நள்ளிரவு அலட்டல் இல்லை! நாகரீகமான முறையில் அறிவிக்கப்பட்ட ரஜினி பட டைட்டில்!

இரண்டரை மணி நேரம் ரசிக்க ரசிக்க படம் எடுக்கிற பல இயக்குனர்கள், அவரவர் படத்திற்கு தலைப்பு வைக்க வேண்டும் என்றால் மட்டும், யானை கொட்டாவி விட்ட கதையாக ஆவென்று வாயை பிளக்கிறார்கள். படம் முடிந்து தியேட்டருக்கு வருகிற நாள் வரைக்கும் அஜீத் 90, விஜய் 124 என்று குறிப்பிட்டே விளம்பரம் கொடுக்கிறார்கள். தலைப்பை சொல்லிவிட்டால் ‘பெப்’ போய் விடுமாம். இந்த கொடுமையை கூட பொறுத்துக் கொள்ளலாம். அந்த தலைப்பையும் ஊர் அடங்கி, நரி ஊளையிடுகிற நள்ளிரவில்தான் வெளியிடுவார்கள்.

கொட்ட கொட்ட முழித்திருந்து தங்கள் தலைவனின் படத் தலைப்பை கேட்பதற்கு ஆர்முள்ள ரசிகர்கள், அந்த இரவு நேரத்தில் பட்டாசுகளை போட்டு, வயதானவர்களை வானுலகம் அனுப்பி வைப்பதெல்லாம் கொடூரத்திலும் கொடூரம். இந்த அலட்டல் புரட்டல்கள் எதுவுமில்லாமல், நாகரீகமான முறையில் ரஜினியின் 164 வது படத் தலைப்பை அறிவித்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.

‘காலா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் இந்த புதிய படத்திற்கு. சப் டைட்டிலாக கரிகாலன் என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கப்புறம் அந்த தலைப்பை வைத்துக் கொண்டு அது என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்று அலசுவதுதானே மீடியாவின் வேலை?

பொதுவாகவே கரிகால் சோழன் நீதிக்கும் நேர்மைக்கும் பேர் போனவன் என்கிறது வரலாறு. அவன் பாலகனாக இருந்த நேரத்திலேயே முதியவர் வேடம் போட்டு நீதி சொல்லியதாக ஒரு கதையும் உண்டு இங்கே. ஒருவேளை படத்தில் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கே சிறைவாசம் கொடுத்த நீதிபதி குன்ஹாவாக நடிக்கிறாரோ என்னவோ?

கொளுத்தி போடுவோம். பத்துனாலும் பத்தும்!

6 Comments

 1. தமிழ்ப்பாத்திமா says:

  காலனை வென்ற எங்கள் கரிகாலன் வருக வெல்க
  வாழ்க கலியுக தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

 2. மணிவண்ணன் says:

  காலா – சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வெற்றி மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்

 3. Balaji says:

  காலனை வென்ற எங்கள் காலா
  கபாலியின் வரலாற்று வசூல் சாதனையை முறியடிக்க போகும் எங்கள் கரிகாலன் வருக.

 4. தங்கம் says:

  சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அடுத்த மாபெரும் வெற்றி படைப்பு காலா .
  ஊழல் அரசியல் வியாதிகளுக்கு அவர் காலன். தமிழ் மக்களுக்கு அவர் தான் காவலன்

 5. Gajapathi says:

  In 2002 baba movie, thirudan rajini sang: ராஜியம்மா இல்லை இமயமா எங்கிவன் நாளை எங்கிவன் ! மன்னனா இல்லை மௌனியா யார் இவன் நாளை யார் இவன் ! ..now 2017 still playing same politics game to Remaining very few public.

  • Gajapathi says:

   வாருங்கய்யா சீக்கிரம் வாங்க, வந்து சீர் கெட்டு கிடக்கும் எங்கள் தமிழ்நாட்டையும் சாக்கடையாகி போன அரசியலையும் காப்பாற்றுங்கள்.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Sangli Bungli Team Angry With Bahubali.
Sangli Bungli Team Angry With Bahubali.

https://youtu.be/B0a7HUakDZY

Close