவர் பசங்க பாண்டிராஜின் உதவியாளர்.

80 களில் இவர் பிறந்திருப்பாரா என்பதே டவுட். இருந்தாலும் கதையை எழுதி, அதை இயக்குனர் சசிகுமாரிடம் காட்டி சந்தேகங்களை சரி செய்து கொண்டாராம்.

‘எங்கிட்ட மோதாதே’ என்ற தலைப்பில் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரப்போகும் இப்படத்தில் ரஜினி ரசிகராக சதுரங்க வேட்டை புகழ் நட்ராஜும், கமல் ரசிகராக மூடர் கூடம் ராஜாஜியும் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும், பார்வதி நாயரும் நடித்திருக்கிறார்கள்.

நாகர்கோவில் பகுதியில் கட் அவுட் பெயின்ட்டர்களான நட்ராஜுக்கும், ராஜாஜிக்கும் எப்பவும் முட்டல் மோதல். இவர் ரஜினியை மட்டும் வரைவார். அவர் கமல் கட் அவுட்டை மட்டும்தான் வரைவார். கட்சிகள் காட்சிகளும் வேறாக இருந்தாலும், ஜாயின்ட் பண்ணி வைக்கதான் ஒரு காதல் குறுக்கே வந்து கண் சிமிட்டுமே?  கமல் ரசிகரின்  தங்கை, ரஜினி ரசிகரை விரும்ப… அப்புறம் என்னாச்சு என்பது மீதி. நடுவில் இவ்விரு ரசிகர்களுமே ஒரு பொது எதிரிக்காக ஒன்று சேர்ந்து அவரை எதிர்ப்பது போல கதை நகர்வதுதான் ட்விஸ்ட்.

இந்தப்படத்தைதான் ரஜினிக்கும் கமலுக்கும் போட்டுக் காட்ட துடியாய் துடிக்கிறது படக்குழு. நாடு போகிற போக்கில் இவ்விருமே கை கோர்க்க வேண்டிய கண்டிஷனில்தான் இருக்கிறார்கள். படம் பார்த்த பின்பாவது ஆக்ஷனில் இறங்குகிறார்களா பார்ப்போம்!

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter