நாடு விடிஞ்சாப்லதான்! மலேசியாவிலிருந்து ஒரு கட்டை?

“இருக்கறதுகளே துணிய கிழிச்சிகிட்டு அலையுதுங்க… இதுல மலேசியாவுலேர்ந்து வேற இறக்குமதி பண்ணிட்டீங்களா? நாடு விடிஞ்சாப்லதான்!” என்று அரை கண்ணை மூடிக் கொண்டே கீழ்வரும் ஸ்டில்களை ரசிக்கும் சமூகப் போராளிகள், ‘சாய்தாடு’ படம் வரும் தியேட்டர்களில் முன் வரிசையில் அமர்ந்து தரிசனம் செய்யாமலிருந்தால் ஆச்சர்யம். ஏனென்றால் ‘கட்டை’ அப்படி!

நமீதாவை நாடு கடத்துவேன், தமன்னாவின் மார்க்கெட்டை தாக்குவேன், அனுஷ்காவின் அடையாளத்தில் ஆணியடிப்பேன் என்றெல்லாம் அரைகுறை தமிழில் சவால் விட்டபடி ஏர் ஏசியா பிளைட்டில் வந்திறங்கியிருக்கிறார் மனிஷா கவுரு! (மனிஷா அவுரு என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் அடித்தால் கம்பெனி பொறுப்பல்ல) கஸாலி இயக்கி வரும் ‘சாய்ந்தாடு’ படத்தில் மிக முக்கியமான நிமிஷத்தில் திரையில் வந்து முகத்தில் 20 சதவீதத்தையும், மிச்சத்தில் 60 சதவீதத்தையும் காட்டி அரங்கத்தை சூடாக்கப் போகிறார் இந்த மனிஷா.

தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். இவர் இந்தியா மலேசியா கூட்டுத் தயாரிப்பு என்கிறார் கஸாலி. படத்தில் மிக மோசமான கிளப் ஸாங் ஒன்றில் மனிஷாவை சிப் சிப்பாக ரசிகர்கள் விழுங்கலாம் என்பது முதல் தகவல் அறிக்கை. அதற்கப்புறம் படத்தின் திருப்புமுனையான ஒரு காட்சியில் பிழிய பிழிய நடித்தும் இருக்கிறாராம்.

“எப்ப தமிழ் படத்தில் நடிக்க ஆரம்பித்தேனோ, அப்போதிலிருந்தே தமிழ் படங்களை பற்றியும், தமிழ் நாட்டு செய்திகளையும் நிறைய படிக்க ஆரம்பித்துவிட்டேன். அனிருத்து அனிருத்துன்னு ஒருவர் ஸ்டில் பார்த்தேன். பாட்டும் கேட்டேன். அவரு கூடதான் ஜோடி போடணும்” என்கிறார் மனிஷா.

தம்பி கனடா ஏர்போர்ட்லதான் ஒரு மாசமா தவிச்சுகிட்டு உட்கார்ந்துருக்கு. உங்க வண்டிய அங்க வுடுங்கம்மா! வரலாறு நின்னு பேசுனம்னா நீங்க பறந்து போயாவது மீட் பண்ணுங்க. வேற வழியே இல்ல…

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
soundarraja
சீனு ராமசாமியே சொல்லிட்டாரு… அப்புறம் என்னங்க?

‘சௌந்தர்ராஜா பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை’ என்றெல்லாம் இந்த செய்தியை ஆரம்பிக்க முடியாது. அறிமுகம் தேவைப்படுகிற நடிகர்தான். ஆனால் அது இன்னும் ஆறேழு மாதங்களுக்கு பின் மாறிவிடும்!...

Close