tamilrockers நீ இன்னும் ஒரு மாசத்துல? மிஷ்கின் சூசக எச்சரிக்கை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விட படு சூடாகிவிட்டது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல். விஷால் அணிக்கும், தயாரிப்பாளர் தாணு பின்னாலிருந்து இயக்கும் அணிக்கும்தான் கடும் போட்டி! இவர்கள் தவிர, தயாரிப்பாளர் கேயார் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிலிருக்கிறது.

ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இந்த அணிகள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை விளக்குவதற்காக மீட்டிங் போடுகிறார்கள் அல்லவா? அங்கெல்லாம் மறக்காமல் பேசப்படுகிற விஷயம் திருட்டு விசிடி. ஒரு சினிமா மேடையில் தமிழ்ராக்கர்ஸ் தே… மவனே. என்று பொங்கிய ஞானவேல்ராஜாவின் பேச்சு, இணைய உலகத்தில் இப்போதும் பிரசித்தம். கிட்டதட்ட அப்படியொரு பேச்சாக இருந்தது மிஷ்கின் பேச்சு.

விஷால் அணி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மிஷ்கின், திருட்டு விசிடி பற்றி மிக வருத்தத்தோடும் வேதனையோடும் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். “தம்பி… தமிழ்ராக்கர்ஸ். நீ எங்கள் உழைப்பை சுரண்டுவதோடு மட்டுமில்லாம ‘நாளைக்கு காலையில் பதினொரு மணிக்கு இந்தப்படத்தை வெளியிடுவேன். முடிஞ்சா தடுத்து பாரு’ என்று சவால் விடுறே. நீ இப்படி செய்வது எப்படியிருக்கு தெரியுமா? என் கண் முன்னே என் மகளை நீ நிர்வாணமாக்கி பார்க்கிற மாதிரியிருக்கு. நிச்சயம் உனக்கு தண்டனை உண்டு. நாங்க ஜெயிச்சு வந்த ஒரே மாசத்துல நீ எங்கயிருந்தாலும் கைது செய்யப்படுவாய். இதை எச்சரிக்கையாக சொல்ல ஆசைப்படுறேன்….” என்றார்.

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தமிழ்சினிமாவை ஆட்டிப்படைக்கும் அந்த தம்பிக்கு இதெல்லாம் கேட்டிருக்குமா? கேட்டாலும் அச்சப்படுவானா? புரியலயே சாமீய்…

2 Comments

  1. Mani says:

    You can not control tamil rockers for atleast another 20 years. They will keep coming back with new URLs and different servers etc. They might be sitting in one country and hosting from different country. This is beyond the brain/reach of Vishal and Miskin. Keep dreaming

  2. Sampath says:

    மிஷ்கின் ஸ்டைல்ல சொன்னா மிஷ்கின்னால தமிழ் ராக்கர்ஸ் மயிரை கூட புடுங்க முடியாது.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
adhi methavigal
‘அதி மேதாவிகள்’ திரைப்படம் அரியர்ஸ் மாணவர்களுக்கு ஓர் சமர்ப்பணம்

Close