வரலட்சுமியை அதிமுக வுக்கு இழுக்க முயற்சி? ஆபரேஷன் விஷால் ஆரம்பம்!

எரிச்சல் முறைச்சல் புகைச்சல் பழிவாங்கல் தண்டித்தல் போன்ற துர் குண விஷயத்தில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை. ஜெ.வின் துணிச்சலாகவே கருதப்பட்ட இத்தகையை குணங்கள் எதுவும் அவரோடு புதையவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் சோகம். தற்போது ஆட்சியிலிருக்கும் மிஸ்டர் எடப்பாடி, அம்மாவை மிஞ்சிய தொண்டராகிவிட்டார். அதன் விளைவுதான் ஆர்.கே.நகரில் விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விஷயம்.

விஷாலுக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர்களில் ஒரு பெண்மணி கிட்டதட்ட கடத்தப்பட்டு சிறை வைக்காத நிலைமைதான். எப்படியோ அடக்குமுறைகளை கையாண்டு விஷாலின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள். இப்போது அடுத்த ஸ்டெப் அரங்கேற தொடங்கியிருக்கிறது.

விஷாலை நோகடிக்க வேண்டும் என்றால், அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லப்படும் வரலட்சுமியை அதிமுக வுக்குள் கொண்டு வந்தால்தான் சரியாக இருக்கும். அதற்கான காய்கள் வெகு கச்சிதமாக நடத்தப்பட்டு வருகிறதாம். விஷாலை காதலித்து வந்தாலும், அப்பா சரத்குமாரிடம் மிகுந்த அன்பும் வைத்திருக்கிறார் வரலட்சுமி. இந்த அதிமுக தூதுவிடு படலம் அப்பாவுக்கும் தெரியும் என்கிறார்கள்.

வெட்டுப்புலி ஆட்டத்தில் வரலட்சுமி சிக்கிக் கொண்டால், அவுட் ஆகப் போகிறவர் விஷால்தான்.

குடும்பத்துல குழப்பம் விளைவிக்கறதுல இப்படியொரு அற்ப சந்தோஷமா? முதல்ல ஆட்சிப்பணியை கவனிங்க ஐயா மாருங்களா….!

1 Comment

  1. Sunder says:

    It is really funny that Vishal saying Cheran is opposing Vishal for Publicity. Cheran may be doing nothing at this movement, but he proved with Pandavar Bhoomi, Porkalam, Autograph etc. On the other end, Vishal is a failure hero karuvaadu (telugu). Cheran should offer his onnukku for vishal free and with no publicity.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vishal-RK-Nagar
ஆர்.கே.நகரை அதிரவிட்ட விஷால்! மனு நிராகரிப்பும் ஏற்பும்!

ஒரே நாளில் பரபரப்பின் உச்சத்திற்கு போய்விட்டது ஆர்.கே.நகர். விஷாலின் வேட்பு மனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதும், தயாரிப்பாளர் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டத்தை சேரன் வாபஸ் வாங்கியதும் அடுத்தடுத்து...

Close