சீன்லேயே இல்ல! ஆனால் சி எம்மாம்? அஜீத்தின் வயிறெரிச்சலை கொட்டிக் கொள்ளும் ஊடகங்கள்!

‘மாட்டுக் கண்ணுல எம்.ஜி.ஆர் தெரிகிறார்’ என்று எம்.ஜி.ஆர் இறந்த சிறிது காலத்தில் ஒரு மாட்டை வைத்து, பால் பண்ணையல்ல…, பணப் பண்ணையே வைத்தார் ஒரு விவசாயி. நிஜத்தில் அந்த கண்ணில் எம்ஜிஆர் வடிவம் போல புரை கட்டி இருந்தது. ஊர் ஊராக அழைத்துச் செல்லப்பட்ட அந்த மாடு, இப்போது சொர்கத்தில் எம்.ஜி.ஆருக்கு பால் கறக்க உதவினாலும் ஆச்சர்யமில்லை. போகட்டும்… அவ்வளவு பெரிய காமெடியையே நம்பிய அசமஞ்சங்கள்தான் நம்ம ஜனங்கள். இப்போது அப்படியொரு பொய்க்கு சற்றும் சளைக்காத இன்னொரு பொய்யை அவிழ்த்துவிட ஆரம்பித்துவிட்டன ஊடகங்கள்.

நல்லவேளை… இந்த காமெடியை அரங்கேற்றுவது தமிழ்நாட்டு ஊடகங்கள் அல்ல. மலையாளம், தெலுங்கு, கன்னட ஊடகங்கள்தான்.

ஜெயலலிதா தெய்வமாகிவிட்ட பின், அவர் இடத்தை நிரப்பப் போவது யார்? இப்பவே நாற்காலி சண்டைகள் ஆரம்பித்துவிட்டதாக ஊடகங்கள் முணுமுணுத்து வரும் நிலையில், முதல்வர் போட்டியில் நால்வர் இருப்பதாக கூறுகிறது அந்த ஊடகங்கள். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, இவர்களுக்கெல்லாம் டாப்பில் அஜீத். ஜெ. உயிரோடு இருக்கும்போது, எனக்குப் பிறகு கட்சியை நீதான்ப்பா வழி நடத்தணும் என்று அஜீத்திடம் கூறினாராம் ஜெ. இப்படியெல்லாம் கதை கட்டும் அந்த ஊடகங்களின் ஜெராக்ஸ், தமிழ்நாட்டில் தாறுமாறாக உலவி வருவதுதான் ஐயோ… ஐயய்யோ!

சீன்லேயே இல்லாத ஒருவர் சி.எம் ?! இந்த தமாஷ் அஜீத் காதுக்கே போய், அவர் லேசாக சிரித்தபடி அடுத்த வேலையை பார்க்கப் போனதுதான் தமாஷ்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vadivelu Feeling For Amma.
Vadivelu Feeling For Amma.

https://youtu.be/6dYny1XkQT8  

Close