என்னது நித்தியானந்தா ஜெயிச்சுட்டாரா? ஓ மை காட்!

ஆன்மீக சூறாவளி நித்யானந்தாவை புல்டோசர் கொண்டு பெயர்த்தாலும், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கிற விதத்தில் அவர் ஒரு விடா முயற்சியானந்தா போலிருக்கிறது. பக்தி பலகாரம், பவர்புல் சவுக்காரம் என்றெல்லாம் அவரது ரசிகர்கள்(?) அவரை போற்றி வணங்கிக் கொண்டிருக்க, தனது சமஸ்தானத்தை நாடெங்கிலும் நிறுவ வேண்டும் என்கிற ஆசையில் வெறித்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் அவர்.

அவரோடு சேர்ந்து எல்லாவற்றுக்கும் மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டார்கள் அவரது சிஷ்ய கோடிகள். கடந்த பல வருஷங்களாகவே செல்லும் இடமெல்லாம் கல்லும் கட்டியும் இவர்களை எதிர்கொள்ள… “என்னடா துறவு வாழ்வு இது?” என்று அலுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? அங்குதான் நிற்கிறது நித்யானந்தாவின் நீடித்த உழைப்பு.

சரி மேட்டருக்கு வருவோம். புகழ்மிகு நித்யானந்தாவை தன் வாரிசாக அறிவித்துவிட்டு அடுத்த சில நாட்களிலேயே, ஐயய்யோ தப்பு பண்ணிட்டேன் என்று கன்னத்தில் போட்டுக் கொண்ட மதுரை ஆதினம், ‘மடத்தை விட்டு வெளியே போ’ என்று நித்யானந்தரை விரட்டிய கதையை நாடே அறியும். மடத்துக்கெல்லாம் அதிபதி அந்த கடவுள்தான் என்றாலும், இவர்கள் போய் நின்றது கோர்ட்டில். “நான்தான் மடாதிபதியின் அடுத்த வாரிசு. நியமித்தது நியமித்ததுதான். மாற்றி மாற்றி பேசினால் செல்லாது” என்றார் நித்தி.

பதிலுக்கு தனது விளக்கத்தை சொன்னார் மதுரை ஆதினம். இரு தரப்பையும் தீர விசாரித்த உயர்நீதிமன்றம் நாடே வியக்கிற அளவுக்கு ஒரு தீர்ப்பை எழுதியிருக்கிறது. அது இதுதான்….

1. ஸ்ரீசோமநாதஸ்வாமி கோவில் மற்றும் மடம். திருவாரூர்.
2. ஸ்ரீ அருணாசல ஞான தேசிகர் கோவில் மற்றும் மடம், வேதாரண்யம்.
3. ஸ்ரீபொ.கா.சாதுகள் மடம், வேதாரண்யம்.
4. ஸ்ரீ பால்சாமி மடம், தஞ்சாவூர்.
5. ஸ்ரீசங்கர ஸ்வாமி மடம், தஞ்சாவூர்.

மேலே குறிப்பிட்டிருக்கும் இந்த ஐந்து மடங்களும் கோவில்களும் நித்யானந்தாவின் கண்ட்ரோலுக்கு செல்லும். அவரே இந்த ஆதினங்களின் மடாதிபதியாக கருதப்படுவார்.

இந்த ஆன்மீக எடப்பாடி, பன்னீர்செல்வங்களுக்கு மக்கள் என்ன முடிவு வைத்திருக்கிறார்களோ?

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
VELAYILLA VIVASAYI006
VELAYILLA VIVASAYI MOVIE STILLS

Close