பிற நடிகைகளுக்கு நயன்தாராதான் ரோல் மாடல்! புகழும் சிவகார்த்திகேயன்

வேலைக்காரன் படம், தமிழகத்தில் ரிலீஸ் ஆகிற அதே நாளில் கேரளாவிலும் வெளியாகிறது. அதற்கு வசதியாக படத்தின் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் பஹத்பாசில். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக கேரளா சென்றிருந்த சிவகார்த்திகேயன் அங்கு பேசியது என்ன?

ஃபஹத் ஃபாசிலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு சர்வதேச நடிகர் என்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கூறினேன். பிற மொழி படங்களில் நடிப்பது கஷ்டம் என்று நினைத்தேன். ஆனால் ஃபஹத் ஃபாசிலுக்கு அப்படி இல்லை. படத்தில் 8, 9 பக்க வசனங்கள் எல்லாம் இருந்தது. அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை.

தமிழில் ஃபஹதை பார்க்காதவர்களுக்கு இது ரொம்ப ரொம்ப பிடிக்கும். நடிப்பு ஃபஹதோடு நான் எப்படி நடிக்கப் போகிறேன் என்பது தான் எனக்கு இருந்த சவாலே. ஃபஹத் எல்லா மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அது நிச்சயம் நடக்கும். விருப்பு ரசிகர்களை யூஸ் பண்ணிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ரசிகர் மன்றம் தேவை தான். நேரம் கிடைக்கும்போது அவர்களை சந்தித்து வருகிறேன். அவர்களால் என்ன பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று கண்டுபிடிப்பது எளிது.

நயன்தாரா தென்னிந்தியாவில் ஒரு டாப் ஸ்டார். அவரின் அர்ப்பணிப்பு, சின்சியாரிட்டியால் தான் அவர் இந்த நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இனிமேல் பெண்கள் நடிக்க வரும்போது நயன்தாராவை ரோல்மாடலாக வைத்து தான் வருவார்கள். நயன்தாராவுடன் நடித்ததில் மகிழ்ச்சி. மலையாள படத்தில் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் இயக்குனர்கள் என்னை வைத்து படம் எடுப்பார்களா என தெரியவில்லை. எனக்கு மலையாளம் சரியாகத் தெரியாது. வித்தியாசம் நான் நடித்த படங்களிலேயே வேலைக்காரன் வித்தியாசமான படம்.

வேலைக்காரர்களை பற்றிய படம் இது. மம்மூட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், ப்ரித்விராஜ், நிவின், ஃபஹத் ஃபாசில் ஆகியோர் எனக்கு பிடித்த மலையாள நடிகர்கள். ஃபஹத் போன்று நான் வேறு எந்த சக நடிகருடனும் இவ்வளவு சிரித்துப் பேசி வாழ்க்கை பற்றி பேசியது இல்லை. தனி ஒருவன் படம் பார்த்த உடன் மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். தனி ஒருவன் மாதிரி படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வந்தது. மோகன் ராஜாவின் கதையால் தான் நயன்தாரா, ஃபஹத் வேலைக்காரன் படத்தில் நடிக்க வந்தனர்.

நானும், அனிருத்தும் லவ்வர்ஸ் இல்ல, பிரதர்ஸ். என் படத்தில் அனிருத் பாடல்கள் ஹிட்டாவதற்கு காரணம் கம்போசிங்கின்போது நான் அவருடன் இருக்க மாட்டேன். எந்த டிமான்டும் வைக்க மாட்டேன் என்றார் சிவகார்த்திகேயன்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vadivelu-finance
வடிவேலுவை கொத்தும் காகங்கள்!

‘முன் வைத்த கால் என் காலா இருக்கணும். அது அடுத்தவனின் மூக்கு மேல கம்பீரமா நடக்கணும்!’ இதுதான் வடிவேலுவின் சமீபகால சர்வாதிகாரமாக இருக்கிறது. இனி இவரை டி.வியில்...

Close