புலம் பெயர்ந்த இலங்கைப் பெண்! நயன்தாரா நழுவியது ஏன்?

இலங்கை தமிழ் உறவுகள் விஷயத்தில் ‘எப்போதும் கை கொடுப்போம்’ நிலையிலேயே இருக்கிறது தமிழ் சினிமா உணர்வாளர்கள் கூட்டம்! ஆனால் இலங்கையில் நடக்கும் கொடுமைகள் குறித்தோ, அல்லது ஈழம் சார்ந்த வேறு ஏதாவது விஷயம் பற்றியோ படம் எடுத்தால், வெளியே வந்தால்தான் விமோசனம் என்கிற நிலைமையில்தான் இருக்கிறது சென்சார் மனநிலை!

இந்த லட்சணத்தில் இலங்கை பெண்ணொருத்தியின் வெளிநாடு வாழ் கஷ்டத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அனுமன் ஏழு கடல் பறந்து யாழ்பாணத்தில் இறங்கி கொய்யாப்பழம் சாப்பிட்ட கதையாகதான் முடியும் போலிருக்கிறது.

மிஷ்கின் அசிஸ்டென்ட் ஒருவர் ஈராஸ் நிறுவனத்திடம் இப்படியொரு கதையை சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டார். முழுக்க முழுக்க கதாநாயகியை சுற்றிவருகிற கதை. நயன்தாராவும் கதையே கேட்டுவிட்டு ஆஹா ஓஹோ என்று பாராட்டிவிட்டு, தேவைப்படுகிற தேதிகளை ஒதுக்கியும் கொடுத்துவிட்டார். இந்த நிலையில்தான் நயன்தாராவுக்கு சில அச்சுறுத்தல்கள் வந்தனவாம்.

மார்க்கெட்ல நல்ல பொசிஷன்ல இருக்கிற நேரத்தில் ஏன் இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கேரக்டர்களில் நீங்க நடிச்சு டென்ஷனை ஏத்திக்கணும். பேசாம விட்ருங்களேன் என்று யாரோ தூபம் போட…. துணிச்சல் கேர்ள் நயன்தாராவே, நடு நடுங்கிப் போனாராம்.

கட்ட கடைசியாக கழுத்தறுத்துவிட்டதால் படமே டிராப்! இலங்கை பெண்கள் என்றால் சினிமாவில் கூட சிக்கல்தான் போலிருக்கு!

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter