விவேகத்தை விட மெர்சல் வியாபாரம் 30 சதவீதம் உயர்வா?

மண்டையில் தேன் மழை பொழியும் என்று காத்திருந்தவர்களுக்கு, ரெண்டே ரெண்டு துளி தூரலோடு நின்று விட்டது விவேகம். வாங்கிய விநியோகஸ்ர்களில் பலர் போட்ட காசை எடுக்கணுமே என்ற பிடிவாதத்தால் படத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் மட்டும் 54.5 கோடி விற்பனையான விவேகம், சுமார் 30 சதவீத நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று புள்ளிவிபரங்கள் கூறி வரும் நிலையில், விவேகத்தை விட முப்பது சதவீதம் அதிகம் வியாபாரம் செய்து புதிய புரட்சியை படைத்திருக்கிறது மெர்சல்.

தமிழகத்தில் மட்டுமல்ல… மெர்சல் படத்தின் எல்லா ரைட்சும், விவேகத்தை விட முப்பது சதவீதம் அதிகம் வைத்தே விற்கப்பட்டுள்ளதாம்.

விஜய்யை பொருத்தவரை அவர் எப்போதும் விநியோகஸ்தர்களுடனும் தியேட்டர்காரர்களுடனும் நேரடி தொடர்பில் இருப்பவர். இதன் காரணமாக முன்னே பின்னே போனாலும், விஜய்யை நேரில் சந்தித்து முறையிடலாம் என்கிற நம்பிக்கையும் இருப்பதால், இந்த முப்பது சதவீத எக்ஸ்ட்ரா ‘பில்’லை, எவ்வித திடுக்கிடலும் இன்றி எதிர்கொள்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

எது எப்படியோ? ‘அஜீத்தை முந்தினார் விஜய்’ என்பதுதான் கல்வெட்டின் கடைசி கிறுக்கல்!

3 Comments

  1. Kumaran says:

    Kodutha kasukku mela koovardhuna idhudhana Boss :-)

  2. Nit says:

    Then you mean 70.85 Cr for TN. This guy is lost as shit.

  3. haran says:

    VIJAY KU PRO vela pakarthuku ungaluku eduthu tania website.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vijay Tv In Trouble Because Of Kamal.
No Politicians Is Ready To Mess With KamalHassan.

https://youtu.be/f-mGiDgpER0

Close