அதாண்டா நயன்தாரா கட்ஸ்….

எல்லா சங்கங்களும் கையில் வைத்திருக்கிற ஆயுதம் எதுவென்றால் ரெட்! ஒத்துழைப்பு தரலேன்னா ஒரு வேலையும் தர மாட்டோம் என்கிற இந்த ஒரு ஆயுதத்தை வைத்துக் கொண்டு மத யானைகளை கூட, மந்திகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடங்கி, அஞ்சி, சொன்ன கருத்தை சொன்ன வேகத்தில் வாபஸ் வாங்கிக் கொண்டவர்கள்தான் அதிகம். சொல்றதை கேட்கிறேன் என்று சரண்டர் ஆனவர்கள் அதைவிட அதிகம்.

ஆனால் நயன்தாராவிடம் அதெல்லாம் செல்லுபடியாகலையே என்று அதிர்ந்து போயிருக்கிறது தெலுங்கு படவுலகம். பிரமோஷன்களுக்கு இவர் வருவதில்லை அல்லவா? அதனால் இவரை யாரும் தன் படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று ரெட் போட்டுவிட்டது தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதை தொடர்ந்து நயன்தாராவை அம்போவென விட்டுவிட்டார்கள். அதற்காக அழுது புரண்டு சங்கத்தில் வந்து நிற்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி. ஒரு ரீயாக்ஷனும் காட்டவில்லையாம் நயன்தாரா.

இப்படியொரு அலட்சியத்தை எதிர்பார்க்காத தெலுங்கு படவுலகம், அவரை வேறு என்னதான் செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. ஆனால் தெலுங்கில் செய்யாமல் விட்டதை தமிழில் செய்ய ஆரம்பித்துவிட்டார் அவர். படங்களில் நடிப்பதற்கு கைநீட்டி அட்வான்ஸ் வாங்கும் போதே, நான் பிரமோஷன்களுக்கு வர மாட்டேன். இது தொடர்பாக எந்த சங்கத்திலும் புகார் செய்யக் கூடாது. அதற்கெல்லாம் சம்மதித்து எழுதி கொடுத்தால்தான் நடிப்பேன் என்கிறாராம். மறக்காமல் இந்த கண்டிஷனை தனது அக்ரிமென்ட்டிலும் சேர்க்க சொல்கிறாராம்.

கால்ஷீட் கிடைச்சா போதும் என்று அவர் சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் இங்கே.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
dhanush-sivakarthikeyan
‘கிடைச்சா டாணா இல்லேன்னா வேணா… ’ தனுஷ் அதிர்ச்சி

வேந்தர் மூவிஸ் ஏராளமான படங்களை வாங்கி வெளியிடுகிறது. அந்த நம்பிக்கையில் தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மொய்த்து வருகிறார்கள். இப்படி யாராவது படம் வெளியிட...

Close