அண்ணா நீங்க ஜெயிப்பீங்க கவலைப்படாதீங்க! போனில் ஆறுதல் கூறிய ஓவியா!

சொக்கத் தங்கமாகிவிட்டார் ஓவியா. “அண்ணாத்த… அவரு அப்பவே அப்படிதான். நீங்கதான் லேட்டு” என்று ஓவியா ஆர்மி வெங்காய வெடிகுண்டை வீசுவதற்குள் விவரத்துக்கு வந்துவிடுவோம். ஓவியா நடித்து ‘சீனு’ என்ற பெயரில் உருவாகி வந்த ஒரு படம், ‘ஓவியாவை விட்டா யாரு சீனி?’ என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. (நம்ம தலைவிக்கு எவ்ளோ பெரிய மனசு. அதுக்கு இவ்ளோ பெரிய டைட்டில் கூட இல்லேன்னா எப்படி?)

இப்படத்தை மதுரை செல்வம் தயாரிக்க, ராஜதுரை என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த காலத்தில் சினிமா இயக்குவதற்கு வாய்ப்பு கிடைப்பதே குதிரை கொம்பு. இதில், “எனக்கு சம்பள பாக்கி. 9 மணிக்கு டிபன் கொடுக்கல. 6 மணிக்கு டீ கொடுக்கல” என்று சொத்தை காரணங்களுக்காக கோபித்துக் கொண்டு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவையே புறக்கணித்தார் மிஸ்டர் (அ)ராஜ(க)துரை!

“முழு சம்பளத்தையும் செட்டில் பண்ணி, புல் அண்டு பைனல் செட்டில்மென்ட்டுன்னு எழுதி வாங்கி வச்சுருக்கேன். ஆனாலும், நான் சம்பளம் கொடுக்கலேன்னு டைரக்டர் கவுன்சில்ல கம்ளைன்ட் பண்ணியிருக்கார். இது அடுக்குமா?” என்று ஆதங்கப்பட்டார் மதுரை செல்வம். பெரும் நெருக்கடிக்கு இடையில் ‘ஓவியாவை விட்டா யாரு’ படத்தை ரிலீஸ் பண்ணும் மதுரை செல்வத்திற்கு நாலாபுறத்திலும் ஆதரவு பெருகி வருகிறது. ஏன்? ஓவியா ஹீரோயின் என்பதால்தான்.

இலங்கை இந்தியா சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும், இப்போது ஓவியாவை தலைவியாக கொண்டு இயங்கக் கூட தயாராக இருப்பதால், இப்படத்திற்கும் நல்ல ஆஃபர். இந்த நேரத்தில்தான் சில தினங்களுக்கு முன் செல்வத்திற்கு ஒரு போன் வந்ததாம். எதிர்முனையில் “அண்ணா…” என்று ஓவியா அழைக்க, குரல் உடைந்து அழுகிற நிலைக்கு ஆளாகிவிட்டார் செல்வம்.

“நான் இருக்கேண்ணா… கவலைப்படாதீங்க. எப்ப படம் ரிலீஸ்னு சொல்லுங்க. புரமோஷனுக்கு வர்றேன். நீங்க ஜெயிக்கணும். உங்க கஷ்டம் தீரணும்” என்றெல்லாம் ஓவியா பேச பேச, குழாய் உடைந்து குபு குபுவென கொட்டியே விட்டார் செல்வம். அவ்வளவு கண்ணீர்!

யாரோ ஒரு கேரளா பெண்ணுக்கு இருக்கிற அன்பும் கருணையும், தொன்னூறு கிலோ தமிழனாகிய உங்களுக்கு இல்லாம போச்சே ராசத்தொர?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Meyaadha Maan – Enna Naan Seiven Song with Lyrics Video
Meyaadha Maan – Enna Naan Seiven Song with Lyrics Video

https://www.youtube.com/watch?v=xzBm2R-BrNA&feature=youtu.be

Close