திரும்ப திரும்ப கொல்ற நீ! தலை கொடுக்க தயாராகும் தயாரிப்பாளர்கள்!

தேன் இனிப்புதான்… ஆனால் தேள் கொடுக்கு கடுப்புதானேய்யா? இந்த உண்மை தெரிஞ்சும் தெரியாமலும் காட்டிக் கொள்கிற கஷ்டம் இருக்கே… அதுதான் இன்றைய கோடம்பாக்கத்தின் ட்ரென்ட்! ட்ரென்டுன்னா சொல்றீங்க? இல்ல… இல்ல… கட்டாயம்!

சிறுத்தை சிவாவிடம் சிக்கிக் கொண்டு போட்ட பட்ஜெட்டை விட பெருமளவு கொட்டி, பெரும் நஷ்டத்துக்கு ஆளான நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். ஆனால் வேறு வழியில்லை. அதே இயக்குனருடன் அஜீத் இணையும் புதுப்படத்தை அதே சத்யஜோதிதான் தயாரிக்கிறது. ஏற்கனவே வெளிவந்த செய்திதான் இது. “இந்த முறையாவது கழுத்து வரைக்கும் ஜிப்பை இறுக்காம பார்த்துக்கோங்க” என்கிற நிபந்தனையின் பேரில்தான் இந்தப்படத்தை துவங்குகிறதாம் அந்த நிறுவனம்.

கிட்டதட்ட அதே போலொரு அசவுகர்யத்தில் சிக்கியிருக்கிறது தேனாண்டாள் பிலிம்ஸ். மெர்சல் படத்தை 100 கோடிக்குள் முடிப்பதாக கூறிய அட்லீ 135 கோடிக்கு கொண்டு வந்து நிறுத்தியது இன்டஸ்ட்ரி அறிந்த விஷயம்தான். அட்லீ மீது பெரும் குறைபட்டுக் கொண்ட அந்த நிறுவனம், இப்போது மறுபடியும் மூச்சை பிடித்துக் கொண்டு அவருடன் இணைகிறது. இந்த முறையும் விஜய்தான் ஹீரோ.

போன படத்தில் செஞ்ச மாதிரி மூச்சு முட்ட வச்சுராதீங்க என்கிற நிபந்தனையோடு இறங்கியிருக்கிறதாம் தேனான்டாள் பிலிம்ஸ்.

வடையோ, வடை கரண்டியோ… கொதிக்கிற எண்ணையில குளிக்கணும்ங்கறதுதானே விதி?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
kamal
தியேட்டர்களில் தேசிய கீதம்! கமல் எதிர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் சினிமாவை பார்ட் டைம் தொழிலாக்கி பல மாதங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அரசியல் முறை பயணமாக அவர் இந்தியாவை சுற்றி வருவது அன்றாட செய்திகளில் ஒன்றாகிவிட்டது....

Close