ஆர்.கே.நகரில் விஷால் போட்டி! இல்லயாம்… ஆமாவாம்… இல்லயில்ல… இருக்கு இருக்கு… ஊரையே குழப்பியடிக்கும் விஷால்!

தமிழ்சினிமாவின் குழப்பவாதிகள் லிஸ்ட் எடுத்தால் முதல் பெயர் சத்தியமாக ரஜினிக்குதான். அவர் செய்யும் வேடிக்கைகளை கடந்த 25 வருஷங்களுக்கும் மேலாக அனுபவித்து வரும் ஜனங்களுக்கு லேட்டஸ்ட் பொழுதுபோக்கு விஷால்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இவ்விரண்டிலும் நின்று வென்ற விஷாலுக்கு இப்போது நாக்கோரத்தில் எச்சில். ஆர்.கே.நகரையும் ஒரு கை பார்த்தால் என்ன என்பதுதான் அது. ஆனால் திடுதிப்பென வேட்பு மனு தாக்கல் செய்வதில் என்ன த்ரில் இருக்கிறது. முன் கூட்டியே தனது தொண்டர் படையை விட்டு, ஆர்.கே.நகரில் விஷால் போட்டி என்றொரு செய்தியை கசிய விட்டார்.

ஒவ்வொரு பத்திரிகை ஆபிசுக்கு வலுக்கட்டாயமாக போன் போனது. சோஷியல் மீடியாவில் அவரவர் அக்கவுன்டிலிருந்து விஷால் ஆர்.கே.நகரில் போட்டி என்றும் தமுக்கு அடிக்கப்பட்டது. கடைசியில் விஷால் நினைத்ததே நடந்தது. சண்டக்கோழி 2 படப்பிடிப்பில் இருந்தவருக்கு மாறி மாறி போன். சார்… ஆர்.கே.நகர்ல போட்டியிடுறீங்களாமே?

இந்த கேள்விக்கு ஆமாம்… என்று விஷால் பதில் சொல்வார் என்றுதானே உலகம் நினைக்கும்? ‘ஐயய்யோ… யாருங்க இப்படியெல்லாம் கிளப்பிவிடுறாங்க. சத்தியமா இல்ல’ என்றார் விஷால். இவ்வளவு வதந்திகளையும் நம்பித்தொலைத்த மீடியாவுக்கு உச்சி மண்டையில் கிர்ர்ர்… இல்ல சார். உங்க கூட இருக்கிறவங்களே சோஷியல் மீடியாவுல ஸ்டேட்டஸ் போட்ருக்காங்களே? இதற்கும் ஒரு பதில் வைத்திருந்தார் விஷால்.

அது அவங்க விருப்பமா இருக்கும். எனக்கு அப்படியெல்லாம் எண்ணமில்ல. வதந்தி என்றார் தீர்மானமாக. இதை நம்பிய பலரும், ஆர்.கே.நகரில் விஷால் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குள் என்ன மாய்மாலம் நடந்ததோ? இன்று காலை நிலவரப்படி விஷால் போட்டியிடுகிறார் என்று செய்திகள் பரவுகின்றன.

பிற்பகலில் தனது போட்டியை விஷால் உறுதி செய்யவிருப்பதாகவும் தகவல். திங்கட் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும் இருக்கிறாராம்.

விஷாலின் அரசியல் தெளிவுக்கு முன் ரஜினியெல்லாம் பிச்சை வாங்கணும்!

3 Comments

 1. Vallawan says:

  Vishal is not a Kamal Hassan. So, Vishal may not get more than couple of thousand votes. comedy pannraan pongo.

 2. senthil says:

  விஷாலின் ஒரே குறிக்கோள், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட ஒரு வொட்டாவது அதிகம் வாங்குவது. ரெண்டு பேருக்குமே டெபாசிட் கெடைக்காது. டபுள் காமெடிபா.

 3. Manivannan says:

  Our Beloved SUPER STAR RAJINI will become a next CHIEF MINISTER OF TAMILNADU.
  Mind It.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Kodiveeran Official Trailer
Kodiveeran Official Trailer

https://www.youtube.com/watch?v=8_bsE4_mPSU&feature=youtu.be

Close