அதிமுக வில் நயன்தாரா! அறிகுறி ஆச்சயர்யக்குறி கேள்விக்குறி

‘வாட்டர் பாக்கெட், குவார்ட்டல் பாட்டில், கோழி பிரியாணி என்று குமுற குமுற கவனித்தாலும், கூட்டம் சேர மாட்டேங்குதேப்பா…’ என்று அரசியல்வாதிகளையே அல்லாட விடும் திருவாளர் பொதுஜனம், அதுவே நடிகைகள் என்றால், நார் நார் நாராக கிழிந்தாலும் சரி. கிட்ட சென்று பார்த்துவிட வேண்டும் என்று கூட்டம் கூட்டமாய் குவிவது கோலிவுட்டின் ‘லாப’க்கேடு!

அதிலும் சமீபத்தில் ஒரு ஊருக்கு நகைக்கடை திறக்கப் போன நயன்தாராவுக்கு குவிந்த கூட்டம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது தருணம். ஒருவரையொருவர் நசுக்கித் தள்ளியதோடு நிற்காமல் வீட்டிலிருக்கிற அண்டா குண்டாவெல்லாம் கூட நசுங்கிப் போகிற அளவுக்கு குழுமினார்கள். முண்டியடித்தார்கள். அந்தக் கூட்டத்தை பார்த்த நாளிலிருந்தே தேசியக் கட்சிகளும் சரி… திராவிடக் கட்சிகளும் சரி… நயன்தாரா வந்தால் நல்லாயிருக்குமே என்று யோசிக்க துவங்கியிருக்கின்றன. அவருக்கா தெரியாது? பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் நழுவி வந்தார்.

அப்படிப்பட்ட நயன்தாராவே அதிமுக கொடிகள் சூழ, அம்மாவின் பெயர் பொறித்த ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்றார் என்றால்? நயன்தாராவின் மனசு அதிமுக பக்கம் சாய்கிறது என்றுதானே அர்த்தம்?

யெஸ்… தனது படம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கோ, நிகழ்ச்சிகளுக்கோ கூட வருவதை தவிர்த்து வரும் நயன்தாரா, சென்னையில் நடைபெற்ற அம்மா ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன் என்ற அமைப்பு நடத்திய விழாவில் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அம்மா அவார்ட்ஸ் என்று முதல்வரின் பெயரில் வழங்கப்பட்ட கேடயங்களை புன் சிரிப்போடு நயன்தாரா வழங்க, புதுவித மலர்ச்சியோடு அதை பெற்றுக் கொண்டார்கள் வீரர் வீராங்கனைகள்.

பின்குறிப்பு- இந்த விழாவில் கலந்து கொள்ள நயா பைசா வாங்கவில்லையாம் நயன்!

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Dhanush Rajini Kabali2
கபாலி2 நமது செய்தியை உறுதிபடுத்தினார் தனுஷ்!

கபாலி பார்ட்2 படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்கிற செய்தியை நாட்டுக்கு முதன் முதலில் சொன்னது நமது newtamilcinema.com. நமது அறிவிப்பு வெளிவந்த தினத்தன்று இரவு...

Close